Sunday 22 July 2012

வாராந்தர பயான் Ceramah Mingguan


மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 21.07.12 அன்று கோலாலம்பூர் மர்கசில் வாராந்தர பயான் நடைபெற்றது.நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி-பதில் நடந்தது..இதில் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
(Ceramah mingguan yang telah diadakan oleh MALAYSIA THOWHEED JAMATH, berlangsung di Markas KL pada 21.07.2012 mendapat sambutan yang menggalakkan. Ceramah ini diakhiri dengan sesi soal jawap.)

Wednesday 18 July 2012

திருக்குர்ஆன் கேள்வி பதில் போட்டி

திருக்குர்ஆன் கேள்வி பதில் போட்டி
இன்ஷா அல்லாஹ் வரும் ரமலான் மாதத்தில் இஸ்லாமிய ஆண்களும்,பெண்களும் குர்ஆன் ஓதுவதை ஆர்வப்படுத்த மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேள்விபதில் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் விபரங்களும் விதிமுறைகளும் பின்வருமாறு:
1.தினமும் காலை ஆண்களுக்கும்,பெண்களுக்கும் தனித்தனியாக ஒரு கேள்வி கேட்கப்படும். அதற்கான பதிலை அடுத்த நாள் காலை 8.00  மணிக்குள் sms மூலம் அனுப்ப வேண்டும்.அதற்கு மேல் அனுப்பினால் ஏற்கப்படாது.
2.பதில்கள் தெளிவாக குர்ஆன் வசன ஆதாரத்துடன் இருக்கவேண்டும்.அத்தியாயம், வசன எண் தவறாக இருக்கக்கூடாது.
3.ஒரு கேள்விக்கு இரண்டு,மூன்று பதில்கள் அனுப்பக்கூடாது.
4.மொத்தம் 20 கேள்விகள் கேட்கப்படும்.
5. sms அனுப்பவேண்டிய நம்பர்: 0107812742
6. சரியான பதில் அனுப்புபவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.
7.அல்லாஹ்வை அஞ்சி வேறு யாரிடமும் கேட்கக்கூடாது.
8.குர்ஆனை படிக்க வேண்டும் என்பதற்காக கேள்வி-பதில் போட்டி வைப்பதால் இணையத்தளத்தில் அல்லது மற்ற வழிகளில் தேடக்கூடாது.
9.மலேசியாவில் உள்ளவர்களுக்காக நடத்தப்படுகிறது.
10.கலந்து கொள்பவர் உடனடியாக தங்கள் பெயரை sms அனுப்பவும். 

Syarat pertandingan:
1. Soalan yang berasingan bagi Lelaki dan Wanita akan di SMS setiap pagi. Jawapan hendaklah di SMS sebelum 8.00 pagi pada hari esoknya. SMS lewat tidak akan dilayan.
2. Jawapan hendaklah tepat dan terang dengan merujuk bukti dalam Al Quran. Nombor Surah dan Ayat hendaklah tepat.
3. Hanya 1 jawapan untuk 1 soalan. 2 atau 3 jawapan tidak akan dilayan.
4. Jumlah soalan adalah 20.
5. SMS jawapan ke nombor: 010 7812742.
6. Peserta akan menerima hadiah bagi jawapan yang tepat.
7. Dilarang berbincang, takuti Allah.
8. Kuiz ini bertujuan untuk menggalakkan kita mengaji Al Quran. Oleh itu, dilarang merujuk di Internet atau sumber-sumber yang lain.
9. Hanya untuk peserta yang berada di Malaysia.
10. Jika berminat sila SMS Nama anda ke nombor diatas.

மாணவர்களுக்கான வாராந்தர வகுப்பு Kelas mingguan 'Asas Islam' bagi kanak-kanak

 மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 15.07.12 அன்று கோலாலம்பூர் மர்கசில் வாராந்தர மாணவர்களுக்கான இஸ்லாமிய அடிப்படை வகுப்பு நடைபெற்றது இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
Kelas mingguan 'Asas Islam' bagi kanak-kanak yang dikendalikan oleh MALAYSIA THOWHEED JAMATH telah berlangsung di Markas KL pada 15.07.2012. Ianya dapat memberi manfaat serta mendapat sambutan yang menggalakkan.


Tuesday 17 July 2012

வாராந்தர பயான் Ceramah Mingguan


மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 14.07.12 அன்று கோலாலம்பூர் மர்கசில் வாராந்தர பயான் நடைபெற்றது.நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி-பதில் நடந்தது..இதில் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
(Ceramah mingguan yang telah diadakan oleh MALAYSIA THOWHEED JAMATH, berlangsung di Markas KL pada 14.07.2012 mendapat sambutan yang menggalakkan. Ceramah ini diakhiri dengan sesi soal jawap.)

