Sunday 31 March 2013

உள்ளரங்கு நிகழ்ச்சி-பினாங்கு


மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் பினாங்கு கிளையில் கோம்ப்லெக்ஸ் மஷரகட் அரங்கத்தில் 30.03.2013 அன்று உள்ளராங்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பினாங்கு கிளை தலைவர் அப்துல் கபூர் அவர்கள் தலைமை உரையாற்றினார்கள்.பிறகு சகோ.யாசர் அரபாத் அவர்கள் நாங்கள் சொல்வதென்ன என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி-பதில் நடைபெற்றது.இதில் ஆண்களும்,பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்


வாராந்திர பயான்


மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் கோலாலும்பூர் மர்கஸில் 30.03.2013 அன்று வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மார்க்கம் சம்மந்தமாக கலந்துரையாடல் செய்யப்பட்டது.இதில் பலர் கலந்து கொண்டனர்

உள்ளரங்கு நிகழ்ச்சி -பினாங்கு கிளை


மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் பினாங்கு கிளையில் 29.03.2013 அன்று கோம்லெக்ஸ் மஷரகட் அரங்கத்தில் உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பினாங்கு கிளை தலைவர் அப்துல் கபூர் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்கள்.பிறகு  சகோ.யாசர் அரபாத் அவர்கள் குர்ஆனும் அறிவியலும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி-பதில் நடைபெற்றது.இதில் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டு பயன் பெற்றனர்

பினாங்கு கிளை DVD விநியோகம்

மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் பினாங்கு கிளையில் 28.03.2013 அன்று வலிமார்களின் சிறப்பு என்று பதிக்கப்பட்ட தர்கா வழிபாடு DVD 100DVDகல் விநியோகம் செய்யப்பட்டது.

Thursday 28 March 2013

பினாங்கு கிளை-தனி நபர் தாவா

மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் பினாங்கு கிளையில் 27.03.2013 அன்று இளைஞர்களை சந்தித்து தனி நபர் தாவா செய்யப்பட்டது.

பினாங்கு கிளை தொழுகை பயிற்சி

மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் பினாங்கு கிளையில் 27.03.2013 அன்று மர்கசில் தொழுகை பயிற்சி நடிபெற்றது.இதில் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Wednesday 27 March 2013

பினாங்கு கிளை பயான் நிகழ்ச்சிகள்

 மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் பினாங்கு கிளையில் 25,26.03.2013 அன்று பயான் மற்றும் கேள்விபதில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இதில் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Sunday 24 March 2013

ஆன்லைன் பெண்கள் பயான்


அஸ்ஸலாமு அலைக்கும் 
மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் கோலாலும்பூர் காஜாங்  பகுதியில்  24.03.2013 அன்று ஆன்லைன் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் M.S சுலைமான் அவர்கள் சொர்கத்தை நேசிப்போம் என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.அதன் பிறகு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

வாராந்திர பயான்


மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக23.03.13 அன்று கோலாலம்பூர் மர்கசில் வாராந்தர பயான் நடைபெற்றது.நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி-பதில் நடந்தது..இதில் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
(Ceramah mingguan yang telah diadakan oleh MALAYSIA THOWHEED JAMATH, berlangsung di Markas KL pada 23.03.2013 mendapat sambutan yang menggalakkan. Ceramah ini diakhiri dengan sesi soal jawap.)

Saturday 23 March 2013

ஷா ஆலம் பகுதி-தனி நபர் தாவா

 மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் கோலாலும்பூரில் 22.03.2013 அன்று ஷா ஆலம்  பகுதியில்   இஸ்லாமியர்கள் மற்றும் மாற்று மதத்தவர்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி தனி நபர் தாவா செய்யப்பட்டது.

Friday 22 March 2013

பூசோங் பகுதி-தனி நபர் தாவா

 மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் கோலாலும்பூரில் 22.03.2013 அன்று பூசோங்  பகுதியில்  வீடு வீடாக சென்று இஸ்லாமியர்கள் மற்றும் மாற்று மதத்தவர்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி தனி நபர் தாவா செய்யப்பட்டது.



Sunday 17 March 2013

தனி நபர் தாவா

 மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் கோலாலும்பூரில் 17.03.2013 அன்று ஸ்தபாக் ஜெயா பகுதியில்  வீடு வீடாக சென்று இஸ்லாமியர்கள் மற்றும் மாற்று மதத்தவர்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி தனி நபர் தாவா செய்யப்பட்டது.

