Friday 30 November 2012

தர்ஹா சந்தனக் கூடுக்கு 40 கிலோ சந்தனைக் கட்டை இலவசமாம்!



தர்ஹா சந்தனக் கூடுக்கு 40 கிலோ சந்தனைக் கட்டை இலவசமாம்! முதல்வரின் உத்தரவை கண்டித்து TNTJ கண்டன அறிக்கை!
நாகூர் தர்காவில் சந்தனக்கூடு நடத்தும் நாளில் சமாதியில் சந்தன கட்டைகள் அரைத்து சந்தனம் பூசுவதற்கு நாகூர் தர்காவின் முன்னாள் தலைவர் எஸ்.எஸ். காமில் காதிரி முதல்வரை சந்தித்து சந்தன கட்டைகளை மானியமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதை ஏற்று சந்த கூடு நடக்கும் நாளில் மூன்று லட்சம் மதிப்புள்ள 40 கிலோ சந்தன கட்டையை இலவசமாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இஸ்லாத்தில் தர்கா வழிபாடு இல்லை. தர்காக்களை இடித்து தரைமட்டமாக்க வேண்டும் என்பதே நபிகளார் காட்டித் தந்த வழிமுறையாகும். இதற்கு மாற்றமாக இஸ்லாத்தின் பெயரால் சந்தனக்கூடு விழாவுக்கு சந்தனகட்டைகளை வழங்கிய தமிழக அரசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டிக்கிறது.
கண்டனப் போஸ்டர் வாசகம்
சமாதிக்கு சந்தனக்கட்டை வழங்கி இஸ்லாத்தின் பெயரைக் கெடுக்கும் தமிழக அரசைக் கண்டிக்கிறோம்.
இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

Sunday 25 November 2012

வாராந்தர பயான் Ceramah Mingguan


மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 24.11.12 அன்று கோலாலம்பூர் மர்கசில் வாராந்தர பயான் நடைபெற்றது.நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி-பதில் நடந்தது..இதில் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
(Ceramah mingguan yang telah diadakan oleh MALAYSIA THOWHEED JAMATH, berlangsung di Markas KL pada 24.11.2012 mendapat sambutan yang menggalakkan. Ceramah ini diakhiri dengan sesi soal jawap.)

மாணவர்களுக்கான வாராந்தர வகுப்பு Kelas mingguan 'Asas Islam' bagi kanak-kanak


மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 18.11.12 அன்று கோலாலம்பூர் மர்கசில் வாராந்தர மாணவர்களுக்கான இஸ்லாமிய அடிப்படை வகுப்பு நடைபெற்றது இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
Kelas mingguan 'Asas Islam' bagi kanak-kanak yang dikendalikan oleh MALAYSIA THOWHEED JAMATH telah berlangsung di Markas KL pada 18.11.2012. Ianya dapat memberi manfaat serta mendapat sambutan yang menggalakkan.

வாராந்தர பயான் Ceramah Mingguan


மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 17.11.12 அன்று கோலாலம்பூர் மர்கசில் வாராந்தர பயான் நடைபெற்றது.நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி-பதில் நடந்தது..இதில் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
(Ceramah mingguan yang telah diadakan oleh MALAYSIA THOWHEED JAMATH, berlangsung di Markas KL pada 17.11.2012 mendapat sambutan yang menggalakkan. Ceramah ini diakhiri dengan sesi soal jawap.)

Tuesday 20 November 2012

ஆசூரா நோன்பு பிறை 10,11 ல் வைக்கலாமா?


10வது நாளும் 11வது நாளும் நோன்பு நோற்கலாமா?
சிலர் 10,11 வது நாள் நோன்பு நோற்கலாம் எனக் கூறுகின்றனர். அதற்கு பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆஷூரா நோன்பு வையுங்கள். அதில் யூதர்களுக்கும் கிறிஸ்தவர் களுக்கும் மாற்றம் செய்யுங்கள். அதற்கு முந்திய நாளோ அல்லது அதற்கு பிந்திய நாளோ நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)
நூல்: அஹ்மத் 2047, பைஹகீ
இது தொடர்பான அனைத்து அறிவிப்புகளிலும் இப்னு அபீ லைலா என்பவர் இடம் பெறுகிறார். இவர் மனன சக்தியில் மிக மோசமானவர் ஆவார். மேலும் இவரை அறிஞர்கள் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர். எனவே, இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.
முஹர்ரம் 9,10 வது நாள் நோன்பு நோற்க வேண்டும் என்று வரக் கூடிய செய்திகள் தான் ஆதாரப் பூர்வமானவை ஆகும். எனவே, 10,11வது நாள் நோன்பு நோற்பது கூடாது.
onlinepj.com

Thursday 15 November 2012

WHO IS HE?




