Saturday 29 December 2012

விவாத பயிற்சி


அஸ்ஸலாமு அலைக்கும் 
மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் கோலாலும்பூர் மர்கஸில் 26.12.2012 அன்று வரதட்சணைக்கு அதிகக் காரணம் ஆண்களா?பெண்களா? என்ற தலைப்பில் விவாத பயிற்சி நடைபெற்றது.இதில் சகோ.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் விவாத பயிற்சி மற்றும் அதன் நன்மைகள் குறித்து விளக்கினார்கள்.இதில் பலர் கலந்து கொண்டனர்.

பெண்கள் பயான்


அஸ்ஸலாமு அலைக்கும் 
மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் கோலாலும்பூர் பூசோங் பகுதியில் 27.12.2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.யாசர் அரபாத் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.பின்னர் சகோ.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் சுய பரிசோதனை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி-பதில் நடைபெற்றது.இதில் பலர் கலந்து கொண்டனர்.

Wednesday 26 December 2012

மலாக்கா கிளை

தலைவர்:உபய்துல்லாஹ் 0060105159284
செயலாளர் :முகம்மது தம்ரின் 0060166781079
பொருளாளர் :ஜாகிர் ஹுசைன் 0060146368720

பினாங்கு கிளை

தலைவர்: அப்துல் கஃபுர் (+6012-4593236)
செயலாளர்: முஹம்மது நூர்
பொருளாளர்: அசீசுல்

பெண்கள் பயான்

மலேசியா தவ்ஹீத் ஜமாஅத்  கோலாலும்பூர் கோம்பாக் பகுதியில்  25.12.2012 அன்று மாலை பெண்கள்  பயான் நடைபெற்றது.மண்டல பேச்சாளர் சகோ.யாசர் அரபாத் அவர்கள் சொர்க்கம் செல்லும் வழிகள்  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.பிறகு tntj பொது செயலாளர் சகோ.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் நரகம் செல்லாமல் காக்கும் வழிகள்  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.பின்னர் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர். 

மலாக்கா கிளை பயான்



மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் மலாக்கா கிளையில் 25.12.2012 அன்று காலை தாஜ் ரெஸ்டோரென்டில் உள்ளரங்கு  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மலாக்கா கிளை செயலாளர் தம்ரின் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.மண்டல பேச்சாளர் சகோ.யாசர் அரபாத் அவர்கள் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.பிறகு tntj பொது செயலாளர் சகோ.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் அழைப்புப் பணியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.இதில் ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர். 

Monday 24 December 2012

உள்ளரங்கு நிகழ்ச்சி

மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் கோலாலும்பூரில் 23.12.12 அன்று காலை விஸ்மா துன் சம்மந்தம் அரங்கில் உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் மண்டல தலைவர் சலீம் ஹுசைன் தலைமை தாங்கினார்கள். மலேசியா மண்டல பேச்சாளர் சகோ.யாசர் அரபாத் அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தின் செயல்பாடுகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.பிறகு TNTJ பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் இஸ்லாமும் இன்றைய முஸ்லிம்களின் நிலையும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பிறகு  கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் இறுதியில் சகோ.அயூப்கான் அவர்கள் நன்றியுரையாற்றினார்கள்.இதில் ஆண்களும்,பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். 

நிர்வாகம்


தலைவர்       :சலீம் ஹுசைன் 0060193185576
செயலாளர்  : பவ்ஜுல் அலீம்  0060193149748
பொருளாளர்: அன்வர்                 0060107774868
து.தலைவர்  :  தாஹிர் அலி      00601115400242
து.செயலாளர்: சர்புதீன்            0060166300741.
AJK
சாதிக்
கம்புங் பண்டான் அலி
அஜ்ஹர்
புர்ஹான் 

மண்டல பொதுக்குழு

மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக  கோலாலும்பூரில் உள்ள மர்கசில் 22.12.2012 இரவு மலேசியா மண்டல பொதுகுழு TNTJ மாநில பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.இதில் மண்டல முன்னாள் செயலாளர் சலீம் ஹுசைன் அவர்கள் செயல்பாட்டறிக்கை வாசித்தார்கள்.பொருளாளர் அயூப்கான் அவர்கள் கணக்குகளை சமர்ப்பித்தார்கள்.பினாங்கு கிளை தலைவர் அப்துல் கபூர் அவர்கள் பினாங்கு கிளையின் செயல்பாட்டறிக்கை வாசித்தார்கள்.பிறகு மலேசியா மண்டல புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.இதன் பிறகு சகோ.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் தலைமை கட்டிட நிதி,மாதாந்திர சந்தா பற்றாக்குறை சம்மந்தமாகவும், மலேசியா மண்டலத்தில் செய்ய வேண்டிய தாவா பணிகள் சம்மந்தமாகவும்  ஆலோசனைகள் வழங்கினார்கள்.இதில் பலர் கலந்து கொண்டனர்.
மலேசியா மண்டல புதிய நிர்வாகிகள்:
தலைவர்       :சலீம் ஹுசைன் 0060193185576
செயலாளர்  : பவ்ஜுல் அலீம்  0060193149748
பொருளாளர்: அன்வர்                 0060107774868
து.தலைவர்  :  தாஹிர் அலி      00601115400242
து.செயலாளர்: சர்புதீன்            0060166300741

Sunday 16 December 2012

இஸ்லாம் கூறும் இறுதி நாள் (21.12.2012 ல் உலகம் அழியுமா?)