Al-Quran adalah kata-kata Tuhan (Allah)


Al-Quran adalah kata-kata Tuhan (Allah)

Al-Quran diturunkan 1400 tahun dahulu kepada Nabi terakhir iaitu Nabi Muhammad S.A.W sebagai panduan kepada seluruh umat manusia.
Al-Quran tidak ada perselisihan, tidak ada penipuan dan tidak ada kata-kata kesat / lucah. Oleh itu, terbukti bahawa Al-Quran adalah kata-kata Tuhan (Allah).
Al-Quran Menggalakkan Kita Berfikir
Ayat Al-Quran :
أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَيْرِ اللَّهِ لَوَجَدُوا فِيهِ اخْتِلَافًا كَثِيرًا
Terjemahan:
Patutkah mereka, tidak mahu memikirkan isi Al-Quran? Kalaulah Al-quran itu bukan dari sisi Tuhan (Allah), nescaya mereka akan dapati perselisihan yang banyak di dalamnya.
(Quran 4:82)
Al-Quran Terbukti Dengan Sains
Dengan adanya teknologi sains terkini, Al-Quran telah terbukti bahawa ianya adalah kata-kata Tuhan (Allah) melalui ayat-ayat yang terkandung di dalamnya.
Sebagai Contoh:
Bagaimana Gunung Menyelamatkan Bumi
Ayat Al-Quran:
وَالْجِبَالَ أَرْسَاهَا
Terjemahan:
Dan gunung-ganang pula dikukuhkan letaknya (di bumi, sebagai pancang pasak yang menetapnya)
(Quran 79:32)

Al-Quran dan Sains
Sebab-sebab Tuhan (Allah) mengatakan gunung-ganang sebagai pasak.
1.      Dalam ayat ini Tuhan (Allah) berkata bahawa gunung sebagai pasak (peg) 
2.      Pasak bermaksud sesuatu yang mencantumkan dua benda yang berlainan
3.      Kita dapat melihat gunung di sekeliling kita tetapi kita tidak mengetahui bagaimana ia di pasak (peg) ke bumi.
4.      Bumi terdiri daripada pelbagai lapisan iaitu lapisan yang berat dan ringan.
5.      Bumi berputar dengan kelajuaan 1675 km/j dan mengelilingi matahari dengan kelajuaan lebih daripada 100,000 km/j.
6.      Disebabkan lapisan bumi yang berlainan, kehidupan serta bangunan yang berada pada permukaan bumi akan tercampak apabila ia berputar dengan kelajuan 1675 km/j.
7.      Oleh itu Tuhan (Allah) memacakkan gunung pada bumi supaya permukaan bumi berputar selaras dengan lapisan–lapisan yang lain pada bumi.
8.      Saintis telah membuktikan bahawa jarak dasar gunung daripada permukaan bumi ialah 10 hingga 15 kali ganda ketinggian gunung tersebut. Sebagai contoh, ketinggian gunung Everest ialah 9km manakala dasar gunung tersebut adalah 125km dari permukaan bumi.
9.      Di dalam Al-Quran, Tuhan (Allah) mengatakan bahawa Dialah yang memacakkan gunung pada bumi supaya bumi tetap dan stabil.
                  Ayat Al-Quran :
وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَنْ تَمِيدَ بِكُمْ وَأَنْهَارًا وَسُبُلًا لَعَلَّكُمْ تَهْتَدُونَ
Terjemahan:
Dan Dia mengadakan di bumi gunung-ganang yang menetapnya supaya ia tidak menghayun-hayunkan kamu; dan Dia mengadakan sungai-sungai serta  jalan-jalan lalu lalang, supaya kamu dapat sampai ke matlamat yang kamu tuju.
(Quran 16:15)

10.  Saintis juga menggunakan perkataan pasak (peg) seperti mana Tuhan (Allah) telah mengunakanya dalam Al-Quran.
Peringataan:
Sains telah membuktikan gunung dipasak (peg) kebumi pada abad ke-19, manakala Al-Quran telah membuktikan 1400 tahun dahulu.
Nabi Muhammad S.A.W ialah seorang yang tidak berpelajaran dan tidak mempunyai pengetahuan dalam ilmu sains. Dengan itu, bagaimana Nabi Muhammad S.A.W boleh mengetahui tentang perkara ini pada 1400 tahun yang dahulu.   
Oleh itu, ini membuktikan bahawa Al-Quran adalah kata-kata Tuhan (Allah). 

ஆன்லைன் நிகழ்ச்சி

மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் கோலாலும்பூர் மர்கசில் 16.03.2013 அன்று ஆன்லைன் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் M.I சுலைமான் அவர்கள் இணைவைக்கும் பள்ளியில் தொழலாமா? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அதன் பிறகு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Wednesday 13 March 2013

திக்ரு செய்வோம்.


