Wednesday 5 September 2012

இங்கிலாந்தில் எழுச்சி பெறும் இஸ்லாம்


இங்கிலாந்தில் எழுச்சி பெறும் இஸ்லாம்
2030-ல் இங்கிலாந்து நாடு ஒரு கிறித்துவ நாடாக இருக்காது என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு குறித்து பிரபல டெய்லி மெயில் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
மதநம்பிக்கை அற்றவர்கள் கிறித்தவர்களை விட அப்போது அதிக எண்ணிக்கை யினராக ஆகிவிடுவார்கள் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
ஒவ்வொரு ஆண்டிலும் 5 லட்சம் நம்பிக்கையாளர்களை கிறித்துவ மதம் இழந்து வருகிறது. ஆண்டுக்கு 7,50,000 பேர் என்ற அளவுக்கு இறை நம்பிக்கை அற்றவர்களின் எண்ணிக்கைப் பெருகி வருகிறது என்று டெய்லி மெயில் பத்திரிக்கை தெரிவிக்கிறது.
கிறித்தவ மதத்தவரின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மற்ற மதத்தவரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று (காமன்ஸ்) நூலக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
முஸ்லிம்களின் எண்ணிக்கை கடந்த ஆறு ஆண்டுகளில் 39 சதவிகிதம் உயர்ந்து 30 லட்சத்தை எட்டியுள்ளது.
சீக்கியர்களும், யூதர்களும் சிறிதளவு குறைந்துள்ளனர் என்றும் டெய்லி மெயில் தெரிவிக்கிறது.
கடந்த ஆறு ஆண்டுகளில் 7.6 சதவிகிதமாக கிறித்தவர்களின் எண்ணிக்கை குறைந்து 2010ல் 4. 11 கோடி கிறித்தவர்கள் மட்டுமே இருப்பதை நான் கண்டேன். அதே கால கட்டத்தில் இறை நம்பிக்கையற்றவர்கள் எண்ணிக்கை 49 சதவிகிதம் உயர்ந்து 1.34கோடி மக்கள் இருக்கின்றனர் என்று பிரிட்டன் டோரி கட்சியைச் சேர்ந்த முன்னாள் நீதித்துறை அமைச்சர் கேரி ஸ்டிரீட்டர் தெரிவித்த செய்தியையும் டெய்லி மெயில் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
இவ்வாறாக ஒரு பக்கம் கிறித்தவம் தேய்ந்து கொண்டு போக போக மறுபக்கம் இங்கிலாந்தில் இஸ்லாம் எழுச்சி பெற்று சென்று கொண்டே உள்ளதையும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி வரும் கிறித்தவர்கள்:
பிரிட்டனில் லட்சக்கணக்கான மக்கள் (குறிப்பாக கிறித்தவர்கள்) இஸ்லாத்தை நோக்கி அலை, அலையாய் வந்துகொண்டு இருகின்றனர்.
இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன் என்ற தலைப்பில் “The Independent”
என்ற பிரிட்டன் பத்திரிக்கை ஓர் ஆய்வுத் தகவலை வெளியிட்டுள்ளது. (பார்க்கhttp://www.independent.co.uk/news/uk/home-news/the-islamification-of-britain-record-numbers-embrace-muslim-faith-2175178.html)
கிறித்துவ உலகத்தின் அடித்தளமான ஐரோப்பாவே இஸ்லாத்தை நோக்கி வேகமாக நகர்வதைப் பார்த்து கிறித்தவ உலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. ஐரோப்பா கண்டத்தில் பிரான்ஸில் தான் முஸ்லிம்கள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகின்றது, ஆனால் தற்போது பிரான்ஸைக் காட்டிலும் இஸ்லாமிய வளர்ச்சி விகிதம் பிரிட்டனில்தான் அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வுத் தகவல் தெரிவிக்கின்றது.
2001-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டவர்களின் எண்ணிக்கை 14,000 முதல் 25,000வரை இருக்கலாம் என கணக்கெடுக்கப்பட்டது. ஆனால் தற்போதைய கணக்கெடுப்பில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் முஸ்லிம்களாக மாறியுள்ளார்கள் என “Faith Matters” என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஆய்வாளர்கள், மசூதிகளில் சென்று எத்தனை முஸ்லிம்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள் என்று கணக்கெடுத்துள்ளனர். அதில் தலைநகர் லண்டனில் மட்டும் 1400 முஸ்லிம்கள் கடந்த ஓராண்டில் பள்ளிவாசல்களில் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர், (அமைப்புகள் மூலமாகவும், தனி நபர் மூலமாகவும் இஸ்லாத்தை ஏற்றவர்கள் தனி), இப்படி பிரிட்டன் முழுவதும் பள்ளிவாசல்களில் எடுத்த கணக்கெடுப்பின் படி 5200 நபர்கள் ஓர் ஆண்டில் இஸ்லாத்தைத் தழுவியுள்ளனர். (அல்ஹம்துலில்லாஹ்).
பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் இஸ்லாத்தை ஏற்ற நபர்களில் எண்ணிக்கை ஆண்டு ஒன்றுக்கு 4000. எனவே “The Independent” நடத்திய இந்தப் புது ஆய்வின்படி ஐரோப்பா கண்டத்தில் பிரிட்டன் மக்கள்தான் இஸ்லாத்தை தழுவுவதில் முன்னனியில் உள்ளனர். இந்த ஆய்வை நடத்திய “Faith Matters” அமைப்பின் இயக்குனர் கூறுகையில் நாங்கள் இந்தத் தகவலை பள்ளிவாசலில் திரட்டினோம், இது முழுவதுமாக எடுக்கப்பட்ட எண்ணிக்கை அல்ல, முழுவதும் கணக்கெடுத்தால் இந்த எண்ணிக்கை பன்மடங்காக இருக்கும் எனத்தெரிவித்தார் .
ஏன் முஸ்லிம்களாக மாறினார்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கையில், இஸ்லாத்தைப் பற்றி ஊடகங்கள் தொடர்ந்து பொய்பிரச்சாரம் செய்து வருகின்றது. இந்த பொய்ப் பிரச்சாத்தை பார்ப்பவர்கள், படிப்பவர்கள் இஸ்லாத்தை அறிய ஆர்வமடைகின்றனர் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 tntj.net

No comments:

Post a Comment