بسم الله الر حمن الر حيم
குர்ஆன்
இறைவேதமா?
SANஇன் சத்தில்லாத வாதமும் TNTJவின் திணறச்செய்த பதில்களும் .
அஸ்ஸலாமு அலைக்கும்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்
28,29.04.12 ஆகிய தினங்களில் குர்ஆன் இறைவேதமா? என்ற
தலைப்பில் SAN என்ற கிருஸ்துவ அமைப்பிற்கும் TNTJ க்கும் சென்னை தலைமை அலுவலகத்தில் விவாதம் நடைபெற்றது. ஏற்கனேவே நடந்த
பைபிள் இறைவேதாமா? என்ற தலைப்பில் பைபிளில் உள்ள ஆபாசங்களையும், முரண்பாட்டையும்
அடுக்கடுக்காக வீசியதால் திணரிப்போன SAN ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட அடுத்த விவாதத்திற்காக ஓடி ஒழிந்ததை அறிவோம்.
ஒருவழியாக பல நிபந்தனைகளை சொல்லி ஒப்புக்கொண்டது. இரண்டு மாதம் இடைவெளியில்
குர்ஆன் இறைவேதமா என்ற தலைப்பிற்கு அறிவுப்பூர்வமான வாதங்களை எடுத்து வைப்பார்கள் என்று
பார்த்தால் சில கிருக்கர்களின் வாதங்களை படித்துவிட்டு வந்து வாந்திஎடுத்தார்கள்.
குர்ஆனில் ஆபாசம் என்று சித்தரிப்பை ஏற்படுத்த பல முயற்சிகள் செய்து மண்ணைக்கவ்வினார்கள்.
கடந்த விவாதத்தின் கேசட்டை கூட வெளியிடாமல் அவர்களின் தரப்பில் பார்வையாளராக
வந்தவர்கள் நம்மிடம் கேட்டு பெற்றுக்கொண்டார்கள் என்பதை தலைமை தெரிவித்தது.
அப்படிப்பட்ட SAN குர்ஆனை மறுக்க என்ன வாதங்களை வைத்தது
அதற்க்கு நம் அமைப்பு என்ன பதில் தந்தது என்பதை அனைவருக்கும் எழுத்து வடிவில்
முற்பட்டுள்ளேன்.
வாதம்:1
குர்ஆன் அனைத்தையும்
சுருக்கமான வார்த்தை கொண்டு விளக்கும் என்கிறீர்கள் தொழுகை,நோன்பு,ஜகாத்,ஹஜ் பற்றி
குரானில் இருந்து காட்டுங்கள்? இதனால் குர்ஆன் இறைவேதமில்லை.
(எவ்வளவு அற்புதமான வாதம்யா?)
மறுப்பு:
இதற்கு குர்ஆனிலேயே விளக்கம்
இருக்கிறது.முஹம்மது நபி அவர்கள் குரானில் கூறப்பட்ட விஷயங்களுக்கு
விளக்கக்கூடியவராகவும் இருக்கிறார் என்று குர்ஆனே சொல்கிறது?
43, 44. (முஹம்மதே!)
உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத்
தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும்
நமது தூதுச் செய்தியை அறிவித்தோம்.நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம்
கேளுங்கள்! மக்களுக்கு
அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள்
சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம். குர்ஆன் 16:44.
வாதம்: 2
பூமியில் சில பகுதிகளில்
பகலாகேவே அல்லது இரவாகவே இருக்கிறது. இவர்கள் எப்படி தொழுவார்கள் இதை குர்ஆன்
விளக்கவில்லை? இதனால் குர்ஆன் இறைவேதமில்லை.
(3 மாதம் ஓடனது வேலை செய்து)
மறுப்பு:
குர்ஆனை பற்றி
விளக்குவதற்காக வந்த நபி(ஸல்) அவர்கள் இதற்கு தீர்வளிக்கிறார்கள். தஜ்ஜால் என்பவன்
வரும்போது ஒரு நாள் என்பது வருடத்தைப்போல் இருக்கும் அப்போது எப்படி தொழ வேண்டும்
என்று சஹாபாக்கள் கேட்கும்போது நேரத்தை கணித்து தொழுதுகொள்ளுங்கள் என்றார்கள் அதே
போலத்தான் பூமியில் சில பகுதிகளில் பகலாகேவே
அல்லது இரவாகவே இருப்பவர்கள் தொழவேண்டும்.
....அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால்
இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று
நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது
நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ஒரு வருடம் போன்றும், மற்றொரு
நாள் ஒரு மாதம் போன்றும், அடுத்த
நாள் ஒரு வாரம் போன்றும்,ஏனைய நாட்கள் இன்றைய நாட்களைப்
போன்றும் இருக்கும்'' என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே!
ஒரு வருடத்தைப் போன்ற அந்த நாளில் ஒரு நாள் தொழுகை எங்களுக்குப் போதுமா?'' என்று
நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், போதாது; அதற்குரிய
அளவை அதற்காக (தொழுகைக்காக) கணித்துக்
கொள்ளுங்கள்'' என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி)
நூல்: முஸ்லிம்
வாதம்: 3
கடல் வாழ் உயிரினம் ஹலால்
என்று குர்ஆன் ஒரு வசனத்தில் சொல்கிறது. செத்தவை ஹராம்,என்று சொல்கிறது செத்த மீனை சாப்பிடுகிறீர்கள்? இதில்
குர்ஆன் முரண்படுகிறது?
(நல்ல கேள்வி இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
பார்க்கலையா?)
மறுப்பு:
இதையும் குர்ஆனுக்கு
விளக்கம் தர வந்துள்ள நபி ஸல் அவர்கள் விளக்குகிறார்கள் கடலில் செத்தவை ஹலால்
என்று இதில் எந்த முரண்பாடும் இல்லை?
நபி (ஸல்) அவர்களிடம் கடல் நீர் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'அதன்
தண்ணீர் தூய்மை
செய்யத்தக்கது;அதில் செத்தவையும் உண்ண அனுமதிக்கப்பட்டவை' என்று
பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: இப்னுமாஜா 382
வாதம்: 4
இறைவனின் படைப்பை மாற்றுவது ஷைத்தானின் செயல் என்று குர்ஆன்
சொல்கிறது? நீங்கள் விருத்த சேதனம்(சுன்னத்) செய்கிறீர்கள் ஏன்
ஷைத்தானின் செயலை செய்கிறீர்கள்?
118, 119 அல்லாஹ்
அவனை (ஷைத் தானை) சபித்து விட்டான். "உன்
அடியார்களில் குறிப்பிட்ட தொகையினரை வென் றெடுப்பேன்; அவர்களை
வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த்
தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக்
கட்டளை யிடுவேன்; அவர்கள்
கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ்
வடி வமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்'' என்று
அவன் (இறைவனிடம்) கூறினான். அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன்
வெளிப்ப டையான இழப்பை அடைந்து விட்டான். 4:119
(பைபிலயாவது உருப்பிடியா
படிங்கய்யா? விருத்த சேதனம் பண்ணனும்னு பைபிளே
சொல்கிறது ஆதியாகமம் 17:10,11,12,13)
மறுப்பு:
இதில்
எந்த முரண்பாடும் இல்லை. இதை குர்ஆனே விளக்குகிறது இப்ராஹீம் நபியின் வழியை
பின்பற்றுங்கள் என்று குர்ஆன் சொல்கிறது.
95. "அல்லாஹ் உண்மையே கூறினான். எனவே
இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுங்கள்! அவர் உண்மை வழியில் நின்றார். இணை
கற்பித்தவராக அவர் இருந்ததில்லை'' என்று
கூறுவீராக! 3-95
இந்த இப்ராஹீம் நபிக்கு இறைவன் விருத்த சேதனம் செய்வதை
கட்டளையிட்டுள்ளான் அந்த அடிப்படையில் விருத்த செய்வது குர்ஆனுக்கு முரணில்லை.
வாதம்: 5
6.(முஹம்மதே!) இவை அல்லாஹ்வின் வசனங்கள். இதை
உண்மையுடன் உமக்குக் கூறுகிறோம். அல்லாஹ்வுக்கும், அவனது
வசனங்களுக்கும் பிறகு வேறு எந்தச் செய்தியைத் தான் அவர்கள் நம்புவார்கள்?