In the name of Allah…
About 2 billion (200 crore) people, seek solutions for their problems from this Great Personality.
In the world’s population ratio, every 1 out of 4 people respect, regard and revere him more than their own
souls.
WHO IS HE?
About 1484 years ago, Prophet Muhammad (peace and blessings of Allah be upon him) was born in Mecca, Saudi Arabia.

He was an honest and successful trader (business man) at the age of 25 and eventually became the richest at the age of 40 in Mecca.  It was at the age of 40, when he revealed to the people of Mecca that he was getting divinely messages from Almighty God and that he is a Messenger of God.

So it is explicit that he did not have to cheat people for gaining money from them as he was already the
richest in the town. His purpose was neither to increase his financial status, because he was even forced to
flee Mecca, his own city, leaving behind all his property and wealth. He could have saved himself from
being forced to flee the city, by revoking the messengerhood, which the people of Mecca were expecting
from him. However, he sacrificed all his property and wealth and left the city of Mecca with empty hands.
Hence his intention clearly was not to gain any wealth by misusing the God’s name due to the reason that
he had to sacrifice all his hard earned wealth just for the sake of the keeping God’s doctrine and principle
alive.

No one would ever come forward to lose any wealth by misusing God’s name for gaining more wealth.
The one who wanted to gain wealth by misusing God’s name would not lose any of that he already got.

After he fled Mecca, he ruled Medina by making an excellent government there. If he wanted, he could have earned lot of wealth by being a king.
  But he did not gain or multiply any wealth for him though he had an option to do so.   He did not live his life in a palace like other kings do.
  He lived his whole life in a small hut.
  He and his family did not, regularly, even eat a stomach full of food.
  He had only a handful of dates and water to eat for months and was content with that.
He had only two cloaks of dresses to wear for his whole life time and had only one or two stitched dresses to wear in special occasions.
  He did not even use lamp at home. He spent nights in darkness in his entire life.   He could not even gain back his ‘pawned armor’ before his death.
  A small land, a horse and a few goats were what he had left as inheritance before his demise. Even those, he had commanded to be accumulated to the public property and said none of his family members should inherit them.
With such simple and humble life, no one would ever imagine that he misused his kingdom for gaining wealth, or getting fame, or respect from the people. If it was so, then he need not had to lose them by misusing God’s name.
   “I do not tell you that I have the treasures of Allah, or that I know the unseen”




  “I am  accountable for my own mistakes”
  “I am only a man like you” are some of the messages where Quran commands to Prophet Muhammad (pbuh) to convey to the people.
Quran even contains verses that warn Prophet Muhammad (pbuh) on some occasions such as “Fear them
not, fear me”, also a verse that condemns the Prophet for ignoring a blind person when he approached
him, etc.

Being common people, we would never come forward to do something that will diminish our prestige and dignity in the society. But Muhammad (pbuh), being a messenger of God, never minded to reveal the verses to the people that warn and condemn him for his mistakes.
If Prophet Muhammad (pbuh) wanted he would have declared to the people that he was God and no wonder people would have accepted him as God, because he had followers who loved him so much so that they would do anything for him for his commands. Yet, he declared himself as a common man and not God or a part of God.
This information is available in glorious Quran, which the Prophet affirmed to the people as the ‘word of
God’.

If we could give a thought on this, as to how one would ever reveal verses to the people as God’s verses that condemns oneself a few times that brings humiliation to his prestige and dignity, we can easily conclude that these surely can never be his own words but the words of God.

  There was no palanquin to him, in spite of him being a king.   There was no gatekeeper for him
  he did not allow people to bow down to him
  He warned people ‘not to praise him to the extreme as people did to Jesus, so much so that they started worshiping Jesus as God’.
He did not like to receive any special courtesy or even an ordinary respect from the people what even a common man would expect to. He neither received it as he used to mingle with people and behave with them as a common man.

He has given solution to all the problems in the world. No wonder, George Bradshaw praised about Prophet Muhammad (pbuh) in the book ‘the Genuine Islam’,

“If a man like him (Muhammad) were to given the dictatorship of the modern world, he would succeed in
solving its problems in a way that would bring it much needed peace and happiness”.
To know more about this great messenger of God and to know the solutions he gives to the humanity,
Contact Mobile no: 99520 46555

To understand ISLAM in its purest form, watch ‘IMAYAM’ Channel Insha Allah from Daily 10:30 pm to
11 pm programs presented by TNTJ

