Thursday, 5 July 2012

கந்தூரியில் கடை போடலாமா?


கந்தூரியில் கடை போடலாமா?

ஆன்லைன் பீஜே 
எந்தத் தீய காரியத்திற்காகவும் ஒரு முஸ்லிம் துணை போகக் கூடாது என்று இஸ்லாம் கூறுகின்றது.
'நீங்கள் நல்ல காரியங்களுக்கும், இறையச்சத்திலும், ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! தீய காரியத்திலும் வரம்பு மீறலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளக் கூடாது 
(அல்குர்ஆன் 5:2)
தீமையான காரியங்களுக்கு உதவக் கூடாது என்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் தீமையான காரியங்களுக்கு உதவுவது என்பதைப் புரிந்து கொள்வதில் தான் கருத்து வேறுபாடு உள்ளது.
தீமைக்குத் துணை போகக் கூடாது என்று கூறும் மேற்கண்ட வசனத்தில் நன்மைக்கு உதவுமாறும் கூறப்படுகிறது. நன்மைக்கு உதவுதல் என்பதை எவ்வாறு புரிந்து கொள்கிறோமோ அவ்வாறு தான் தீமைக்குத் துணை செய்தல் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் ஒரு தவ்ஹீத் மாநாடு நடத்துகிறோம். இந்த தவ்ஹீத் மாநாட்டில் ஒருவர் சாப்பாடு கடை போடுவதற்காக நம்மை அணுகுகிறார். நாம் அவருக்கு அனுமதி வழங்குகிறோம். இப்போது அவர் தவ்ஹீது மாநாட்டிற்கு உதவி செய்தார் என்று யாரும் கருத மாட்டோம். அவர் தன்னுடைய வருமானத்திற்காக, இலாபத்திற்காக கடைபோட்டார் என்றே கருதுவோம்.
அதே நேரத்தில் தவ்ஹீத் மாநாட்டிற்கு வருபவர்களுக்காக ஒருவர் இலவசமாக உணவுப் பொருட்களை வழங்கினால் அதை நாம் உதவியாகக் கருதுவோம்.
தவ்ஹீது மாநாட்டில் தன்னுடைய இலாபத்திற்காக கடைபோடும் ஒருவர் எப்படி தவ்ஹீது கொள்கைக்கு உதவியவராக மாட்டாரோ அது போன்றுதான் தீமையான காரியங்கள் நடக்கும் இடத்தில் ஒருவர் ஹலாலான முறையில் வியாபாரம் செய்தால் அல்லது அங்கு போடப்படும் கடைகளில் ஒரு பொருளை வாங்கினால்  அவர் அந்தத் தீமையை ஆதரித்தவர் ஆகமாட்டார்.
நன்மைக்கு உதவுதல் என்பதை நாம் எப்படி விளங்கிக் கொள்கிறோமோ அது போன்றுதான் தீமைக்கு உதவுதல் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள  வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடை காலகட்டத்தில் மக்காவில் உகாள், துல்மஜாஸ் போன்ற சந்தைகள் குறிப்பிட்ட நாட்களில் திறக்கப்படும் . இவை சந்தைகளாக மட்டும் இருக்கவில்லை. இங்கு சிலை வணக்கம் உட்பட கூத்து கும்மாளங்கள் அனைத்தும் நடைபெறும் இடமாகவும் இருந்தது.
இந்த சந்தைகளில் முஸ்லிம்களான ஸஹாபாக்கள் வியாபாரம் செய்வதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தத் தடையும் விதிக்கவில்லை.
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ الْهَيْثَمِ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ عَمْرُو بْنُ دِينَارٍ قَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا كَانَ ذُو الْمَجَازِ وَعُكَاظٌ مَتْجَرَ النَّاسِ فِي الْجَاهِلِيَّةِ فَلَمَّا جَاءَ الْإِسْلَامُ كَأَنَّهُمْ كَرِهُوا ذَلِكَ حَتَّى نَزَلَتْ لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَبْتَغُوا فَضْلًا مِنْ رَبِّكُمْ فِي مَوَاسِمِ الْحَجِّ
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : துல்மஜாஸ், உக்காழ் ஆகியவை அறியாமைக்கால வியாபாரத் தலங்களாகும். இஸ்லாம் தோன்றியதும் மக்கள் அவ்வியாபாரத்தலங்களை வெறுக்கலானார்கள். அப்போது (ஹஜ்ஜின்போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல் (அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்கள் மீது குற்றமாகாது என்ற 2:198ஆவது வசனம் அருளப்பெற்றது. இது ஹஜ்ஜுக் காலங்களில் வியாபாரம் செய்வதைக் குறிக்கின்றது.
புகாரி (1770)
பலவிதமான பாவகாரியங்கள் நடைபெற்ற உகாள், தில்மஜாஸ் போன்ற வியாபாரத் தலங்களில் இஸ்லாம் அனுமதித்தது என்பதை மேற்கண்ட செய்தியிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
