بسم الله الر حمن الر حيم
குர்ஆன் கூறும்
அல்லாஹ்வின் வாக்குறுதிகள்
இறைவன்
குர்ஆனில் வாக்குறுதி சம்மந்தமாக பல வசனங்களை அருளியுள்ளான். அந்த வசனங்களில்
இருந்து நமக்கு கிடைக்கும் செய்திகளையும், அல்லாஹ்வின் வாக்குறுதி எப்படிப்பட்டது
என்பதையும் அறிந்து கொள்வோம்.
அல்லாஹ்வின்
வாக்குறுதியின் தன்மைகள்
நல்லதையே
வாக்களித்திருக்கிறான்
وَكُلًّا وَعَدَ اللَّهُ الْحُسْنَى
அல்லாஹ்வின்
வாக்கு உண்மையானது.
إِلَيْهِ مَرْجِعُكُمْ جَمِيعًا وَعْدَ اللَّهِ حَقًّا
4. உங்கள் அனைவரின் மீளுதல் அவனிடமே உள்ளது. (இது)
அல்லாஹ்வின் உண்மையான வாக்காகும். 10-4
إِنَّ وَعْدَ
اللَّهِ حَقٌّ
அல்லாஹ்வின் வாக்கு உண்மையானது. 10-55
அல்லாஹ்
வாக்கு மீற மாட்டான்.
وَعْدُ
اللَّهِ إِنَّ اللَّهَ لَا يُخْلِفُ الْمِيعَادَ (31)
அல்லாஹ் வாக்கு மீற மாட்டான். 13-31
ரோமப் பேரரசு வெற்றி பெறுவார்கள்.
2, 3, 4,
5. ரோமப்
பேரரசு அருகில் உள்ள பூமியில் வெற்றி கொள்ளப்பட்டு விட்டது. அவர்கள் தோல்விக்குப்
பிறகு சில வருடங்களில் அல்லாஹ்வின் உதவியால் வெற்றி பெறுவார்கள்.313முன்னரும், பின்னரும்
அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. நம்பிக்கை கொண்டோர் அந்நாளில்
மகிழ்ச்சியடைவார்கள். தான் நாடியோருக்கு அவன் உதவி செய்கிறான். அவன் மிகைத்தவன்; நிகரற்ற
அன்புடையோன்.30-1 TO 6
மூஸா நபியின் தாய்க்கு அல்லாஹ் கொடுத்த
வாக்குறுதி
فَرَدَدْنَاهُ إِلَى أُمِّهِ كَيْ تَقَرَّ عَيْنُهَا وَلَا تَحْزَنَ
وَلِتَعْلَمَ أَنَّ وَعْدَ
اللَّهِ حَقٌّ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ (13)
13. அவரது தாயார் கவலைப்படாமல்
மனம் குளிரவும், அல்லாஹ்வின் வாக்குறுதி
உண்மை என்பதை அவர் அறிவதற்காகவும் அவரிடம் அவரைத் திரும்பச் சேர்த்தோம். எனினும்
அவர்களில் அதிகமானோர் (இதை) அறிய மாட்டார்கள். 28-13
நல்லறங்கள்
செய்தோரை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வோம்
وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَنُدْخِلُهُمْ
جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا
وَعْدَ اللَّهِ حَقًّا وَمَنْ أَصْدَقُ مِنَ اللَّهِ
قِيلًا (122)
122. நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள்
செய்தோரை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள்
ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அல்லாஹ்வின்
உண்மையான வாக்குறுதி. அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யார்? 4-122
நல்லறங்கள் புரிந்தோருக்கு மன்னிப்பும், மகத்தான கூலியும் உண்டு
وَعَدَ
اللَّهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ مَغْفِرَةٌ وَأَجْرٌ
عَظِيمٌ (9)
9. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் புரிந்தோருக்கு
மன்னிப்பும், மகத்தான
கூலியும் உண்டு என அல்லாஹ் வாக்களித்துள்ளான். 5-9
மாளிகைகளுக்கு மேல் எழுப்பப்பட்ட மாளிகைகள்
لَكِنِ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ لَهُمْ غُرَفٌ مِنْ فَوْقِهَا
غُرَفٌ مَبْنِيَّةٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ وَعْدَ
اللَّهِ لَا يُخْلِفُ اللَّهُ الْمِيعَادَ (20)
20. மாறாக, தமது இறைவனை அஞ்சியோருக்கு மாளிகைகளுக்கு மேல்
எழுப்பப்பட்ட மாளிகைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். இது
அல்லாஹ்வின் வாக்குறுதி. அல்லாஹ் வாக்குறுதியை மீற மாட்டான். 39-20
வாக்களித்ததை உறுதியாகப் பெற்றுக் கொண்டோம்.