Wednesday 14 November 2012

ஆஷூரா நோன்பின் நோக்கமும் ,சிறப்பும்


ஆஷூரா நோன்பின் நோக்கமும் ,சிறப்பும்  
நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா நோன்பு நோற்பதை நமக்கு சுன்னத்தாக ஆக்கியிருக்கிறார்கள்.
ரமலான் நோன்பு கடமையாக்கப் படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அது தான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கிய போது, யார் ஆஷூராவுடைய நோன்பு நோற்க விரும்புகிறார்களோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும். யார் அதை விட்டு விட விரும்புகிறாரோ, அவர் அதை விட்டு விடட்டும். என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1592
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அறியாமைக் கால (குறைஷி) மக்கள் ஆஷூராவுடைய நாளன்று நோன்பு நோற்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் அந்நோன்பை நோற்றார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்ட போது நபி (ஸல்) அவர்கள், நிச்சயமாக ஆஷூரா நாள் அல்லாஹ்வுடைய நாட்களில் உள்ள நாளாகும். எனவே விரும்பியவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம். விரும்பியவர் விட்டு விடலாம் எனக் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 1901
மேற்கண்ட ஹதீஸ்கள் ஆஷூரா நோன்பு நோற்பது சிறப்பிற்குரியதும் சுன்னத்தானதும் ஆகும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.
ஆஷூரா நோன்பு ஏன்?
ஆஷூரா நோன்பு எதற்காக நோற்கிறோம் என்பதைக் கூட இன்றைக்கு அதிகமான மக்கள் அறிந்திருக்கவில்லை. எதற்காக இந்நோன்பு என்பதைப் பற்றி ஹதீஸ்களில் தெளிவாகவே வந்துள்ளது.
நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். "இது என்ன நாள்?'' என்று கேட்டார்கள்.  "இது மாபெரும் நாள்! மூஸா (அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்நோன்பை நோற்றார்கள்'' என்று யூதர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள், நான் அவர்களை விட மூஸாவுக்கு நெருக்கமானவன் என்று கூறிவிட்டு அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் நோன்பு நோற்கும்படி கட்டளை இட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 3397
நான் தான் மிக உயர்ந்த கடவுள் என்று கூறிய சர்வாதிகார அரசன் கொடியவன் ஃபிர்அவ்ன் மற்றும் அவனுடைய கூட்டத்தினர் அழிக்கப்பட்ட மகிழ்ச்சியான நாள் தான் ஆஷூரா ஆகும். இதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு தான் ஆஷூரா நோன்பு நோற்கப்படுகிறது.
ஆனால் இன்றைக்குப் பெரும்பாலான இஸ்லாமிய மக்கள் இதைக் கூட அறியாமல் துக்க நாளாக அனுஷ்டித்து இறைவனுக்கு நோற்க வேண்டிய நோன்பை ஹசனார் ஹுசைனார் நோன்பு என்ற பெயரில் அவர்களுக்காக நோற்கின்றனர்.  அல்லாஹ் அல்லாதவர்களுக்காக நோற்கப்படும் நோன்பு நிச்சயமாக இணைவைப்புக் காரியம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
எனவே, இது போன்ற தவறான செயல்களை விட்டும் நாம் விலகிக் கொள்ளவேண்டும்.
ஆஷூரா நோன்பின்  சிறப்புகள்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமலான்) என்னும் இந்த மாதத்தையும் தவிர வேறெதையும் ஏனையவற்றை விடச் சிறப்பித்து தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை.
நூல்: புகாரி 2006
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல்: முஸ்லிம் 1976
நபி (ஸல்) அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு, அது கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரிகாரமாகும் என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல்: முஸ்லிம் 1977
யூதர்களுக்கு மாறு செய்வோம்
ஆஷூரா நோன்பு என்பது  பத்தாவது நாள் நோற்கின்ற நோன்பாக இருந்தாலும் யூதர்களும் அந்நாளில் நோன்பு நோற்றதால் நபி (ஸல்) அவர்கள் யூதர்களுக்கு மாற்றம் செய்யும் வகையில் ஒன்பதாவது நாளும் நோன்பு வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு மக்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், (அது) யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே என்று வினவினர். அதற்கு நபியவர்கள்,இன்ஷா அல்லாஹ், (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில்நோன்பு நோற்போம் என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள்.
மற்றொரு அறிவிப்பில், அடுத்த ஆண்டு வரை நான் உயிரோடு இருந்தால், ஒன்பதாவது நாளில்நோன்பு நோற்பேன் என்று கூறியதாக வந்துள்ளது.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 1916, 1917
நபி (ஸல்) அவர்கள், ஒன்பதாவது நாள் நோன்பு நோற்காவிட்டாலும் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்குமாறு கூறியிருப்பதால், நாம் ஒன்பது, பத்து ஆகிய இரண்டு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும்.
நன்றி onlinepj.com