தீமைகள் நடக்கும் இடங்களில் நாம் ஹலாலான முறையில் வியாபாரம் செய்தாலோ அல்லது அது போன்ற இடங்களுக்குச் சென்று ஒரு பொருளை வாங்கினாலோ அது தீமைக்கு துணை செய்ததாக ஆகாது என்பதை நாம் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
அதே நேரத்தில் ஒருவர் தீமையான காரியங்கள் நடக்கும் இடத்தில் வியாபாரம் செய்வது தவறில்லை என்றாலும் அது போன்ற தீமைகளில் தான் வீழ்ந்து விடாமல் தன்னை பாதுகாத்துக் கொள்ளவேண்டும். அனுமதிக்கப்பட்டது என்றால் கட்டாயம் செய்துதான் ஆக வேண்டும் என்பது கிடையாது.
நம்முடைய ஈமானிற்கு பாதிப்பு ஏற்படும் என்றால் அது போன்ற நிலைகளில் நாம் அவற்றை விட்டும் விலகிக் கொள்வதே சிறந்ததாகும்.
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ حَدَّثَنَا زَكَرِيَّاءُ عَنْ عَامِرٍ قَالَ سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ الْحَلَالُ بَيِّنٌ وَالْحَرَامُ بَيِّنٌ وَبَيْنَهُمَا مُشَبَّهَاتٌ لَا يَعْلَمُهَا كَثِيرٌ مِنْ النَّاسِ فَمَنْ اتَّقَى الْمُشَبَّهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَعِرْضِهِ وَمَنْ وَقَعَ فِي الشُّبُهَاتِ كَرَاعٍ يَرْعَى حَوْلَ الْحِمَى يُوشِكُ أَنْ يُوَاقِعَهُ أَلَا وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمًى أَلَا إِنَّ حِمَى اللَّهِ فِي أَرْضِهِ مَحَارِمُهُ أَلَا وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ أَلَا وَهِيَ الْقَلْبُ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அனுமதிக்கப்பட்டவையும் மிகத் தெளிவானவை. மேலும் அனுதிக்கப்படாதவையும் தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன. அவற்றை மக்களில் அதிகம் பேர் அறிய  மாட்டார்கள். எனவே எவர் சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக்கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்தையும் காப்பாற்றிக்கொள்கிறார்; மானத்தையும் காப்பாற்றிக்கொள்கிறார். எவர் சந்தேகத்திற்கிடமானவைகளில் தலையிடுகிறாரோ அவர், (அனுமதிக்கப்படாதவைகளில் தலையிடுகிறார்.) வேலியோரங்களில் (கால்நடைகளை) மேய்ப்பவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும். எச்சரிக்கை! ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை இருக்கின்றது அல்லாஹ்வின் நாட்டில் அவனது எல்லை (வேலி) அவனால் தடைவிதிக்கப்பட்டவையே. அறிக: உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்றுவிட்டால் உடல் முழுவதும் சீர் பெற்றுவிடும். அது சீர்குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்துவிடும். அறிந்துகொள்ளுங்கள்: அது தான்  உள்ளம்.
அறிவிப்பவர் :  நுஅமான் பின் பஷீர் (ரலி)
நூல் : புகாரி (52)
நம்முடைய கால் நடை பிறருடைய வேலிக்குள் சென்று மேய்வது ஹராமானாதாகும். அதே நேரத்தில் வேலிக்கு அருகில் மேய்ந்தால் அது ஹராமானது கிடையாது.
வேலிக்குள் செல்லாமல் அருகில்தான் மேயும் என்று நாம் பாராமுகமாக இருந்தால் கால் நடை வேலியை தாண்டியும் சென்று விடும்.
அது போன்றுதான் தர்ஹா வழிபாடு  போன்ற பாவமான காரியங்கள் நடக்கும் இடங்களில் நாம் எந்தத் தவறிலும் பங்கேற்காமல் வியாபாரம் செய்தால் அல்லது அங்குள்ள கடைகளில் ஒரு பொருள் வாங்கினால் அது தவறு கிடையாது. ஆனால் இது வேலிக்கு அருகில் மேய்கின்ற கால்நடையின் நிலையைப் போன்றதுதான்.
நாம் வேலிக்குள் நுழையவே முடியாத இடத்தில் நம்முடைய கால்நடையை மேயவிட்டால் அது நுழைந்துவிடும் என்பதைப் பற்றி எந்தக் கவலைப்படவேண்டிய அவசியமில்லை.
அது போன்று பாவமான காரியங்கள் நடக்கும் இடங்களை விட்டும் நாம் தவிர்ந்து கொண்டால் நம்முடைய ஈமானிற்க்கு பாதிப்பு ஏற்படுவதை விட்டும் நம்மை நாம் தற்காத்துக் கொள்ளலாம்.