وَنَادَى أَصْحَابُ الْجَنَّةِ أَصْحَابَ النَّارِ أَنْ قَدْ
وَجَدْنَا مَا وَعَدَنَا رَبُّنَا حَقًّا فَهَلْ وَجَدْتُمْ مَا وَعَدَ رَبُّكُمْ حَقًّا قَالُوا نَعَمْ فَأَذَّنَ مُؤَذِّنٌ
بَيْنَهُمْ أَنْ لَعْنَةُ اللَّهِ عَلَى الظَّالِمِينَ (44)
44. "எங்கள் இறைவன் எங்களுக்கு வாக்களித்ததை
உறுதியாகப் பெற்றுக் கொண்டோம். உங்கள் இறைவன் உங்களுக்கு வாக்களித்ததை உறுதியாகப்
பெற்றுக் கொண்டீர்களா?'' என்று சொர்க்க வாசிகள் நரகவாசிகளிடம்
கேட்பார்கள். அவர்கள் "ஆம்' என்பர். "அநீதி இழைத்தோர் மீது
அல்லாஹ்வின் சாபம்6உள்ளது'' என்று
அவர்களுக்கிடையே அறிவிப்பாளர் அறிவிப்பார். 7-44
நரக நெருப்பை அல்லாஹ் எச்சரித்து விட்டான்.
وَعَدَ اللَّهُ الْمُنَافِقِينَ وَالْمُنَافِقَاتِ وَالْكُفَّارَ
نَارَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا هِيَ حَسْبُهُمْ وَلَعَنَهُمُ اللَّهُ وَلَهُمْ
عَذَابٌ مُقِيمٌ (68)
68. நயவஞ்சகர்களான ஆண்களுக்கும், பெண்களுக்கும், (தன்னை)
மறுப்போருக்கும் நரக நெருப்பை அல்லாஹ் எச்சரித்து விட்டான். அதில் அவர்கள்
நிரந்தரமாக இருப்பார்கள். அது அவர்களுக்குப் போதுமானது. அவர்களை அல்லாஹ் சபித்து
விட்டான்.6 அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு. 9-68
அனைவரின் மீளுதல் அவனிடமே உள்ளது
إِلَيْهِ مَرْجِعُكُمْ جَمِيعًا وَعْدَ اللَّهِ حَقًّا
4. உங்கள் அனைவரின் மீளுதல் அவனிடமே உள்ளது. (இது)
அல்லாஹ்வின் உண்மையான வாக்காகும்.10-4
தந்தை
மகனைக் காக்க முடியாத, மகன் தந்தையைச் சிறிதும் காப்பாற்ற இயலாத நாள்
يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمْ وَاخْشَوْا يَوْمًا لَا
يَجْزِي وَالِدٌ عَنْ وَلَدِهِ وَلَا مَوْلُودٌ هُوَ جَازٍ عَنْ وَالِدِهِ شَيْئًا
إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ
فَلَا تَغُرَّنَّكُمُ الْحَيَاةُ الدُّنْيَا وَلَا يَغُرَّنَّكُمْ بِاللَّهِ
الْغَرُورُ (33)
33. மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! தந்தை
மகனைக் காக்க முடியாத, மகன்
தந்தையைச் சிறிதும் காப்பாற்ற இயலாத நாளை1 அஞ்சுங்கள்! அல்லாஹ்வின் வாக்குறுதி
உண்மையானது. இவ்வுலக வாழ்க்கை உங்களை ஏமாற்றி விட வேண்டாம்! ஏமாற்றுபவனும்
அல்லாஹ்வைப் பற்றி உங்களை ஏமாற்றி விட வேண்டாம். 31-33
உங்களிடம் வாக்கு மீறி விட்டேன். ஷைத்தான் கூறுவான்.
22. "அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதி
அளித்தான். நானும் உங்களுக்கு வாக்குறுதி அளித்து உங்களிடம் வாக்கு மீறி விட்டேன்.
உங்களை அழைத்தேன். எனது அழைப்பை ஏற்றீர்கள் என்பதைத் தவிர உங்கள் மீது எனக்கு எந்த
அதிகாரமும் இல்லை. எனவே என்னைப் பழிக்காதீர்கள்! உங்களையே பழித்துக் கொள்ளுங்கள்!
நான் உங்களைக் காப்பாற்றுபவனும் அல்லன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவோரும் அல்லர்.
முன்னர் நீங்கள் (இறைவனுக்கு) என்னை இணையாக்கியதை மறுக்கிறேன்'' என்று
தீர்ப்புக் கூறப்பட்டவுடன் ஷைத்தான் கூறுவான். அநீதி இழைத்தோருக்குத்
துன்புறுத்தும் வேதனை உண்டு. 14-22
அல்லாஹ்வின் நல்லடியார்களே மேற்கண்ட செய்தி மூலம் நாம்
நல்லறங்கள் செய்தால் பல்வேறு விதமான இன்பங்களை தருவதாகவும், மாறு செய்பவர்களுக்கு
கடும் வேதனையை தருவதாகவும் வாக்களிக்கிறான் என்பதை அறிந்து கொண்டோம். அல்லாஹ்
வாக்களிக்கும் சொர்கத்தின் இன்பத்தை பெற அனைவரும் நல்லறம் செய்வோம்.
No comments:
Post a Comment