تِلْكَ آيَاتُ اللَّهِ نَتْلُوهَا عَلَيْكَ
بِالْحَقِّ فَبِأَيِّ حَدِيث بَعْدَ
اللَّهِ وَآيَاتِهِ يُؤْمِنُونَ (6)
இந்த வசனத்தில் அல்லாஹ்வின் வசனங்களுக்குப் பிறகு அவர்கள் எந்த
செய்தியை (ஹதீஸை) நம்புவார்கள் என்று இருக்கிறது.ஏன் குர்ஆனை விட்டுவிட்டு ஹதீஸ்
ஆதாரத்தை சொல்கிறீர்கள்?
(3 மாத கேப்ல
ஜமாலிகிட்ட ட்ரைனிங் எடுத்தீங்களா? வார்த்தையை பிடித்து
பேசராங்களாம்)
மறுப்பு:
அதே போல் ஹதீஸ் என்பது வரலாறு என்ற பொருளும் உள்ளது. 79:15
இந்த வசனங்களின் அடிப்படையில் ஹதீஸ் என்ற வார்த்தைக்கு செய்தி என்று
பொருள். நபி (ஸல்) அவர்களின் விளக்கத்தை ஏற்கக்கூடாது என்பதல்ல.
இந்த வாதம் குர்ஆனை மறுக்கும் சில அறிவு கெட்டவர்களின் வாதம் ஆகும்.
வாதம்: 6
கணவன்,மனைவிக்கு இடையில் பிணக்கு ஏற்படும் போது கணவன் மனைவியை அடிக்கச்
சொல்கிறது குர்ஆன் (4:34) அதற்கு
வரம்பு என்ன? 1தடவையா?,2,தடவையா?10தடவையா?,100தடவையா
எத்தனை தடவை என்று குர்ஆன் விளக்க வில்லை இதனால் குர்ஆன் இறைவேதம் இல்லை?
(ரூம் போட்டு யோசித்தீர்களோ)
மறுப்பு:
இந்த வாதம்
கிறுக்குத்தனமானது. கணவன், மனைவிக்கு இடையில் பிணக்கு ஏற்படும் போது, பெண்களுக்கு
முதலில் அறிவுரை கூறவேண்டும், பிறகு படுக்கையில் இருந்து
விலக்கவேண்டும், அப்படியும் பெண் புரிந்து கொள்ளாத போது
பெண்களை திருத்தி அறிவுரை கூற லேசாக அடிக்க அனுமதி உள்ளது.
(குறிப்பு: முகத்தில்
அடிக்கக்கூடாது.காயம் ஏற்படும் படி அடிக்கக்கூடாது புகாரி:1294)
இதை புரிந்து கொள்வது
எளிதானது. ஒருவனுக்கு பசி என்றால் எவ்வளவு தேவையோ அவ்வளவு தான் சாப்பிட முடியும்.
அதே போல்தான் இதுவும்.
ஒரு மாணவன் தவறு செய்கிறான்
என்றால் ஆசிரியர் அறிவுரை கூற எவ்வளவு அடிக்க வேண்டும் என்பதை அறிந்து
வைத்திருப்பார் அதே போல்தான்.
வாதம்: 7
2:223 வசனத்தில்
பெண்கள் விளைநிலங்கள்: அதில் விரும்பியவாறு செல்லுங்கள் என்றால் வரம்பு மீறி என்ன
வேண்டுமானாலும் செய்யலாமா? மனைவியிடத்தில் தவறான
முறைகளிலும், உணர்ச்சி வசப்பட்டும் உறவு கொள்ளலாமா?
(குர்ஆன என்ன பைபிள்னு நினைத்தீங்களோ?)
மறுப்பு:
இந்த வசனமே இதை அழகாக
கூறுகிறது. பைபிளை போல் ஆபாசமாக பேசவில்லை. விளை நிலம் என்று சொன்னால்
விளையக்கூடிய இடத்தில் விதை இடவேண்டும் என்று ரத்தின சுருக்கமாக சொல்கிறது. விதை
நிலம் என்றால் வானத்தில் விதை இடமுடியாது.
(பைபிளை போல் ஆபாசமாக
பேசாமல் கடவுள் வார்த்தை என்று நிரூபிக்கும் வண்ணம் அழகாக பேசுகிறது.)