Tuesday, 3 July 2012

கடமையான தொழுகைக்குப் பின் ஆயதுல் குர்ஸி

கடமையான தொழுகைக்குப் பின் ஆயதுல் குர்ஸி

ஆன்லைன்பீஜே 
கடமையான தொழுகைக்குப் பிறகு ஆயத்துல் குர்சி ஓதுவதைச் சிறப்பித்து பின்வரும் ஆதாரப்பூர்வமான செய்தியை இமாம் நஸாயீ அவர்கள் அஸ்ஸுனனுல் குப்ரா எனும் தனது நூலில் பதிவு செய்துள்ளார்கள். 
السنن الكبرى للنسائي  - كتاب عمل اليوم والليلة
 ثواب من قرأ آية الكرسي دبر كل صلاة - حديث : ‏9585   ‏8603 
 أخبرنا الحسين بن بشر ، بطرسوس ، كتبنا عنه قال : حدثنا محمد بن حمير قال : حدثنا محمد بن زياد ، عن أبي أمامة قال : قال رسول الله صلى الله عليه وسلم : " من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت " *
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
கடமையான ஒவ்வொரு தொழுகைக்கும் பிறகு யார் ஆயத்துல் குர்சியை ஓதுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வதற்கு மரணத்தைத் தவிர வேறொன்றும் தடையாக இருப்பதில்லை.
அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி)
நூல் : அஸ்ஸுனனுல் குப்ரா (9585)
இதில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பதால் இது ஆதாரப்பூர்வமான செய்தி. எனவே ஆயத்துல் குர்ஸியை ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ஓதிக் கொள்ளலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
கடமையான ஒவ்வொரு தொழுகைக்கும் பிறகு யார் ஆயத்துல் குர்சியை ஓதுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வதற்கு மரணத்தைத் தவிர வேறொன்றும் தடையாக இருப்பதில்லை.
அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி)
நூல் : அஸ்ஸுனனுல் குப்ரா (9585)
இதில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பதால் இது ஆதாரப்பூர்வமான செய்தியாகும். 

இரவில் பிரத்யேகமாக ஓத வேண்டிய சூராக்கள்


இரவில் பிரத்யேகமாக ஓத வேண்டிய சூராக்கள்
ஆன்லைன்பீஜே
அல்முல்கு மற்றும் அஸ்ஸஜ்தா அத்தியாயங்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் தபாரகல்லதீ என்று துவங்கும் அல்முல்க் 67 ஆவது அத்தியாயத்தையும் அஸ்ஸஜ்தா என்ற 32 வது அத்தியாயத்தையும் ஓதாமல் உறங்க மாட்டார்கள் என்ற கருத்தில் ஒரு செய்தி ஹாகிம் அஸ்ஸுனனுல் குப்ரா மற்றும் ஷுஃபுல் ஈமான் ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
السنن الكبرى للنسائي  - كتاب عمل اليوم والليلة
 ذكر ما يستحب للإنسان أن يقرأ كل ليلة قبل أن ينام - حديث : ‏10140‏
 أخبرنا أبو داود ، قال : حدثنا الحسن ، قال : حدثنا زهير ، قال : سألت أبا الزبير : أسمعت جابرا يذكر أن نبي الله صلى الله عليه وسلم كان لا ينام حتى يقرأ الم تنزيل وتبارك ؟ " . قال : ليس جابر حدثنيه ، ولكن حدثني صفوان أو أبو صفوان
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அலிஃப் லாம் மீம் (என்று துவங்கும் 32 ஆவது) அத்தியாயத்தையும் தபாரகல்லதீ (என்று துவங்கும் 67 ஆவது) அத்தியாயத்தையும் ஓதாமல் உறங்க மாட்டார்கள்.
நூல் : அஸ்ஸுனனுல் குப்ரா
இந்த செய்தியில் நபித்தோழர் ஜாபிர் (ரலி) அவர்கள் உட்பட ஸஃப்வான் அபுஸ்ஸுபைர் ஸுஹைர் ஹசன் மற்றும் அபூதாவுத் ஆக மொத்தம் ஆறு நபர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பதால் இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானதாகும்.
எனவே இரவில் உறங்கச் செல்லும் முன் இவ்விரு அத்தியாயங்களை ஓதிக் கொள்வதற்கு நபிமொழியில் ஆதாரம் உள்ளது.