Sunday 15 July 2012

DOA HARIAN


بسم الله الر حمن الر حيم
DOA HARIAN
Doa Sebelum Tidur
اَللّهُمَّ بِاسْمِكَ أَمُوْتُ وَأَحْيَا
Doa Bangun Tidur
اَلْحَمْدُ للهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُوْرُ
Doa Masuk Tandas
اَللّهُمَّ إِنّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِث
Doa Keluar Tandas
غُفْرَانَكَ
Doa Besurai
 سُبْحَانَكَ اللّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُأَنْ لاَ إِلهَ إِلاَّ أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوْبُ إِلَيْكَ
Doa Sebelum Makan
بِسْمِ اللهِ
Doa apabila lupa baca bismillah Semasa Makan
بِسْمِ اللهِ فِيْ أَوَّلِهِ وَآخِرِهِ
Doa Selepas Makan
 اَلْحَمْدُ للهِ كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيْهِ غَيْرَ مَكْفِيّ وَلاَ مُوَدَّعٍ وَلاَ مُسْتَغْنًى عَنْهُ رَبَّنَا
Doa Perlindungan Syaitan
أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ
Doa Masuk Masjid
اَللّهُمَّ افْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمَتِكَ
Doa Keluar Masjid
اَللّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ
Doa Bersin
اَلْحَمْدُ للهِ
Doa Apabila Dengar Orang Bersin
يَرْحَمُكَ اللهُ
Doa Membalas Yarhamukallah
يَهْدِيْكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ
Doa Naik Kenderaan
سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ (13) وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ (14)43
Doa Untuk Dunia dan Akhirat
اَللّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
Doa Untuk Ibubapa
رَبّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِيْ صَغِيْرًا (24)17
Doa Ilmu
رَبِّ زِدْنِي عِلْمًا (114) 20
Doa Harian
لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ
Doa Menetapkan Hati Dalam Iman
يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ
Doa Petunjuk dan Taqwa
اَللّهُمَّ إِنّيْ أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى
Doa Menemui Orang Sakit
لاَ بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللهُ

