Wednesday, 13 March 2013

திக்ரு செய்வோம்.


بسم الله الر حمن الر حيم
திக்ரு செய்வோம்.

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நவீன கலாச்சார மாறுபாட்டால் நேரத்தை பயனுள்ள வகையில் கழித்தல் என்பது அரிதாகிவிட்டது. நம்முடைய இம்மை மற்றும் மறுமை வாழக்கைக்கு பயன்படும் காரியங்களை செய்வது மிக,மிக குறைந்து வருகிறது. இதை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக திக்ரு செய்வோம் என்ற தலைப்பில் திக்ரின் நன்மை மற்றும் நினைவில் கொள்ள இலகுவான சில திக்ருகளையும் குறிப்பிடுகிறோம்.
திக்ரின் அவசியம்:
         
நாம் அனைவரும் இறைவனின் அடியார்கள், அவனே அனைத்து ஆற்றல்களும் பெற்றவன் என்பதை எல்லா நேரங்களிலும் உணர்த்த திக்ருகள்  அவசியமானதாகும்.மேலும் நாம் செய்த பாவங்களுக்கு பரிகாரம் பெற திக்ருகள் மிகவும் பயன்படுகிறது.
திக்ரு செய்யாதவன் பிணத்திற்கு சமம்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றுகின்றவரின் நிலை உயிருள்ளவரின் நிலைக்கும், தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றாதவரின் நிலை உயிரற்றவரின் நிலைக்கும் ஒத்திருக்கிறது.
அறிவிப்பவர்: அபூமூசா (ரலி)  நூல்: புகாரி 6407

இறைவன் உங்களை நினைக்க வேண்டுமா?
எனவே என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கிறேன்.எனக்கு நன்றி செலுத்துங்கள்! எனக்கு நன்றி மறக்காதீர்கள்! (அல்குர்ஆன்: 2:152)
உள்ளம் அமைதி பெறவேண்டுமா?
நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. (அல்குர்ஆன்: 13:28)
சப்தமிட்டு திக்ரு செய்யக்கூடாது:
உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும்,சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்!    (அல்குர்ஆன்: 7:205)
அதிக பலன்தரும் சிறிய  திக்ருகள்:
1.நாவிற்கு எளிதானது மறுமையில் தராசில் கனமானது:
سُبْحَانَ الْلَّهِ وَبِحَمْدِهِ ... سُبْحَانَ الْلَّهِ الْعَظِيْمِ
சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி,சுப்ஹானல்லாஹில்அழீம் 
பொருள்: கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கின்றேன்; அவனைப் போற்றிப் புகழ்ந்து துதிசெய்கின்றேன்.
           புகாரி:6406
2.கடல் நுரையளவு பாவம் மன்னிக்கப்பட வேண்டுமா?
سُبْحَانَ الْلَّهِ وَبِحَمْدِهِ ஒரு நாளில் 100 முறை  கூறினால்
அவரது பாவம் கடல் நுரையளவு இருந்தாலும் மன்னிக்கப்படும்.
அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ரலி)        நூல்: புகாரி 6405
3.ஒரு துஆவில் மூன்று பலன்கள்:
لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ  شَيْءٍ قَدِيْرٌ
தினமும் 100 முறை ஓதினால்
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து,வஹு அலா குல்லி ஷையின் கதீர்.
இதன் பொருள்:
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. ஆட்சி அவனுக்குரியதே. புகழும் அவனுக்குரியதே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.
1.நூறு நன்மை எழுதப்படும்.2. நூறு தீமை அழிக்கப்படும் 3.மாலை வரை ஷைத்தானிடம் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.                   புகாரி:3293


4. சொர்கத்தின் கருவூலமான வார்த்தை:
لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِالله
லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்
அல்லாஹ்வின் உதவியன்றி பாவங்களிலிருந்து விலகிச் செல்லவோ, நல்லறங்கள் புரிய வலிமை பெறவோ மனிதனால் இயலாது.                                        புகாரி:6409
5. சொர்கத்தின் எட்டு வாசல் உங்களுக்காக திறக்கப்பட வேண்டுமா?
உளுச் செய்த பின்னர்
أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُ اللهِ وَرَسُوْلُهُ
அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅன்ன முஹம்மதன் அப்(B]துல்லாஹி வரஸுலுஹு
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனது தூதர் என்றும் உறுதியாக நம்புகிறேன்.    ஆதாரம்: முஸ்லிம் 345.

No comments:

Post a Comment