بسم الله الر حمن الر حيم
திக்ரு செய்வோம்.

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நவீன கலாச்சார மாறுபாட்டால் நேரத்தை பயனுள்ள வகையில் கழித்தல் என்பது அரிதாகிவிட்டது. நம்முடைய இம்மை மற்றும் மறுமை வாழக்கைக்கு பயன்படும் காரியங்களை செய்வது மிக,மிக குறைந்து வருகிறது. இதை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக திக்ரு செய்வோம் என்ற தலைப்பில் திக்ரின் நன்மை மற்றும் நினைவில் கொள்ள இலகுவான சில திக்ருகளையும் குறிப்பிடுகிறோம்.
திக்ரின் அவசியம்:
         
நாம் அனைவரும் இறைவனின் அடியார்கள், அவனே அனைத்து ஆற்றல்களும் பெற்றவன் என்பதை எல்லா நேரங்களிலும் உணர்த்த திக்ருகள்  அவசியமானதாகும்.மேலும் நாம் செய்த பாவங்களுக்கு பரிகாரம் பெற திக்ருகள் மிகவும் பயன்படுகிறது.
திக்ரு செய்யாதவன் பிணத்திற்கு சமம்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றுகின்றவரின் நிலை உயிருள்ளவரின் நிலைக்கும், தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றாதவரின் நிலை உயிரற்றவரின் நிலைக்கும் ஒத்திருக்கிறது.
அறிவிப்பவர்: அபூமூசா (ரலி)  நூல்: புகாரி 6407

இறைவன் உங்களை நினைக்க வேண்டுமா?
எனவே என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கிறேன்.எனக்கு நன்றி செலுத்துங்கள்! எனக்கு நன்றி மறக்காதீர்கள்! (அல்குர்ஆன்: 2:152)
உள்ளம் அமைதி பெறவேண்டுமா?
நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. (அல்குர்ஆன்: 13:28)
சப்தமிட்டு திக்ரு செய்யக்கூடாது:
உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும்,சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்!    (அல்குர்ஆன்: 7:205)
அதிக பலன்தரும் சிறிய  திக்ருகள்:
1.நாவிற்கு எளிதானது மறுமையில் தராசில் கனமானது:
سُبْحَانَ الْلَّهِ وَبِحَمْدِهِ ... سُبْحَانَ الْلَّهِ الْعَظِيْمِ
சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி,சுப்ஹானல்லாஹில்அழீம் 
பொருள்: கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கின்றேன்; அவனைப் போற்றிப் புகழ்ந்து துதிசெய்கின்றேன்.
           புகாரி:6406
2.கடல் நுரையளவு பாவம் மன்னிக்கப்பட வேண்டுமா?
سُبْحَانَ الْلَّهِ وَبِحَمْدِهِ ஒரு நாளில் 100 முறை  கூறினால்
அவரது பாவம் கடல் நுரையளவு இருந்தாலும் மன்னிக்கப்படும்.
அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ரலி)        நூல்: புகாரி 6405
3.ஒரு துஆவில் மூன்று பலன்கள்:
لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ  شَيْءٍ قَدِيْرٌ
தினமும் 100 முறை ஓதினால்
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து,வஹு அலா குல்லி ஷையின் கதீர்.
இதன் பொருள்:
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. ஆட்சி அவனுக்குரியதே. புகழும் அவனுக்குரியதே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.
1.நூறு நன்மை எழுதப்படும்.2. நூறு தீமை அழிக்கப்படும் 3.மாலை வரை ஷைத்தானிடம் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.                   புகாரி:3293


4. சொர்கத்தின் கருவூலமான வார்த்தை:
لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِالله
லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்
அல்லாஹ்வின் உதவியன்றி பாவங்களிலிருந்து விலகிச் செல்லவோ, நல்லறங்கள் புரிய வலிமை பெறவோ மனிதனால் இயலாது.                                        புகாரி:6409
5. சொர்கத்தின் எட்டு வாசல் உங்களுக்காக திறக்கப்பட வேண்டுமா?
உளுச் செய்த பின்னர்
أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُ اللهِ وَرَسُوْلُهُ
அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅன்ன முஹம்மதன் அப்(B]துல்லாஹி வரஸுலுஹு
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனது தூதர் என்றும் உறுதியாக நம்புகிறேன்.    ஆதாரம்: முஸ்லிம் 345.