வாதம் 8
உங்களுடைய
மொழிபெயர்ப்பில் சொத்துப்பிரிப்பது சம்மந்தாமாக சில நபர்களுக்கு சொத்து
பிரிக்கும்போது பாதிப்பு ஏற்படும் என்கிறீர்களே? அப்போது அந்த சில நபர்களுக்கு குர்ஆன்
கூறும் சொத்துப்பிரிப்பு என்பது அவர்களுக்கு நாமமா?
(கண்ணாடி
போட்டும் கண் தெரியலையா?)
மறுப்பு:
மொழிபெயர்ப்பில்
பாதிப்பு ஏற்படும் என்று எழுதவில்லை. பாதிப்பு ஏற்படுவதாக சிலருக்கு தோன்றும் என்றுதான் போடப்பட்டுள்ளது.அல்லாஹ்
குர்ஆனில் பாகப்பிரிவினை சம்மந்தமாக பாதிப்பு ஏற்படாத வகையில் பங்கிட வேண்டும் என்கிறான்.அந்த
அடிப்படையில் நாம் வழக்கமாக சொத்தை எப்படி பங்கிடுவோமோ அதே போல் பங்கிட்டால் சிலருக்கு
சரியாக பங்கிட முடியாது. அதை அறிந்த அல்லாஹ் பாதிப்பு ஏற்படாத வகையில்
பங்கிடுங்கள் என்கிறான். அப்படிப்பட்ட சில இடங்களில் அல்லாஹ் சொல்வதை போல்
பாதிப்பு ஏற்படாத வகையில் பங்கிடுவது இலகுவானது. பாதிப்பு இல்லாத வகையில் பங்கிடும் முறை பற்றி மொழிபெயர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்
தகவல் அறிய குர்ஆன் விளக்கங்களில் 111
வது விளக்கத்தை காணவும்.குர்ஆன் யாருக்கும் எந்த நாமமும் போடச் சொல்லவில்லை.தெளிவாக உள்ளது.
வது விளக்கத்தை காணவும்.குர்ஆன் யாருக்கும் எந்த நாமமும் போடச் சொல்லவில்லை.தெளிவாக உள்ளது.
வாதம் 9
2:29 வசனத்தில்
பூமியை முதலில் படைத்தான் என்று குர்ஆன் சொல்கிறது.
79:30 வசனத்தில்
பின்னர் பூமியை படைத்தான் என்கிறது
இந்த அடிப்படையில் குர்ஆன் முரண்படுகிறது?
(ஏதோ மாட்டிகிட்டோம்னு
வாய்க்கு வந்ததெல்லாம் சொல்றீன்களே)
மறுப்பு
இதில் எந்த முரண்பாடும் இல்லை. 79:30 வது வசனத்தை தெளிவாக பார்க்கவும்.
பின்னர் பூமியை விரித்தான் என்றுதான் இருக்கிறது. பின்னர் பூமியை படைத்தான் என்று
இல்லை.
இதன் பின்னர் பூமியை விரித்தான். 79:30
வாதம் 10
மூஸா நபி
காலத்தில் இன்ஜீல் இருப்பதாக 7:157 வசனத்தில் குர்ஆன் சொல்கிறது. மூஸா நபி காலத்தில் பைபிள்
எங்கே?
(பைபிள காணோம்னு போலிஸ்ல பொய் புகார்
கொடுங்கப்பா?)
மறுப்பு
அந்த வசனத்தில் எழுதப்படிக்கத் தெரியாத(உம்மி)
நபி என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது முஹம்மது(ஸல்) அவர்களைப் பற்றிதான் அந்த வசனம் சொல்கிறதே தவிர மூஸா நபி
பற்றி இல்லை.
வாதம் 11
குர்ஆனில் கெட்ட மனிதர்களை புயல்
காற்றை கொண்டு அழிக்கும் சம்பவத்தை கூறும்போது 54:19
வசனத்தில் 1 நாள்
என்கிறது. 41:16 வசனத்தில்
பல நாள் என்கிறது.
69:7 வசனத்தில் 7 நாள்
என்கிறது.
அந்த சமுதாயத்தை அழித்தது 1
நாளா? பல நாளா? 7
நாளா?
(இலகுவான பதில் ஒன்றுமில்லாத வாதம்.)
மறுப்பு
54:19
வசனத்தில் தெளிவாக ஒரு நாளில் அனுப்பினோம். என்று தான் இருக்கிறது. ஒரு நாளில்
அழித்து முடித்தோம் என்று சொல்லவில்லை.