بسم الله الر حمن الرحيم
இஸ்லாம் கூறும் இறுதி நாள்
 (21.12.2012 ல் உலகம் அழியுமா?)
யாசர் அரபாத்,மங்கலம்.
    உலக மக்கள் மத்தியில் பல நூற்றாண்டுகளாக குறிப்பட்ட ஒரு நாளில் உலகம் அழியப்போகிறது என்ற செய்தி பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது.
அதில் சமீபத்தில்
21.12.2012 அன்று உலகம் அழியப்போகிறது என்ற செய்தி மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகிறது. இது குறித்து இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை பற்றி நாம் இந்த கட்டுரையில் அறிந்து கொள்ள  இருக்கிறோம்.
உலகம் அழிவு நிச்சயம்
           
உலக அழிவு சம்மந்தமாக மற்ற மதங்களை விட இஸ்லாமிய மார்க்கம் உலக அழிவு என்பதை அடிப்படை கொள்கையாக கொண்டுள்ளது.
ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் அவர் ஆறு விஷயங்களை கட்டாயமாக நம்ப வேண்டும்.
1. அல்லாஹ்வை நம்புதல்.
2.மலக்குமார்களை நம்புதல்
3.வேதங்களை நம்புதல்
4.தூதர்களை நம்புதல்
5.விதியை நம்புதல்
6. உலகம் அழிக்கப்பட்டு அனைவரும் அல்லாஹ்வின் முன் எழுப்பப்படும் மறுமையை நம்புதல்.
எனவே உலகம் அழியும் என்பதை இஸ்லாம் அடிப்படை கொள்கையாக வைத்துள்ளது.
உலக அழிவை மறுப்பவன் நரகவாசி:

       
உலகம் அழியும் என்பதை யார் மறுக்கிறார்களோ அவர்கள் நரகவாசி என்பதாக அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்.

50. "அவனது வேதனை இரவிலோ, பகலிலோ, உங்களிடம் வந்தால் (என்னவாகும்) என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! குற்றவாளிகள் எதற்கு அவசரப்படுகின்றனர்?'' என்று கேட்பீராக!
51. அது நிகழ்ந்த பிறகு தான் அதை நம்புவீர்களா? "இப்போது தானா (நம்புவீர்கள்?) இதைத் தானே அவசரமாகத் தேடிக் கொண்டிருந்தீர்கள்?'' (என்று கூறப்படும்.)
52. பின்னர் "நிரந்தரமான வேதனையைச் சுவையுங்கள்! நீங்கள் செய்ததற்காகவே தவிர தண்டிக்கப்படுவீர்களா? என்று அநீதி இழைத்தோருக்குக் கூறப்படும்.
அல்குர்ஆன்: 10:50,51,52.
இந்த வசனத்தின் அடிப்படையில் இஸ்லாமிய மார்க்கம் உலகம் அழியும் என்பதை உறுதியாக எடுத்துரைக்கிறது.
மாயன் நாகரீகம் (mayan civilization):
    
பண்டைய காலங்களில் உலகம் முழுவதும் வாழ்ந்த மக்களின் கட்டிடக்கலை, விவசாயம், கணித முறை, தொழில் முறை ஆகியவற்றை நாகரீகம்(civilization) மூலம் அறிந்து கொள்ளலாம்.
நம்முடைய இந்திய நாட்டில் சிந்து சமவெளி நாகரீகம் போன்றவைகள் பிரபலியமான நாகரீக முறையாகும்.இதே போல் மெக்ஸிகோ,கவுதமாலா போன்ற நாடுகளில் வாழ்ந்த பண்டைய கால மக்களின் நாகரீகம் மாயன் நாகரீகம் என்றழைக்கப்படுகிறது.
மாயன் காலண்டர்:
            மாயன் நாகரீகத்தை சார்ந்தவர்கள் பயன்படுத்திய நாட்காட்டிக்கு மாயன் காலண்டர் என்று சொல்லப்படுகிறது. 21.12.2012 அன்று  உலகம் அழியும் என்ற பொய்க்கு ஆதாரமாக மாயன் காலண்டர் என்ற ஒன்று செய்திகளிலும்,நாளிதழ்களிலும் காட்டப்படுகிறது. மாயன் என்ற காலண்டரை 2012 என்ற ஹாலிவுட்  திரைப்படம் சமீப காலத்தில் பிரபலப்படுத்தியது. மாயன் நாட்காட்டி 21.12.2012  முடிவு பெறுவதால் உலகம் அழியப்போகிறது என்ற செய்தி பரப்பப்படுகிறது.
(ஆனால் மாயன் நாட்காட்டி உலகம் அழிவதாக சொல்லவில்லை). மேலும் இதற்க்கு அறிவியல் ரீதியாகம் உண்மை இருக்கிறது என்ற செய்தி சொல்லப்படுகிறது.ஆனால் இந்த
செய்தியை NASA மறுத்துள்ளது.
இறுதி நாளை இறைவனே அறிவான்:
உலகம் எப்போது அழியும் என்பதை அல்லாஹ் மட்டுமே அறிவான் என்பதை திருமறையில் இறைவன் கூறுகிறான்.
   (முஹம்மதே!) அந்த நேரம் பற்றி மக்கள் உம்மிடம் கேட்கின்றனர். "அது பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது'' எனக் கூறுவீராக! அந்த நேரம் சமீபத்தில் இருக்கக் கூடும் என்பது உமக்கு எப்படித் தெரியும்?                        அல்குர்ஆன்: 33:63

உலகம் எப்போது அழியும் என்பது நபிகள் நாயகம் அவர்களுக்கும்   தெரியாத ஒன்று என்று இறைவன் மேற்கூறிய அல்லாஹ் வசனத்தில் கூறுகிறான்.

அந்த நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறியமாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன். அல்குர்ஆன்: 31.34

42. (முஹம்மதே!) அந்த நேரம் பற்றி அது எப்போது ஏற்படும்? என உம்மிடம் கேட்கின்றனர்.
43. அது பற்றிய விளக்கம் உம்மிடம் எங்கே இருக்கிறது?
44. அதன் முடிவு உமது இறைவனிடமே உள்ளது.      
                                                             அல்குர்ஆன்: 79:41,42,43


 இந்த வசனங்களின் அடிப்படையில் உலகம் எப்போது அழியும் என்பதை அல்லாஹ் மட்டுமே அறிவான் என்பது தெளிவாகிறது.
உலக அழிவு சம்மந்தாமாக இஸ்லாத்தின் அடிப்படையை விளங்காத பெயர் தாங்கி இஸ்லாமிய மக்களும் கூட இது போன்ற புரலைகளை நம்பி ஈமானை இழக்கிறார்கள். உலகம் எப்போது அழியும் என்பதை ஜோசியம் போல் யார் சொன்னாலும் நம்பாமல் அந்த அறிவு இறைவனிடம் மட்டும் உள்ளது என்பதை அறிந்து நம் ஈமானை பலப்படுத்த வேண்டும்.
21.12.2012 ல் உலகம் அழியுமா?
     உலக அழிவு பற்றிய அறிவு இறைவனிடம் இருந்தாலும் இறைவன் அதற்கான மிகப்பெரிய பத்து அடையாளங்களை நமக்கு கூறுகிறான்.
1 - புகை மூட்டம்
2 - தஜ்ஜால்
3 - (அதிசயப்) பிராணி
4 - சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது
5 - ஈஸா (அலை) இறங்கி வருவது
6 - யஃஜுஜ்மஃஜுஜ்
7 - கிழக்கே ஒரு பூகம்பம்
8 - மேற்கே ஒரு பூகம்பம்
9 - அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்
10 - இறுதியாக ஏமனி'லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்த்தல்.

இந்த பத்து அடையாளங்கள் நிகழாமல் கண்டிப்பாக உலக அழிவு ஏற்படாது.

மேலும் உலக அழிவின் மிகப்பெரிய அடையாளமான தஜ்ஜாலின் வருகை பற்றி நபிகள் நாயகம் விளக்கும் போது அவன் இந்த உலகில் எத்தனை நாட்கள் வாழ்வான் என்பதயும் தெளிவு படுத்துகிறார்கள்.

'தஜ்ஜால் இப்பூமியில் எவ்வளவு காலம் தங்கியிருப்பான்'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாற்பது நாட்கள். ஒரு நாள் ஒரு வருடம் போன்றும்ஒரு நாள் ஒரு மாதம் போன்றும்ஒரு நாள் ஒரு வாரம் போன்றும் ஏனைய நாட்கள் சாதாரண நாட்களைப் போன்றுமிருக்கும் என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி),
நூல்: முஸ்லிம் 5228

இந்த ஹதீஸின் அடிப்படையில் இன்னும் தஜ்ஜால் வராத காரணத்தால் உலக அழிவு நாள் என்று சொல்லப்படும்,இன்னும் 5 நாட்களே உள்ள 21.12.2012 அன்று அல்லாஹ் நாடினால் தவிர   கண்டிப்பாக உலகம் அழியாது.
ஏனென்றால் இறைவன் உண்மையை மட்டுமே சொல்வான்.

அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யார்?
அல்குர்ஆன் (4 : 87)

உலக அழிவு நாள் சம்மந்தாமாக கடந்த காலங்களில் 200க்கும் மேற்பட்ட பொய்கள் சொல்லப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. அந்த அடிப்படையில் 21.12.2012 அன்று உலகம் அழியாமல் இஸ்லாமிய மார்க்கம் சத்திய மார்க்கம் என்று நிரூபிக்கும் இன்ஷா அல்லாஹ்.

    

வாராந்தர பயான் Ceramah Mingguan


மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 15.12.12 அன்று கோலாலம்பூர் மர்கசில் வாராந்தர பயான் நடைபெற்றது.நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி-பதில் நடந்தது..இதில் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
(Ceramah mingguan yang telah diadakan oleh MALAYSIA THOWHEED JAMATH, berlangsung di Markas KL pada 15.12.2012 mendapat sambutan yang menggalakkan. Ceramah ini diakhiri dengan sesi soal jawap.)

Thursday 13 December 2012

கல்விக் கடலா கஸ்ஸாலி?


கல்விக் கடலா கஸ்ஸாலி?

"வானத்தின் ரட்சகா! மக்களின் தலைவர் கஸ்ஸாலியின் உள்ளத்தை ஒளிரச் செய்தது போன்று இந்தப்புதியவனின் உள்ளத்தை ஒளிரச் செய்!''
காலை மாலையில் நடைபெறும் மக்தபுகள் முதல், பட்டமளிப்பு விழா நடக்கும் பெரியமதரஸாக்களின் மாணவர்கள் வரை ஒரு பிரார்த்தனையாகப் பாடுகின்ற பாடல் வரிகள் தான் இவை.
அறிவுக் கடல், கல்விக் கடல் என்று இந்த ஆலிம்களால் மெச்சப்படுகின்றவர் கஸ்ஸாலி!
இவர் கல்விக் கடலா? என்பதைக் கீழ்க்காணும் அவரது நூற்களில் இடம் பெறும் பதிவுகளைப் பார்த்துமுடிவு செய்வோம்.
العارفون- بعد العروج إلى سماء الحقيقة- اتفقوا على أنهم لم يروا في الوجود إلا الواحد الحق. لكن منهم من كان له هذه الحال عرفانا علميا، ومنهم من صار له ذلك حالا ذوقيا. وانتفت عنهم الكثرة بالكلية واستغرقوا بالفردانية المحضة واستوفيت فيها عقولهم فصاروا كالمبهوتين فيه ولم يبق فيهم متسع لا لذكر غير الله ولا لذكر أنفسهم أيضا. فلم يكن عندهم إلا الله، فسكروا سكرا دفع دونه سلطان عقولهم، فقال أحدهم (أنا الحق) وقال الآخر (سبحاني ما أعظم شأني) وقال آخر (ما في الجبة إلا الله) وكلام العشاق في حال السكر يطوى ولا يحكى. فلما خف عنهم سكرهم وردوا إلى سلطان العقل الذي هو ميزان الله في أرضه، عرفوا أن ذلك لم يكن حقيقة الاتحاد بل شبه الاتحاد مثل قول العاشق في حال فرط عشقه (أنا من أهوى ومن أهوى أنا) ولا يبعد أن يفاجىء الإنسان مرآة فينظر فيها ولم ير المرآة قط، فيظن أن الصورة التي رآها هي صورة المرآة متحدة بها، ويرى الخمر في الزجاج فيظن أن الخمر لون الزجاج. وإذا صار ذلك عنده مألوفا ورسخ فيه قدمه استغفر وقال:
رَقَ الزُجاجُ وَراقَتِ الخَمرُ

فَتَشابَها فَتَشاكَـلَ الأَمَـرُ
فَكَأَنّما خَـمـرٌ وَلا قَـدحٌ

وَكَأَنّما قَدحٌ وَلا خَـمـرُ
وفرق بين أن يقول: الخمر قدح، وبين أن يقول: كأنه قدح. وهذه الحالة إذا غلبت سميت بالإضافة إلى صاحب الحالة (فناء) بل (فناء الفناء): لأنه فنى عن نفسه وفنى عن فنائه، فإنه ليس يشعر بنفسه في تلك الحال ولا يعدم شعوره بنفسه. ولو شعر بعدم شعوره بنفسه لكان قد شعر بنفسه. وتسمى هذه الحالة بالإضافة إلى المستغرق به بلسان المجاز اتحادا أو بلسان الحقيقة توحيدا. ووراء هذه الحقائق أيضا أسرار يطول الخوض فيها.
மெஞ்ஞானிகள் (ரகசியம்) ஹகீகத் எனும் வானில் உயர்ந்து அங்கே சஞ்சரிக்கும் போது உலகிலேஅவர்கள் ஒரே (அல்லாஹ்வான) ஒருவனைத் தவிர வேறு எதையுமே காணவில்லையெனஏகோபித்து, ஒருமித்துக் கூறுகின்றனர். எனினும் சிலருக்கு இந்நிலை தெள்ளத் தெளிவாக அறிவியல்ரீதியாகப் புலப்படும். (அவர்கள் இந்த இரகசியத்தால் குழம்பிப் போக மாட்டார்கள்). இன்னும்சிலருக்கோ அவர்கள் இதன் உச்ச இன்பத்தையே சுவைத்து விடுவார்கள். அப்படியானவர்கள் "எல்லாம்ஒன்றே' எனும் ஓர்மையில் மூழ்கித் திளைத்து ஒன்றுக்குள் ஒன்றாகக் கலந்து "வோறொன்று' என்றவார்த்தை - அதாவது பன்மை என்பதே அவர்களிடமிருந்து அடியோடு நீங்கி விடும். அவர்களின்விழிகளுக்கு அல்லாஹ்வைத் தவிர வேறொன்றும் புலப்படாது. அனைத்துமே அல்லாஹ்வாகவேதென்படும். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியால் ஒரு வகை போதையேற்பட்டதன் காரணத்தினாலேயேஅவர்களில் சிலர் "நான்தான் அல்லாஹ்' என்றும் வேறு சிலரோ "நானே அல்லாஹ். நான் தூய்மைமிக்கவன், வல்லமை மிக்கவன்' என்றோ வேறு சிலர் "எனது ஜூப்பாவிலும் அல்லாஹ்வையன்றிவேறில்லை' என்றோ கூறியிருக்கின்றார்கள்......
நூல்: மிஷ்காத்துல்அன்வார்
இதன் மூலம், காணும் பொருளெல்லாம் கடவுள் எனும் முஹ்யித்தீன் இப்னு அரபியின் வழிகெட்டகொள்கையைத் தான் கஸ்ஸாலியும் கொண்டிருக்கிறார் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
إحياء علوم الدين - (ج 4 / ص 356)
وحكى أن أبا تراب التخشبى كان معجبا ببعض المريدين فكان يدنيه ويقوم بمصالحة والمريد مشغول بعبادته ومواجدته فقال له أبو تراب يوما لو رأيت أبا يزيد فقال إنى عنه مشغول فلما أكثر عليه أبو تراب من قوله لو رأيت أبا يزيد هاج وجد المريد فقال ويحك ما أصنع بأبى يزيد قد رأيت الله تعالى فأغنانى عن أبى يزيد قال أبو تراب فهاج طبعى ولم أملك نفسى فقلت ويلك تغتر بالله عز و جل لو رأيت أبا يزيد مرة واحدة كان أنفع لك من ان ترى الله سبعين مرة قال فبهت الفتى من قوله وأنكره فقال وكيف ذلك قال له ويلك أما ترى الله تعالى عندك فيظهر لك على مقدارك وترى أبا يزيد عند الله قد ظهر له على مقداره فعرف ما قلت فقال احملنى إليه فذكر قصة قال في آخرها فوقفنا على تل تنتظره ليخرج إلينا من الغيضة وكان يأوى إلى غيضة فيها سباع قال فمر بنا وقد قلب فروة على ظهره فقلت للفتى هذا أبو يزيد فانظر إليه فنظر إليه الفتى فصعق فحركناه فإذا هو ميت فتعاونا على دفنه فقلت لأبى يزيد يا سيدى نظره إليك قتله قال لا ولكن كان صاحبكم صادقا واستكن في قلبه سر لم ينكشف له بوصفه فلما رآنا انكشف له سر قلبه فضاق عن حمله لأنه في مقام الضعفاء المريدين فقتله ذلك
 ولما دخل الزنج البصرة فقتلوا الأنفس ونهبوا الأموال اجتمع إلى سهل إخوانه فقالوا لو سألت الله تعالى دفعهم فسكت ثم قال إن لله عبادا في هذه البلدة لو دعوا على الظالمين لم يصبح على وجه الأرض ظالم إلا مات في ليلة واحدة ولكن لا يفعلون قيل لم قال لأنهم لا يحبون ما لا يحب ثم ذكر من إجابة الله تعالى أشياء لا يستطاع ذكرها حتى قال ولو سألوه أن لا يقيم الساعة لم يقمها
 وهذه امور ممكنة في أنفسها فمن لم يحظ بشىء منها فلا ينبغى أن يخلو عن التصديق والإيمان بإمكانها فإن القدرة واسعة والفضل عميم وعجائب الملك والملكوت
அபூதுராப் தக்ஷபீ சில சீடர்களைக் கண்டு மகிழ்ச்சியில் ஆழ்ந்து விடுவார். அவரைத் தன்னருகில்அழைத்து அவருக்கு நல்லறம் செய்வார். ஆனால் அந்தச் சீடர் இறை வணக்கத்திலும் இறைதியானத்திலும் திளைத்திருப்பார். ஒரு நாள் அபூதுராப் அது போன்ற ஒரு சீடரிடம், "நீ அபூயஸீத்அல்புஸ்தாமியைப் பார்த்தால் என்ன?'' என்று கேட்டார். "எனக்கு அவரைப் பார்க்க நேரமில்லை'' என்றுசீடர் பதிலளித்தார். "நீ அபூயஸீத் அல்புஸ்தாமியைப் பார்த்தால் என்ன?'' என்று அபூதுராப் திரும்பத்திரும்ப வலியுறுத்தவே அது அவரது கோபத்தைக் கிளறி விட்டது. "அபூயஸீத் அல்புஸ்தாமியைப்பார்த்து நான் என்ன கிழிக்க வேண்டியிருக்கிறது? நான் தான் அல்லாஹ்வைப் பார்த்து விட்டேன்.அவன் அபூயஸீத் அல்புஸ்தாமியைப் பார்ப்பதற்குரிய அவசியம் இல்லாமல் ஆக்கி விட்டானே'' என்றுசீடர் கூறியதும் அபூதுராபுக்கு அது ஆத்திரத்தை ஏற்படுத்தி விட்டது.
அபூதுராப் கூறுகிறார்:
அவர் இவ்வாறு சொன்னதும் எனக்குக் கிளம்பி விட்டது. என்னை நான் கட்டுப்படுத்த முடியவில்லை.அவரை நோக்கி, "உனக்கு நாசம் உண்டாகட்டும். மகத்துவமும் கம்பீரமும் மிக்க அல்லாஹ்வûக் கண்டுநீ ஏமாறுகின்றாய். நீ அல்லாஹ்வை எழுபது தடவை பார்ப்பதை விட அபூயஸீத் அல்புஸ்தாமியைஒரு தடவை பார்ப்பது உனக்கு மிகவும் பயனுடையதாகும்'' என்று நான் அந்தச் சீடரிடம் சொன்னேன்.
இந்த வார்த்தையைக் கேட்டு அந்தச் சீடர் என்னை வெறுக்கலானார். "நீங்கள் எப்படி இவ்வாறுகூறுகின்றீர்கள்?'' என்று என்னிடம் அவர் கேட்டார். "அல்லாஹ் தஆலா உன்னிடத்தில் உன்னளவுக்குத்தான் காட்சியளிப்பான். ஆனால் அபூயஸீத் அல்புஸ்தாமியிடம் அவர் அளவுக்குக் காட்சியளிப்பான்என்பதை நீ கவனிக்க வேண்டாமா?'' என்று நான் பதிலளித்தேன்.
இதை விளங்கிய அவர் என்னை அவரிடம் அழைத்துச் செல்லுங்கள் என்று சொன்னார். நான் அவரைஅழைத்துச் சென்று அவரும் நானும் ஒரு திட்டில் நின்றிருந்தோம்.
வன விலங்குகள் வாழ்கின்ற காட்டில் ஒதுங்கியிருக்கும் அவர், அங்கிருந்து புறப்பட்டு வருவதைஎதிர்பார்த்துக் காத்திருந்தோம். எதிர்பார்த்தது போன்றே அவர் எங்களைத் தாண்டிச் சென்றார்.அப்போது அவர் தன் முதுகின் மேல் ஒரு தோல் ஆடையைப் புரட்டிப் போட்டிருந்தார்.
நான் அந்த இளைஞரிடம், "இவர் தான் அபூயஸீத் அல்புஸ்தாமி'' என்று தெரிவித்தேன். அந்தச் சீடர்அவரைப் பார்த்த மாத்திரத்தில் மயக்கம் போட்டுக் கீழே விழுந்து விட்டார். அவரை அசைத்துப்பார்த்தோம். அவர் இறந்தே போயிருந்தார். அவரை அடக்கம் செய்தோம்.
நான் அபூயஸீதிடம், "என்னுடைய தலைவரே! அவர் உங்களை நோக்கிப் பார்க்கத் தான் செய்தார்.அந்தப் பார்வை அவரைப் பலி கொண்டு விட்டதே!'' என்று கேட்டேன்.
"உண்மை அதுவல்ல! உங்களுடைய நண்பர் ஓர் உண்மையாளராக இருந்தார். அவருடைய உள்ளத்தில்ரகசிய ஞானம் குடிகொண்டிருந்தது. ஆனால் அது அவருக்கேற்ற தன்மையுடன் அவருக்குஉதயமாகவில்லை. அவர் நம்மைப் பார்த்ததுமே அவருடைய உள்ளத்தின் அகமிய ஞானம்வெளிப்பட்டது. அதை அவர் தாங்க முடியாதபடி நெருக்கடிக்கு உள்ளானார். காரணம் அவர்பலவீனமான பக்தர்; சீடர்! அதனால் தான் அவர் இறந்தே போய் விட்டார்'' என்று அபூயஸீத்அல்புஸ்தாமி தெரிவித்தார்.
நூல்: இஹ்யாவு உலூமித்தீன்
இந்தச் சம்பவத்தில் தான் எத்தனை அபத்தங்களும் ஈமானுக்கு வேட்டு வைக்கின்ற விஷக்கருத்துக்களும் இடம் பெற்றிருக்கின்றன என்பதைச் சற்று பார்ப்போம்.
1. அல்லாஹ்வைப் பார்ப்பது மறுமையில் தான் நடக்கும். இவ்வுலகில் நடக்காது என்று அல்லாஹ்திருக்குர்ஆன் தெளிவாகச் சொல்லி விட்டான். ஆனால் இந்தக் கதையில் அபூதுராபின் சீடர்அல்லாஹ்வைப் பார்த்ததாகக் கூறப்படுகின்றது.
2. "அல்லாஹ்வைப் பார்த்து விட்டு ஏமாந்து விடாதே!' என்று அபூதுராப் என்ற ஷைத்தான் சொல்வது!
ஒரு பேச்சுக்கு அல்லாஹ்வைப் பார்த்தார் என்று வைத்துக் கொள்வோம். பாக்கியம் பெற்றவராகத்தானே ஆவார். அவர் எப்படி ஏமாற்றத்திற்குரிவர் ஆவார்?
3. எழுபது தடவை அல்லாஹ்வைப் பார்ப்பதை விட அபூயஸீத் அல்புஸ்தாமியைப் பார்ப்பவன்சிறந்தவன் என்று இந்த ஷைத்தான் கூறுவது! இங்கு அல்லாஹ்வை விட எழுபது மடங்கு அபூயஸீத்அல்புஸ்தாமி உயர்ந்தவன் என்ற கருத்து விதைக்கப்படுகின்றது. (நவூதுபில்லாஹ்)
4. அபூயஸீத் என்ற ஷைத்தானைப் பார்த்த மாத்திரத்தில் அந்தச் சீடர் மயக்கமாகி இறந்து விடுதல்.
மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் பேரொளியைப் பார்த்து மயக்கமடைந்தது போன்று ஒருதோற்றம் ஏற்படுத்தப்படுகின்றது.
அந்தச் சீடர் ஏற்கனவே அல்லாஹ்வைப் பார்த்தவர்(?). அப்போதெல்லாம் மயக்கம் ஏற்படாதஅவருக்கு அபூயஸீத் அல்புஸ்தாமியைப் பார்த்தவுடன் மயக்கம் ஏற்படுகின்றது என்றால் அபூயஸீதைஎந்த நிலையில் கொண்டு வைக்கின்றார்கள் என்று பாருங்கள்.
அபூயஸீத் அல்புஸ்தாமியை அல்லாஹ்வுக்கும் மேலாக வைத்து வழிபடுகின்ற இந்த அபூதுராபின்சம்பவத்தை, இந்தக் கப்ஸாவை தனது இஹ்யா உலூமித்தீன் என்ற நூலில் கஸ்ஸாலி பதிவுசெய்திருக்கின்றார் என்றால் இவர் யார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
இந்த இலட்சணத்தில், "இஹ்யாவைப் படிக்காதவன் "அஹ்யா' (உயிருள்ளவர்களின்) பட்டியலில்இல்லை'' என்ற புகழாரம் வேறு! இந்தக் குஃப்ரான கருத்தைப் பதிவு செய்த கஸ்ஸாலிக்கு, கல்விக்கடல் என்ற பட்டமும் பாராட்டும் வேறு!
இவரது நூலில் பரவியும் விரவியும் கிடப்பது, மலிந்தும் குவிந்தும் கிடப்பது "அத்வைதம்' என்ற கேடுகெட்ட கொள்கை தான். ஏகத்துவம் என்ற மரத்தை ஆணி வோரோடு கெல்லி எறிகின்ற நச்சுக்கொள்கையைப் பதிவு செய்கின்ற இவர் எப்படி இமாமாக இருக்கமுடியும்? அவர் எழுதிய நூற்கள்எப்படி இஸ்லாமியப் பாட நூல்களாக இருக்க முடியும்?
இந்தக் கண்ணோட்டத்தில் பி.ஜே. அவர்கள் இறுதி நபித்துவ விளக்கப் பொதுக்கூட்டத்தில் விமர்சனம்செய்ததைத் தான் இந்த ஆலிம்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
மற்றவர்களை விமர்சித்தால் கூட இவர்கள் தாங்கிக் கொள்வார்கள். ஆனால் கஸ்ஸாலியைவிமர்சனம் செய்தால் தாங்கிக் கொள்ள மாட்டார்கள். அதன் வெளிப்பாடு தான் ஸைபுத்தீன் ரஷாதியின்மறுப்புக் கூட்டம்.
அந்த மறுப்புக் கூட்டத்தில் கஸ்ஸாலி பற்றிய கேள்விக்குப் பதிலளிப்பதாகக் கூறி ஆரம்பித்தஸைபுத்தீன் ரஷாதி சுமார் 20 நிமிடங்கள் கஸ்ஸாலியின் புகழ் பாடினார். மனிதனின் கருத்துக்களில்தவறு இருக்கலாம் என்று இதில் மட்டும் ஒப்புக் கொள்கின்றார். உண்மையில் கஸ்ஸாலி விஷயத்தில்இப்படி, மனிதன் என்ற அடிப்படையில் தவறுகள் இருந்தன என்று யாரும் எளிதில் நழுவி விடமுடியாது என்பதை அவர் எழுதிய இஹ்யாவு உலூமித்தீன் என்ற நூலைப் படிப்பவர் யாரும் தெரிந்துகொள்ளலாம்.
காணும் பொருளெல்லாம் கடவுள் என்ற அத்வைதக் கொள்கை இந்த ஸைபுத்தீன் ரஷாதி கூறுவதுபோல் சாதாரண தவறல்ல. இஸ்லாத்தின் கடவுள் கொள்கையை, ஓரிறைக் கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்கின்ற ஒரு பெரிய பாவச் சொல்லாகும். அல்லாஹ் மன்னிக்காத குற்றமாகும்.இதைத் தான் ஸைபுத்தீன் ஏதோ சட்ட விஷயத்தில் ஏற்படும் சிறிய பிழை போல் சித்தரிக்கின்றார்.
கஸ்ஸாலியைப் பற்றி ஸியர் அஃலாமின்னுபலா என்ற நூலில் ஹாபிழ் தஹபீ அவர்கள் புகழ்ந்த புகழ்மாலையை ஸைபுத்தீன் ரஷாதி கொஞ்ச நேரம் வாசித்துக் காட்டினார்.
யார் புகழ் மாலை சூட்டினால் என்ன?
யார் பாராட்டுப் பத்திரம் வழங்கினால் என்ன?
கஸ்ஸாலியின் நூல் கூறுவதென்ன? ஏகத்துவத்திற்கு நேர் எதிரான இறை மறுப்புக் கொள்கையானஅத்வைதம். இந்தக் கொள்கையைப் பேசும் நூலைத் தூக்கி எறிவது தான் ஒரு சரியான முஸ்லிமின்நிலையாக இருக்க முடியும்? அதனை தவ்ஹீத் ஜமாஅத் நிலைநாட்டி வருகின்றது. தவ்ஹீத்ஜமாஅத்தின் இந்தச் செயலைத் தான் ஸைபுத்தீன் ரஷாதி என்ற பொய்யர் கடுமையாக விமர்சனம்செய்தார்.
இவர் எடுத்துக் காட்டிய அதே ஸியரு அஃலாமின்னுபலா நூலில் இஹ்யா உலூமித்தீனைப் பற்றிக்குறிப்பிடுகையில், "மொத்தத்தில் அதில் பொய்யான ஹதீஸ்களே இடம் பெற்றிருக்கின்றன'' என்றுகூறப்படுகின்றது.
ஒழுக்கங்கள், போலி நடைமுறைகள், தத்துவ ஞானிகளின் துறவு நிலைகள், சூபிஸத்தின் கொலைபீடங்கள் மட்டும் இல்லையென்றால் அதில் அதிக நன்மை இருக்கின்றது.
அல்லாஹ்விடம் பயனுள்ள கல்வியைக் கேட்போமாக! பயனுள்ள கல்வி என்றால் என்ன? அதுகுர்ஆனில் இறங்கியதாகும்.
அல்லாஹ்விடமிருந்து தடை வராத ரசூல் (ஸல்) அவர்களின் சொல்லும் செயலும் ஆகும்.
என்னுடைய நடைமுறையை வெறுப்பவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
என்னுடைய சகோதரனே! அல்லாஹ்வின் வேதத்தை ஆழ்ந்த கவனத்துடன் பற்றிப் பிடித்துக் கொள்.புகாரி, முஸ்லிம், சுனன் நஸயீ, நவவீ இமாமின் ரியாளுஸ் ஸாலிஹீன், அவருடைய திக்ருதொகுப்புகள் போன்றவற்றை முழுச் சிந்தனையுடன் பற்றிப் பிடித்துக் கொள்! நீ வெற்றி பெறலாம்.
தத்துவ ஞானிகளின் வறட்டுத் தத்துவங்கள், அவர்களின் வெற்று ஆன்மீகப் பயிற்சிப் பணிகள்,பாதிரிகளின் பட்டினி தவம், தனிமை நாயகர்களின் உருப்படாத உளறல் பேச்சுக்களை நம்பி ஏமாந்துவிடாதே என்று உன்னை நான் எச்சரிக்கின்றேன். அனைத்து நன்மையும் தூய, நேரிய மார்க்கத்தைப்பின்பற்றுவதில் தான் அடங்கியிருக்கின்றன. அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவோம்.
இறைவா! எங்களை நேரிய பாதையில் செலுத்துவாயாக!
இவ்வாறு ஸியரு அஃலாமின்னுபலாவில் ஹாபிழ் தஹபீ அவர்கள் கூறுகின்றார்கள்.
பொய்யர் ஸைபுத்தீன் இதையும் சேர்த்துப் படித்திருந்தால் கஸ்ஸாலியைப் பற்றிய தஹபீயின் முழுமதிப்பீடும் மக்களுக்குத் தெரிந்திருக்கும். அவர் இதைச் செய்யவில்லை. இவரும் இவரை அழைத்துவந்த மஜ்லிசுல் உலமாவினருக்கும் நோக்கமே கல்விக் கடல் (?) கஸ்ஸாலியைக் காப்பாற்றுவதுதான். அதைத் தான் அவர்கள் செய்திருக்கிறார்கள். இந்தத் தூய மார்க்கத்தைக் காப்பாற்றுவதுஅவர்களின் நோக்கமல்ல!
கஸ்ஸாலியின் நூலிலிருந்து அவர் யார் என்பதை எடுத்துக் காட்டியிருக்கின்றோம். இதன் பின்னரும்அவரை இமாம் என்றும், அவருடைய ஞானத்தைப் போல் தனக்கும் வழங்க வேண்டும் என்றும்கூறுபவர்கள் கடைந்தெடுத்த வழிகேட்டில் தான் இருக்கின்றார்கள் என்பது தெளிவான ஒன்றாகும்.
ஸைபுத்தீன் உட்பட இந்த உலமா சபையினர் அனைவரும் பரேலவிய சிந்தனைவாதிகள். இவர்களுக்குஏகத்துவக் கொள்கை என்பதெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. மக்கள் இவர்களுடைய வலையில்விழுந்து விடக் கூடாது என எச்சரிக்கை செய்கிறோம்.
கஸ்ஸாலியைப் பற்றி சில அறிஞர்கள் கூறும் போது, அவர் கடைசி நேரத்தில் திருந்தி விட்டார் என்றவாதத்தை வைக்கின்றனர். கஸ்ஸாலி திருந்தியிருந்தால் அவரை அல்லாஹ் மன்னிக்கப்போதுமானவன்.
ஆனால் அதே சமயம், அவர் திருந்தி ஏகத்துவக் கொள்கையை ஏற்றிருந்தால் அதை அவரேகூறியிருக்க வேண்டும். அவ்வாறு அவரிடமிருந்து அந்தக் கருத்து வராத வரை இந்த வாதத்தை நாம்ஏற்க முடியாது.
அவர் எழுதிய நூற்களை மேற்கோள் காட்டியே அவரது கொள்கை தவறு என்று நாம்விமர்சிக்கின்றோம். நாம் பார்ப்பது வெளிப்படையைத் தான். அவரது நூற்கள் மக்களை வழிகெடுத்துவிடக் கூடாது என்பதால் அதை அடையாளம் காட்டுவது நம்முடைய மார்க்கக் கடமையாகும்.
onlinepj.com