part-7
ஆர்வக் கோளாறு காரணமாக ரஜப் மாதம் பற்றி இடுக்ககட்டப்பட
செய்திகள்
p.jainul abideen
மார்க்கத்தில் ஆர்வமிருந்தும் அறிவு
இல்லாத மூடக் கூட்டத்தினர் நல்ல நோக்கத்தில் ஹதீஸ்களைச் சுயமாகத் தயாரித்தனர்.
மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களுக்கு குர்ஆனிலும்,ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலும் எவ்வளவோ
சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. அவை இவர்களுக்குப் போதாததால் அந்த வணக்கங்களுக்கு
இல்லாத சிறப்புகளை உருவாக்கினார்கள்.
இருக்கின்ற வணக்கங்களுக்கு இல்லாத சிறப்புகளை
உருவாக்கியதோடு நின்று விடவில்லை. புதிது புதிதாக வணக்கங்களையும் பொய்யான ஹதீஸ்கள்
மூலம் உருவாக்கினார்கள்.
المنار المنيف - (ج 1 / ص 96)
وكل حديث في ذكر صوم رجب وصلاة بعض الليالي فيه فهو كذب مفترى كحديث
من صلى بعد المغرب أول ليلة من رجب عشرين ركعة جاز على الصراط بلا حساب
ரஜப் மாத நோன்பு பற்றி கூறப்படும் அனைத்து
ஹதீஸ்களும் ஆதாரமற்றவை.
المنار المنيف - (ج 1 / ص 98)
ومنها 15 أحاديث صلاة ليلة النصف من شعبان
175 - كحديث يا علي من صلى ليلة النصف من شعبان مئة ركعة بألف قل هو الله
أحد قضى الله له كل حاجة طلبها تلك الليلة وساق جزافات كثيرة وأعطي سبعين ألف
حوراء لكل حوراء سبعون ألف غلام وسبعون ألف ولدان إلى أن قال ويشفع والداه كل واحد
منهما في سبعين
ஷஅபான் மாதம் பதினைந்தாம் இரவில் நூறு ரக்அத் தொழுவது மற்றும் அந்த இரவின்
சிறப்பு பற்றிய ஹதீஸ்கள் அனைத்துமே ஆதாரமற்றவை
الموضوعات للصغاني - (ج 1 / ص 72)
ومنها الأحاديث الموضوعة في فضيلة رجب
ரஜப் மாதத்தின் சிறப்பு பற்றிய ஹதீஸ்கள்
அனைத்தும் ஆதாரமற்றவை.
كشف الخفاء - (ج 2 / ص 421)
وباب صلاة الرغائب وصلاة نصف شعبان وصلاة نصف رجب وصلاة الإيمان
وصلاة ليلة المعراج وصلاة ليلة القدر وصلاة كل ليلة من رجب وشعبان ورمضان ، وهذه
الأبواب لم يصح فيها شئ أصلا . وباب صلاة التسابيح لم يصح فيه حديث . وباب زكاة
الحلي لم يثبت فيه شئ
ஷஃபான் பதினைந்துக்கான தொழுகை, ரஜப் பதினைந்துக்கான தொழுகை,
மிஃராஜ் இரவுத் தொழுகை, லைலதுல் கத்ர்
இரவுக்கான தொழுகை குறிப்பிட்ட பகல் குறிப்பிட்ட இரவுக்கென்று குறிப்பிட்ட
வணக்கங்கள் ஆகிய அனைத்து ஹதீஸ்களும் ஆதாரமற்றவை.
முஹம்மத் என்ற பெயரைக் கேட்டவுடன் கட்டை விரல்
நகங்களால் கண்களைத் தடவுதல்
அமல்களில் ஆர்வமூட்டுவதாக எண்ணி இட்டுக்
கட்டப்பட்டவைகளுக்கு இவை உதாரணங்கள்.
No comments:
Post a Comment