Showing posts with label சேவைகள். Show all posts
Showing posts with label சேவைகள். Show all posts

Sunday, 7 April 2013

இரத்த தான முகாம்

 மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் கோலாலும்பூர் தேசிய இரத்த வங்கி(pusat darah negara) ல் 07.04.2013 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது.இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு 30 பேர் இரத்த தானம் செய்தார்கள்.தேசிய இரத்த வங்கி சார்பாக நம் அமைப்பினரை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்கள்.

Monday, 25 February 2013

பினாங்கு-இரத்த தான் முகாம்

 மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் பினாங்கு கிளை சார்பாக 03.02.2013 அன்று பினாங்கு இரத்த வங்கியில் பினாங்கு கிளை தலைவர் அப்துல் கபூர் தலைமையில் இரத்த தான முகாம் நடைபெற்றது.இதில் 33 பேர் இரத்தம் கொடுத்தனர்.இதில் ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டனர்.




மருத்துவ உதவி

மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் கோலாலும்பூரில் கணவனின் மருத்துவ செலவிற்காக அவரின் மனைவியிடம் வெள்ளி.1000(ரூ.18.000) வழங்கப்பட்டது.

Monday, 28 January 2013

திருக்குர்ஆன் வழங்குதல்

மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக
ரவிராஜா என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் வழங்கப்பட்டது.
மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் மலாக்கா கிளை செயலாளர் தம்ரீன் அவர்கள் குர்ஆனை வழங்குகிறார்கள் .

Friday, 25 January 2013

விஸ்வரூபம் படத்தை கண்டித்து கடிதம்


மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் கோலாளும்பூரில் முஸ்லிம்களை தீவரவாதியாக சித்தரித்து எடுக்கப்பட்ட விஸ்வரூபம் படத்தை கண்டித்து 25.01.2013 அன்று காலை 10 மணிக்கு  மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக JAWI (கோலாளும்பூர் இஸ்லாமிய துறை)நிர்வாகியிடம் கடிதம் கொடுக்கப்பட்டது.மலேசியாவில் தடை என்று ஊடகங்களில் தகவல் வந்த போதும் இன்னும்  திரையரங்குகளில் ஓடுகிறது என்பதை எடுத்துச் சொல்லப்பட்டது.மேலும் தமிழகம் மற்றும் பல நாடுகளில் இந்த படம் தடை செய்யப்பட்டது என்கிற பத்திரிக்கை செய்திகளும் அவர்களிடம் காட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக JAWI நிர்வாகி வாக்களித்தார்.
இதை தொடர்ந்து விஸ்வரூபம் திரைப்படம் மதியம் அனைத்து தியேட்டர்களிலும் தடை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, 2 January 2013

இரத்த தான முகாம்

 மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் கோலாலும்பூரில் 01.01.2013 அன்று தேசிய இரத்த வங்கியில் TNTJ பொது செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் இரத்த தான முகாம் நடைபெற்றது.இதில் 25க்கும் அதிகமானோர் இரத்தம் கொடுத்தனர்.இதில் கலந்து கொண்டவர்களை பாராட்டி கோலாலும்பூர் தேசிய இரத்த வங்கி சார்பாக சான்றிதழ் மற்றும் டி-ஷர்ட் வழங்கினார்கள்.

Tuesday, 4 December 2012

மனித நேயப்பணி



அஸ்ஸலாமு அலைக்கும்
கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கத்தை சார்ந்த  சதக்கத்துல்லா என்ற 35 வயது நபர் மலேசியாவில் உள்ள பினாங்கு மாநிலத்தில் கடந்த 12.11.2012 அன்று விபத்துக்குள்ளாகி மரணமடைந்தார்.இதைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம் அப்துர் ரஜ்ஜாக் பாய் அவர்களும் ரியாத் மண்டலத்தை சார்ந்த தவ்ஹீத் சகோதரர்களும் மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு அவருக்கு மலேசியாவில் உறவினர்கள் யாரும் இல்லாததால் நம்முடைய  ஜமாஅத் அவருடைய உடலை அடக்கம் செய்ய கேட்டுக்கொண்டனர்.மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் பினாங்கு கிளை நிர்வாகிகளை தொடர்பு கொண்டு இது குறித்த விவரங்களை தெரிவித்தனர்.சதக்கத்துல்லா  அவர்களுடைய மரணம் சம்மந்தாமாக தேவைப்படும் ஆவணங்கள் அவருடைய ஊரிலிருந்து பெறப்பட்டது.பிறகு அவருடைய ஜனாஸா கடந்த 01.12.2012 அன்று பினாங்கு நிர்வாகிகளால் நபிவழியில் அடக்கம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ். மரணமடைந்தவரின் மைத்துனர் மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார்.  

Wednesday, 7 November 2012

மனித நேயப்பணி

காரைக்குடியை சார்ந்த ஹனீபா என்ற 41 வயதான நபர் கடந்த வியாழக்கிழமை மலேசியாவில்  மரணித்தார்.உறவினர்கள் யாரும் இல்லாமல் மரணித்ததால் மனித நேய அடிப்படையில் அவரின் ஜனாஸா செவ்வாய்க்கிழமை (06.11.12) அடக்கம் செய்யப்பட்டது.

Tuesday, 6 November 2012

கூட்டு குர்பானி

மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 31பங்கு மாட்டிற்கும்,1 ஆடும் கூட்டுக் குர்பானி வசூல் செய்யப்பட்டு தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Sunday, 14 October 2012

தலைமை கட்டிட நிதி


மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 10.10.12 அன்று  தலைமையின் கட்டிட நிதியாக ரூபாய்.2,30000 (இரண்டு லட்சத்து முப்பதாயிரம்) வழங்கப்பட்டது.

Sunday, 12 August 2012

பித்ரா வசூல்

மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 11.08.12 அன்று ரூ.19300 பித்ரா வசூல் செய்யப்பட்டு  TNTJ  
தலைமைக்கு அனுப்பப்பட்டது.

ஜகாத் உதவி

மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 09.08.12 அன்று TNTJ தலைமைக்கு ரூ 1 லட்சம் ஜகாத்  வசூல் செய்யப்பட்டு அனுப்பப்பட்டது. 

சேவைகள்


Monday, 2 July 2012

பொருளாதார உதவி

பொருளாதார உதவி

மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் கோலாலம்பூரில் 02.07.12 அன்று கணவனை இழந்து மூன்று குழந்தைகளுடன் சிரமப்படும் குடும்பத்திற்கு ஜகாத் நிதியிலிருந்து RM.2400 (RS.41,380) ரூபாய் பொருளாதார உதவி வழங்கப்பட்டது.

Monday, 21 May 2012

பொருளாதார உதவி

பொருளாதார உதவி:
மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 18.05.12 அன்று கூத்தாநல்லூர் பொதுக்கூட்டத்திற்கு ரூ.30,000(முப்பதாயிரம்) பொருளாதார உதவி வழங்கப்பட்டது.

Sunday, 13 May 2012

தொழில் செய்யும் முறை

தொழில் செய்யும் முறை


மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 12.05.12 அன்று கோலாலம்பூர் மர்கசில் தொழில் செய்யும் முறை பற்றி வகுப்பு நடத்தப்பட்டது.இதில் சகோ. அபாங் அபு அவர்கள் கலந்து கொண்டு தொழில் செய்யும் முறை பற்றி விளக்கினார்கள்.இதில் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.