மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் கோலாளும்பூரில் முஸ்லிம்களை தீவரவாதியாக சித்தரித்து எடுக்கப்பட்ட விஸ்வரூபம் படத்தை கண்டித்து 25.01.2013 அன்று காலை 10 மணிக்கு மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக JAWI (கோலாளும்பூர் இஸ்லாமிய துறை)நிர்வாகியிடம் கடிதம் கொடுக்கப்பட்டது.மலேசியாவில் தடை என்று ஊடகங்களில் தகவல் வந்த போதும் இன்னும் திரையரங்குகளில் ஓடுகிறது என்பதை எடுத்துச் சொல்லப்பட்டது.மேலும் தமிழகம் மற்றும் பல நாடுகளில் இந்த படம் தடை செய்யப்பட்டது என்கிற பத்திரிக்கை செய்திகளும் அவர்களிடம் காட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக JAWI நிர்வாகி வாக்களித்தார்.
இதை தொடர்ந்து விஸ்வரூபம் திரைப்படம் மதியம் அனைத்து தியேட்டர்களிலும் தடை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment