10வது நாளும் 11வது நாளும் நோன்பு நோற்கலாமா?
சிலர் 10,11 வது நாள் நோன்பு நோற்கலாம் எனக் கூறுகின்றனர்.
அதற்கு பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
நபி(ஸல்)
அவர்கள் கூறினார்கள்:
ஆஷூரா
நோன்பு வையுங்கள். அதில் யூதர்களுக்கும் கிறிஸ்தவர் களுக்கும் மாற்றம்
செய்யுங்கள். அதற்கு முந்திய நாளோ அல்லது அதற்கு பிந்திய நாளோ நோன்பு நோற்றுக்
கொள்ளுங்கள்.
அறிவிப்பவர்:
இப்னு அப்பாஸ்(ரலி)
நூல்:
அஹ்மத் 2047, பைஹகீ
இது
தொடர்பான அனைத்து அறிவிப்புகளிலும் இப்னு அபீ லைலா என்பவர் இடம் பெறுகிறார். இவர்
மனன சக்தியில் மிக மோசமானவர் ஆவார். மேலும் இவரை அறிஞர்கள் பலவீனமானவர் என்றும்
கூறியுள்ளனர். எனவே, இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.
முஹர்ரம் 9,10 வது நாள் நோன்பு நோற்க வேண்டும் என்று வரக்
கூடிய செய்திகள் தான் ஆதாரப் பூர்வமானவை ஆகும். எனவே, 10,11வது நாள்
நோன்பு நோற்பது கூடாது.
onlinepj.com
onlinepj.com
No comments:
Post a Comment