19. தொடர்ந்து துர்பாக்கியமாக இருந்த ஒரு நாளில் அவர்களுக்கு
எதிராகக் கடும் புயல் காற்றை நாம் அனுப்பினோம். 54:19
காற்று ஒரு நாளில் அனுப்பப்பட்டு
அதன் தொடர்ச்சி பல நாள் நீடித்து இருந்தது என்று தெளிவாக உள்ளது. இதில் எந்த
முரண்பாடும் இல்லை.
உதாரணமாக நான் டெல்லிக்கு ஒரு நாள் ரயிலில் போனேன் என்றால் புறப்பாடு ஒரு நாளில் இருந்தது.
அதன் பயணத் தொடர்ச்சி பல நாட்கள் இருந்தது. என்பதுதான்.
வாதம் 12
குர்ஆனில் 4:23 வசனத்தில் பெற்ற தாயை அம்மா
என்கிறது குர்ஆன், அதே போல் அதே வசனத்தில் பாலுட்டிய தாயை மணக்கக்கூடாது அவர்களும்
தாய் என்கிறது. அதே போல் நபிகள்(ஸல்) அவர்களின் மனைவியையும் மணக்கக்கூடாது அவர்கள்
முஸ்லிம்களுக்கு தாய் என்கிறது. அப்போது
உங்களுக்கு 1 தாயா? 2 தாயா? பல தாயா?
( நீங்கள் கூட சகோதர,சகோதரிகளே என்கிறீர்கள்
உங்களுடைய சொத்தை அனைவர்க்கும் பங்கு வைத்தா கொடுப்பீர்கள்.)
மறுப்பு:
இது அனைவருக்கும் இலகுவாக புரியும் ஒன்றுதான் பாலூட்டியவர்
தாய் என்றால் அவர்கள் தாயைப் போல் பாலூட்டினார்கள் அவ்வளவுதான் அவர்களுக்கு
சொத்தில் பங்கு இல்லை. அதே போல் நபி(ஸல்) அவர்களின் மனைவியை மணக்கக்கூடாது.
ஏனென்றால் அவர்கள் தாய் அந்தஸ்தில் உள்ளார்கள் என்பதுதான். இதுவெல்லாம் ஒரு
கேள்வியா?
உதாரணமாக மேடையில் ஏறி தாய்மார்களே என்கிறோம்.
எல்லோரும் தாயா? இல்லை தாயின் அந்தஸ்தில் கூப்பிடுகிறோம். அவ்வளவுதான்.
அதேபோல் அம்மாவின் சகோதரருக்கும் மாமா
என்கிறோம். வேறு சில வேலை செய்பவர்களையும் மாமா என்கிறோம். எல்லோரும் அம்மாவின்
சகோதரரா?
வாதம் 13
நபிகள் நாயகம் கல்வி பின் வரும் காலத்தில்
அழிந்துவிடும் என்கிறார்கள். அப்படி இருக்கையில் குர்ஆன் எப்படி பாதுகாக்கப்படும்
என்கிறீர்கள்?
(அரை குறையாபார்த்துட்டு
வந்துட்டு எவ்வளவு பில்டப்பு)
மறுப்பு:
கல்வி அழிந்து விடும் என்றால் அது என்ன கருத்து
என்று பைஹகியில் தெளிவாக உள்ளது. நபி(ஸல்) அவர்கள் தெளிவாக கூறியுள்ளார்கள்
குர்ஆனை சிலர் செயல்படுத்த மாட்டார்கள் என்பது அதன் பொருள். இதில் குர்ஆனின்
பாதுகாப்பிற்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. குர்ஆன் இருக்கும். ஆனால் மனிதர்கள்
செயல்படுத்தமாட்டார்கள் என்பது அதன் விளக்கமாகும்.
வாதம் 14
தேனீக்கள் பூக்களில் தான் சாப்பிடுகிறது. கனிகளில்
சாப்பிடுவதாகவும் குர்ஆன் 16:69
ல் சொல்கிறதே ஆதாரம் காட்ட முடியுமா?
(பதில் சொன்னதும் வாயத்தொரன்தீன்ங்களா?
மறுப்பு:
தேனீக்கள் கனிகளும்,சாப்பிடுகிறது என்பதை விளக்கப்படத்துடன்
காண்பிக்கப்பட்டது. வீடியோவும் உள்ளது.