Friday 13 July 2012

மாண்புமிகு குர்ஆனை மனனம் செய்வோம்




மாண்புமிகு குர்ஆனை மனனம் செய்வோம்
புனித மிக்க ரமளான் மாதம் விரைவில் பூக்கவிருக்கின்றது. புண்ணியம் பொங்கவிருக்கின்றது.அல்குர்ஆன் வருகையளித்ததை முன்னிட்டே இம்மாதத்தின் கண்ணியமும் கவுரமும் அமைகின்றது.அம்மாதம் முழுமைக்கும் அல்குர்ஆனே ஆட்சி செய்கின்றது.
உலகெங்கிலும் உள்ள பள்ளிவாசல்களில் உன்னதக் குர்ஆன் இரவுத் தொழுகைகளில் அதிகம்ஓதப்படுகின்றது. மக்கா, மதீனாவில் அதன் அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் சொல்லத் தேவையேஇல்லை.
அதில் மிகக் குறிப்பாக மக்கா, இந்த ரமளான் மாதத்தில் அகமும் புறமும் ஒளிமயமாகக்காட்சியளிக்கின்றது. அல்குர்ஆன் ஒலிமயமாக உலக மக்களை உள்ளிழுத்து ஒருங்கிணைக்கின்றது.
உலகத்தின் ஒய்யார அரங்குகளில் மக்கள் ஒன்று கூடுகின்றார்கள் என்றால், ஒன்று கருவிவாத்தியங்கள் அலறுகின்ற மெல்லிசை, துள்ளிசைக் கச்சேரிகள், அல்லது கவர்ச்சிக் கன்னியர்ஆடுகின்ற நடனங்கள் இருக்கும். இவை தவிர வேறு எதுவும் காரணம் இல்லை.ஆனால் இவை எதுவுமே இல்லாமல் ரமளான் மாதத்தில், ஹஜ் காலத்தையொத்த அல்லது அதைவிஞ்சுகின்ற அளவிற்கு மக்கள் கூடவும் குழுமவும் காரணம் என்ன?
ஒலி அலைகளால் பரவி உள்ளங்களைக் கொள்ளை கொள்கின்ற குர்ஆனின் ஓசை நயம் தான்.இசைக்கு இல்லாத குர்ஆனின் ஈர்ப்பு விசை தான். இந்த ஒலி நயத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அற்புதமாகக் குறிப்பிடுகின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் (நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி) "அபூ மூசா! (இறைத்தூதர்)தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த (சங்கீதம் போன்ற) இனிய குரல் உங்களுக்கும்வழங்கப்பட்டுள்ளது'' என என்னிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூசா (ரலி)
நூல்: புகாரி 5048
இசையுடன் பின்னாத ராகங்கள், மக்களிடம் ஒரு சில மணி நேரங்கள் தாண்டினால் எடுபடுவதில்லை.மக்கள் அதை ஏறிட்டுக் கூடப் பார்ப்பதில்லை. அந்தப் பாடல்கள், கவிதைகள் மக்களிடமிருந்துவிரைவில் எடுபட்டு விடுகின்றன.
இசையுடன் கூடிய பாடல்களும் ஒரு சில மணி நேரங்களைத் தாண்டி சில காலங்கள் நீடிக்கின்றன.பின்னால் மறைந்து விடுகின்றன.
ஆனால் இந்தத் திருக்குர்ஆன், இசையை எதிர்த்து, எட்டி எகிறித் தள்ளிவிட்டு மக்களின் உள்ளங்களில்இடம்பிடித்து, பதினான்கு நூற்றாண்டுகளுக்கு மேலாக, பாரம்பரியமாக, பன்னாட்டு மொழியினரிடம்ஆட்சி செய்கின்றது என்றால் இது படைத்தவனின் அற்புதத்தைத் தவிர்த்து வேறெதுவாகவும் இருக்கமுடியாது.
பள்ளிவாசல்களில் தொழும் போதும், தொழாத போதும் அழகிய குரல் வளத்தில் ஓதப்படும் குர்ஆன்,உள்ளத்தை ஒரு விதமாக வயப்படுத்தி விடுகின்றது.
குர்ஆனின் இந்த ஈர்ப்பு சக்தி அன்றிலிருந்து இன்று வரை அப்படியே தொடர்கின்றது.
ரசிக்கும் ரசூல் (ஸல்)
குர்ஆன் கொடுக்கப்பட்ட இறைத் தூதர் (ஸல்) அவர்கள், குரல் வளமிக்கவர்கள் அதை ஓதும் போதுகேட்டு ரசித்திருக்கின்றார்கள். அவ்வாறு ஓதுவோரின் இல்லங்களை அடையாம் கண்டிருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் அஷ்அரீ (குல) நண்பர்கள் இரவில் (தம் தங்குமிடங்களில்) நுழையும் போது அவர்கள் குர்ஆன்ஓதும் ஓசையை நான் அறிவேன். பகல் நேரத்தில் அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை நான்பார்த்திருக்காவிட்டாலும், இரவில் அவர்கள் குர்ஆன் ஓதும் ஓசையைக் கேட்டு அவர்கள்தங்கியிருக்கும் இடங்களை நான் அடையாளம் கண்டு கொள்கிறேன். மேலும், அவர்களில் விவேகம்மிக்க ஒருவர் இருக்கிறார். அவர் குதிரைப் படையினரைச் சந்தித்தால்.... அல்லது எதிரிகளைச்சந்தித்தால்.... அவர்களைப் பார்த்து, "என் தோழர்கள், தங்களுக்காகக் காத்திருக்கும்படி உங்களுக்குஉத்தரவிடுகின்றனர்' என்று (துணிவோடு) கூறுவார்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூசா (ரலி)
நூல்: புகாரி 4232
குர்ஆனை அடுத்தவர் ஓதுவதைக் கேட்பதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆர்வம் காட்டியுள்ளார்கள்.
(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் என்னிடம் "குர்ஆனை எனக்கு ஓதிக் காட்டுங்கள்!'' என்றுசொன்னார்கள். நான் "தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக்காட்டுவதா?'' என்று கேட்டேன். அவர்கள் "பிறரிடமிருந்து அதை நான் செவியேற்க விரும்புகிறேன்''என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: புகாரி 5049
அண்ணலாரின் அமுதக் குரல்
அடுத்தவர் ஓதக் கேட்டு ரசிக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே அந்த அருள்மிகு குர்ஆனைஓதினால் அதன் அருமை எப்படியிருக்கும்?
இதோ அதன் அருமையையும் அழகையும் நபித்தோழர்கள் கூறக் கேட்போம்.
நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுகையில் (95ஆவது அத்தியாயமான) "வத்தீனி வஸ்ஸைத் தூனி'யைஓதக் கேட்டுள்ளேன். நபி (ஸல்) அவர்களை விட "அழகிய குரலில்' அல்லது "அழகிய ஓதல்முறையில்' வேறெவரும் ஓத நான் கேட்டதில்லை
அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி),
நூல்: புகாரி 769