onlinepj.com
குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்கள் நோன்பை விட்டு
விடுவதற்குச் சலுகை பெற்றுள்ளனர். பாலூட்டும் சமயத்திலும் பெண்களுக்கு போதிய உணவு
அவசியம் என்பதால் இவர்களும் நோன்பு நோற்பதில் மார்க்கம் சலுகையளிக்கின்றது.
2276 أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ قَالَ حَدَّثَنَا
مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ عَنْ وُهَيْبِ بْنِ خَالِدٍ قَالَ حَدَّثَنَا عَبْدُ
اللَّهِ بْنُ سَوَادَةَ الْقُشَيْرِيُّ عَنْ أَبِيهِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ
رَجُلٌ مِنْهُمْ أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
بِالْمَدِينَةِ وَهُوَ يَتَغَدَّى فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ هَلُمَّ إِلَى الْغَدَاءِ فَقَالَ إِنِّي صَائِمٌ فَقَالَ لَهُ
النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ وَضَعَ
لِلْمُسَافِرِ الصَّوْمَ وَشَطْرَ الصَّلَاةِ وَعَنْ الْحُبْلَى وَالْمُرْضِعِ
رواه النسائي
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
பயணத்தில் உள்ளவருக்கு நோன்பைûயும் தொழுகையில் பாதியையும் இறைவன்
தளர்த்தியுள்ளான். மேலும் பாலூட்டும் பெண்ணுக்கும் கற்பிணிக்கும் (நோன்பு
நோற்காமல் இருக்க சலுகை வழங்கியுள்ளான்.)
நூல் : நஸாயீ (2276)
நோன்பு வைத்துக்கொண்டு குழந்தைக்கு பாலூட்டினால் தாயும்
குழந்தையும் பாதிக்கப்படலாம். எனவே பாலூட்டும் தாய் நோயாளியுடைய நிலையில்
இருக்கின்றார். இவர் நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது.
நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில்
கணக்கிட்டுக் கொள்ளலாம்.
அல்குர்ஆன் 2:184
அதே நேரத்தில் நோயாளி நோய் நீங்கிவிட்டால் விடுபட்ட நோன்பை
நோற்பது கடமையாகும். எனவே பாலூட்டும் பெண் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போது
விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
No comments:
Post a Comment