வாதம் 15
இஸ்லாம் தற்காலிகத் திருமணம் அதாவது விபச்சாரத்தை
அனுமதிக்கிறது. இதனால் குர்ஆன் இறைவேதம் இல்லை.
(நல்ல முயற்சி ஆனாலும் சிம்பிள் பதில்)
மறுப்பு:
இஸ்லாம் என்பது ஒரே அடியாக சட்டங்களை
தொகுத்து புத்தகமாக அருளப்படவில்லை. அந்த அரபு மக்களிடத்தில்
இருந்த சில பழக்கங்கள் தவறு என்பதை கொஞ்சம் கொஞ்சமாக இறைவன் தடுத்து முழுமையாக
இந்த இஸ்லாத்தின் சட்டத்தை இறைவன் சொன்னான். அந்த அடிப்படையில் மதுவும், சிறிது சிறிதாகத்தான் தடுக்கப்பட்டது.
அதேபோல்தான் முத்ஆ எனும் வாடகைத்திருமணம் அந்த
அரபுகளிடத்தில் இருந்தது இதை இறைவன் தடுத்து விட்டான். என்பதை நபி(ஸல்) அவர்கள் தெளிவாக கூறிவிட்டார்கள்.
வாடகைத் திருமணத்தையும், வீட்டுக் கழுதைகளைச் சாப்பிடுவதையும் கைபர்
போரின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர் : அலி (ரலி),
நூல் : புகாரி 4216,
5115, 5523, 6691
வாதம் 16
குர்ஆனில் எழுத்தில் தவறு இருக்கிறது என்று நீங்களே? கூறுகிறீர்கள் அப்போது எப்படி
குர்ஆன் பாதுகாக்கப்பட்ட வேதமாகும்?
(இத வச்சுத்தான டைம ஓட்டநீங்க?)
மறுப்பு:
குர்ஆன் என்பது புத்தக வடிவில் அருளப்படவில்லை.
மாறாக ஓசை வடிவில்தான் அருளப்பட்டது.
குர்ஆன் எப்படி பாதுகாக்கப்படுகிறது என்பதை இறைவனே தெளிவாகக் கூறுகிறான்.
49. மாறாக, இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின்
உள்ளங்களில் இருக்கின்றன. அநீதி இழைத்தோரைத் தவிர வேறு எவரும் நமது
வசனங்களை மறுக்க மாட்டார்கள். 29:49
இந்த வசனத்தில் தெளிவாக குர்ஆன் என்பது கல்வி
கொடுக்கப்பட்டவர்களின் உள்ளத்தில் பாதுகாக்கப்படுகிறது என்பதை கூறுகிறது.
எழுத்தில் இல்லை.
எங்களுக்கு மூலப்பிரதி என்பது குர்ஆனை மனனம்
செய்த ஹாபிள்கள் தான். சிலர் தவறாக ஓதினால் பாதுகாக்கப்படவில்லை என்பது கிடையாது.
அவர் தவறாக மனப்பாடம் செய்திருக்கிறார்கள். லட்சம் பேர் மனப்பாடம் செய்து இருவர் தவறாக
ஓதினால் அவர் தவறாக மனப்பாடம் செய்தார் என்பதுதான் சரியானது. யாராவது குர்ஆன்
என்று ஒன்றை ஓதினால் அது குர்ஆனில் உள்ளதா? இல்லையா? என்பதை குர்ஆனை மனனம்
செய்தவர்களும் குர்ஆனை பற்றி அறிந்தவர்களும் சொல்லிவிடுவார்கள். எனவே எழுத்தில்
பிழை என்பது குர்ஆனின் பாதுகாப்பிற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. குர்ஆன்
என்பது ஓசை வடிவில் பாதுகாக்கப்பட்டிருக்கிறது.
விவாதத்தின் கேசட் வந்தவுடன் இன்னும் அவர்கள்
வைத்த சில வாதங்கள் இணைக்கப்படும். இன்ஷா அல்லாஹ்.
மேலும் நாம் குர்ஆன் இறைவேதம் என்பதற்கு வாய்த்த
வாதங்களையும் பைபிள் இறைவேதமில்லை என்பதை அறிய இதை கிளிக் பண்ணவும்.http://www.tntj.net/84636.html
No comments:
Post a Comment