Wednesday 27 June 2012

புகை நமக்கு பகை (புகைப்படத்துடன்)

புகை நமக்கு பகை




بسم الله الر حمن الر حيم
மெல்லக் கொல்லும் புகைப் பழக்கம்
இப்னு சாபிரா
தீன்குலப்பெண்மணி
பல கொடிய பழக்கங்களால் மனிதன் இன்று தன்னைத் தானே மாய்த்து கொண்டு வருகிறான். எந்தளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்து, நோய்களுக்கு புது மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறதோ,அதே வேகத்தில் மனிதன் தீய பழக்கங்களால் தன்னை அழித்துக் கொள்ளும் கொடுமையும் அதிகரித்து வருகிறது. 
மனிதனை கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லக் கூடிய கொடிய பழக்கங்களில் ஒன்று புகைப் பழக்கம்.  ஆண்கள் மட்டுமில்லாமல் பெண்களிடையே கூட இப்பழக்கம் ஊடுருவி வருவதாக செய்திகள் கூறுகின்றன. நம்முடைய சமுதாயத்து பெண்மணிகள் அக்கொடிய பழக்கத்திற்கு ஆளாகாமல் இருக்கவும், புகைப் பிடிக்கும் தன்னுடைய கணவன்மார்களையும் உறவினர் களையும் மற்றும் தம் குழந்தைகளையும் திருத்தவும் புகை பழக்கத்தின் பாதகங்கள் இங்கு விளக்கப்படுகின்றன.
புகை பிடிப்பதினால் பின்வரும் பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவ உலகம் கூறுகிறது.
 காச நோய்
 நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்
 இருதய நோய் மற்றும் குருதிக் (இரத்தக்) குழல் நோய்
 புற்று நோய்
 ஆண்மை குறைவிற்கான சாத்தியக் கூறுகள்
Smoking is Injuries to Health (புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது)
என்று கொட்டை எழுத்துக்களில் எழுதப்பட்ட பாக்கெட்டுகளிலி-ருந்து நாம் எடுத்து ஊதும் பீடி மற்றும் சிகரெட் தான் இவ்வளவு மாபாதகங்களை விளைவிக்கிறது.
புண்பட்ட மனதை புகைப்பிடித்து ஆற்றுவது என விதாண்டவாதம் பேசி ஊதி தள்ளுவதால் ஏற்படும் ரணங்களுக்கு எந்த மருந்தும், மாத்திரைகளும் அந்த ரணங்களை ஆற்றாது என்பது அறிவியல் உலகம் கூறும் நிதர்சனமான உண்மை.  எனவே தான் இத்தீமைக்கு எதிராக அரசுகளும்,தன்னார்வ அமைப்புகளும் உலகளாவிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.
புகையிலை அதை உபயோகப்படுத்தும் 50 சதவீத மக்களை கொல்கிறது என்ற உண்மையை உலக சுகாதார மையம் (WHO) வெளியிட்டுள்ளது.  தற்போது உலக மக்கள் தொகையில் 1.3 பில்-யன் மக்கள் புகைப்பிடிப்பவர்கள் என்ற புள்ளி விவரத்தை உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ளது. இந்த கணக்குபடி பார்த்தால், உலகில் 650 மில்-யன் மக்கள் இக்கொடிய பழக்கத்தால் கொல்லப்படுவார்கள்.  எந்த போர்களும், இயற்கை பேரழிவுகளும், கொடிய விபத்துக்களும் ஏற்படுத்தாத மாபாதக்தை இந்த ஊதி தள்ளும் பழக்கம் ஏற்படுத்துகிறது என்றால், கல் நெஞ்சங்களை கரைய வைக்கும் இப்புள்ளி விவரம், புகைப்பிடிப்பவர்களின் நெஞ்சங்களை உறைய வைத்து இக்கொடிய பழக்கத்தை விட்டு ஒழிக்க வழிகோலுமா?
உடல் திடகாத்திரத்தை குறிக்கும் வண்ணம் கல்லையும் சாப்பிட்டு செமிக்க செய்யும் பருவம் என இளம் பருவத்தை பற்றி குறிப்பிடும் வழக்கம் நம்மிடையே உள்ளது. ஆனால், 20 வயதிற்கு உட்பட்டவர்கள் இனி சிகரெட் வாங்க முடியாது என உலகின் பல நாடுகளின் அரசாங்கங்கள் அறிவித்து இருப்பது புகை பிடித்த-ன் கொடுமையை உணர போதுமானது
பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு உலகில் பல்வேறு நாடுகளில் தடை
யு கே மற்றும் ஜெர்மனி நாடுகளில் சிகரெட் வாங்குவதற்கு 16-18 வயது இருக்க வேண்டும் என அறிவிப்பு.
அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் சிகரெட் வாங்குவதற்று 18-19 வயது இருக்க வேண்டும் என அறிவிப்பு.
வேஷக்காட்சிகளின் தொகுப்பான சினிமா தான் நிஜம் என்று பெரும்பாலோர் நம்புவதால், சினிமா நடிகர்கள் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்கக்கூடாது என இந்திய அரசின் வேண்டுகோள்
புகையிலை உபயோகத்தை கட்டுப்படுத்த, குறிப்பாக கல்லாதவர்களிடமும் ஏழைகளிடமும் தக்க விழிப்புணர்வை ஏற்படுத்த இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் என இக்கொடுமைக்கு எதிராக அரசாங்கங்களும் களம் இறங்கியுள்ளன.  இருந்தபோதிலும், மக்களை கவரும் விளம்பரங்களுடன் புகையிலை நிறுவனங்கள் விளம்பர சந்தையில், மக்களை சிறிது சிறுதாக அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கின்றன.
மிகக் கொடிய தாக்கத்தை ஏற்படுத்தும் புகைப்பழக்கத்தைப் பற்றி இஸ்லாமிய மார்க்கம் என்ன தான் சொல்கிறது?
புகைபிடித்தல் என்பது மார்க்கத்திற்கு மாற்றமான ஒரு வீணாண காரியமாகும். இது உடலுக்கு கேடானது மற்றுமல்லாமல் வீண்விரையமாகும். நம்முடைய உடலுக்கு நாம் தீங்கிழைத்துக் கொள்வதை திருமறைக் குர்ஆன் கடுமையாகக் கண்டிக்கிறது.
உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்
(அல் குர்ஆன் 2:195)


