Sunday 12 August 2012

பித்ரா வசூல்

மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 11.08.12 அன்று ரூ.19300 பித்ரா வசூல் செய்யப்பட்டு  TNTJ  
தலைமைக்கு அனுப்பப்பட்டது.

ஜகாத் உதவி

மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 09.08.12 அன்று TNTJ தலைமைக்கு ரூ 1 லட்சம் ஜகாத்  வசூல் செய்யப்பட்டு அனுப்பப்பட்டது. 

சேவைகள்


வாராந்தர பயான் Ceramah Mingguan


மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 12.08.12 அன்று கோலாலம்பூர் மர்கசில் வாராந்தர பயான் நடைபெற்றது.நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி-பதில் நடந்தது..இதில் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
(Ceramah mingguan yang telah diadakan oleh MALAYSIA THOWHEED JAMATH, berlangsung di Markas KL pada 12.08.2012 mendapat sambutan yang menggalakkan. Ceramah ini diakhiri dengan sesi soal jawap.)

Tuesday 7 August 2012

இப்தார் மற்றும் பயான் நிகழ்ச்சி.(BUKA PUASA)

மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக
கோலாலும்பூர் மர்கசில் 05.08.12 அன்று இப்தார் மற்றும் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பலர் கலந்து கொண்டனர்.

Friday 3 August 2012

ஈத் முபாரக் சொல்லலாமா?


ஈத் முபாரக் சொல்லலாமா?


onlinepj.com
பெருநாள் தினத்தில் ஒருவருக்கொருவர் ஈத் முபாரக் என்று சொல்லும் வழக்கம் சமுதாயத்தில் பரவி வருகிறது. இது இஸ்லாத்தின் முக்கியமான ஒரு நபிவழி என்பது போல் மக்களால் கருதப்படுகிறது. 

ஒருவர் தனது தாய் மொழியில் தனக்கு விருப்பமான சொற்களைப் பயன்படுத்தி குர்ஆன் ஹதீசுக்குமுரணில்லாத வகையில் துஆச் செய்யும் வகையில் வாழ்த்துவது தவறில்லை. அல்லாஹ்உங்களுக்கு அருள் புரியட்டும்; மகிழ்ச்சியைத் தரட்டும் என்றெல்லாம் கூறுவதில் மறுப்பு இல்லை.
ஆனால் குறிப்பிட்ட ஒரு சொல்லை அனைவரும் சொல்ல வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்துவதுஎன்றால் அது அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மட்டும் உள்ள அதிகாரமாகும்.
ஈத் முபாரக் என்ற சொல்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு தடவை கூடபயன்படுத்தியதில்லை. அவர்கள் பயன்படுத்தாத இச்சொல்லை அவர்கள் பயன்படுத்தினார்கள் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி அதை ஒரு சுன்னத் போல் ஆக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது.நபிகள் நாயகம் (ஸல்) சொல்லித் தந்தவைகளை மட்டும் தான் அப்படியே அரபு மொழியில் சொல்லவேண்டும். மற்ற விஷயங்கள் அவரவர் தாய் மொழியில் தான் இருக்க வேண்டும்.
அப்போது தான் அது ஒரு சுன்னத் என்ற நிலையை அடையாது.
யாரோ ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கிய ஒரு சொல் அனைத்து முஸ்லிம்களாலும்கடைப்பிடிக்கப்படுகிறது என்றால் இதை எப்படிச் சகிக்க முடியும்? நபியின் இடத்தில் யாரையும் நாம்வைக்க முடியாது என்பதில் உறுதியாக இருப்பவர்கள் அவரவர் மொழியில் தான் வாழ்த்துக்களைப்பரிமாறிக் கொள்வார்கள்

Thursday 2 August 2012

வாராந்தர பயான் Ceramah Mingguan


மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 28.07.12 அன்று கோலாலம்பூர் மர்கசில் வாராந்தர பயான் நடைபெற்றது.நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி-பதில் நடந்தது..இதில் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
(Ceramah mingguan yang telah diadakan oleh MALAYSIA THOWHEED JAMATH, berlangsung di Markas KL pada 28.07.2012 mendapat sambutan yang menggalakkan. Ceramah ini diakhiri dengan sesi soal jawap.)