இங்கே கிளிக் பண்ணவும்


உங்களையே கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.
(அல் குர்ஆன் 4:29)
வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான்.                         
அல்குர்ஆன் (6:14))
உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.        
(அல் குர்ஆன் 7:31)
விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.                                                  
(அல் குர்ஆன் 17:27)
மேற்கண்ட வசனங்கள் அனைத்தும் புகைபிடித்தல் எவ்வளவு கடுமையான குற்றம் என்பதை நமக்கு தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. இறைவன் ஒரு செயலை தடைசெய்து விட்டான் என்றால் அதை தவிர்ந்து கொள்ள வேண்டும். மாறாக அதைப் பற்றி வீணான கேள்விகளைக் கேட்பது கூடாது. புகை பிடித்தல் என்பது ஒரு மோசமான, தடைசெய்யப்பட்ட காரியமாகும். இதனை எல்லாக் காலங்களிலும் கண்டிப்பாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
இது மட்டுமின்றி நாம் புகைப்பிடித்து கறியாக்கும் ஒவ்வொரு காசுக்கும் வல்ல ரஹ்மானிடம் பதில் சொல்லியாக வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக ஆரோக்கியமும், உடலும் வல்ல அல்லாஹ் கொடுத்த வரங்கள். அதை நம்முடைய கைகளால் பாழ்படுத்திக் கொள்வதைப்பற்றி மறுமையில் கேள்வி உண்டு.
பின்னர் அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள்      
(அல்குர்ஆன் 102 : 8)
புகைப்பிடிப்பவா;கள் புகைப்பிடிப்பதால் தன்னுடைய உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக்கொள்வது மட்டுமின்றி, தன்னை சுற்றி இருப்பவர்களின் ஆரோக்கியத்தையும் கெடுக்கின்றனர்.  இவ்வாறு செய்வது ஒரு இறை நம்பிக்கையாளனின் பண்பாக இருக்காது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரது நாவு மற்றும் கையி(ன் தொல்லைகளி)-ருந்து பிற முஸ்-ம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே (உண்மையான) முஸ்-ம் ஆவார். எவர் அல்லாஹ் தடை விதித்தவற்றி-ருந்து விலகிக்கொண்டாரோ அவரே முஹாஜிர் (துறந் தவர்) ஆவார்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),
நூல் : புகாரி (10)
எனவே, மறுமையை நம்பக்கூடிய ஒவ்வொரு முஸ்லி-மும் புகைப்பழக்கம் என்ற கொடிய பழக்கத்தை விட்டு ஒதுங்கி, வல்ல இறைவனிடம் பாவ மன்னிப்பு தேடி, மற்றவர்களின் உடல் நலத்தையும் கெடுக்காமல் இருக்க சபதம் எடுக்க வேண்டும்.  இல்லையெனில் அல்லாஹ்வின் பிடி மிகவும் கொடியது என மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
இக்கொடிய பழக்கத்திற்கு எதிராக பெண்களும் களம் இறங்கி இப்பழக்கத்திற்கு ஆளாகி இருக்கும் தன்னுடைய குடும்ப ஆண்களையும் திருத்தி முயற்சி செய்ய வேண்டும்.
நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள்.  அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்;ஞானமிக்கவன்.                      (அல்குர்ஆன் 9:71)
வல்ல ரஹ்மான் நம் அனைவரையும் ஷைத்தானின் அனைத்து வித தாக்கங்களி-லிருந்தும் காப்பாற்றுவானாக.


No comments:

Post a Comment