அல்இக்லாஸ் அல்ஃபலக் அந்நாஸ் அத்தியாயங்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது படுக்கைக்கு உறங்கச் சென்றால் ஒவ்வோர் இரவிலும் தமது உள்ளங்கைகளை இணைத்து அதில் குல் ஹுவல்லாஹு அஹது,  குல் அவூது பிரப்பில் ஃபலக்,  குல் அவூது பிரப்பின்னாஸ் ஆகிய சூராக்களை ஓதி ஊதிக் கொள்வார்கள். பிறகு தம் இரு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தமது உடலில் இயன்ற அளவில் தடவிக் கொள்வார்கள். பிறகு தமது உடலின் முன் பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள் 
அறிவிப்பவர்  ஆயிஷா (ரலி)
நூல்  புகாரி (5017)

ஆயத்துல் குர்சி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்ஸியை ஓதுங்கள். (அவ்வாறு ஓதினால்) உங்களுடன் பாதுகாவலர் (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார் . காலை நேரம் வரும் வரை ஷைத்தான் உங்களை நெருங்கவே மாட்டான் .
அறிவிப்பவர்  அபூஹீரைரா (ரலி)
நூல்   புகாரி ( 3275 )

அல்பகரா அத்தியாயத்தின் இறுதி இரண்டு வசனங்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்பகரா அத்தியாயத்தின் இறுதி இரண்டு வசனங்களை யார் இரவு நேரத்தில் ஓதுகின்றாரோ அந்த இரண்டும் அவருக்கு (மனிதன் மற்றும் ஜின் இனத்தாரின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கப்) போதுமானதாக ஆகிவிடும் ,
 அறிவிப்பவர்  அபூ மஸ்வூத் ( ரலி )
நூல்   புகாரி ( 4008 )

Monday, 2 July 2012

பொருளாதார உதவி

பொருளாதார உதவி

மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் கோலாலம்பூரில் 02.07.12 அன்று கணவனை இழந்து மூன்று குழந்தைகளுடன் சிரமப்படும் குடும்பத்திற்கு ஜகாத் நிதியிலிருந்து RM.2400 (RS.41,380) ரூபாய் பொருளாதார உதவி வழங்கப்பட்டது.

மாணவர்களுக்கான வாராந்தர வகுப்பு Kelas mingguan 'Asas Islam' bagi kanak-kanak


மாணவர்களுக்கான வாராந்தர வகுப்பு Kelas mingguan 'Asas Islam' bagi kanak-kanak
மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 01.07.12 அன்று கோலாலம்பூர் மர்கசில் வாராந்தர மாணவர்களுக்கான இஸ்லாமிய அடிப்படை வகுப்பு நடைபெற்றது இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
Kelas mingguan 'Asas Islam' bagi kanak-kanak yang dikendalikan oleh MALAYSIA THOWHEED JAMATH telah berlangsung di Markas KL pada 01.07.2012. Ianya dapat memberi manfaat serta mendapat sambutan yang menggalakkan.

வாராந்தர பயான் Ceramah Mingguan


மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 30.06.12 அன்று கோலாலம்பூர் மர்கசில் வாராந்தர பயான் நடைபெற்றது.நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி-பதில் நடந்தது..இதில் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
(Ceramah mingguan yang telah diadakan oleh MALAYSIA THOWHEED JAMATH, berlangsung di Markas KL pada 30.06.2012 mendapat sambutan yang menggalakkan. Ceramah ini diakhiri dengan sesi soal jawap.)

UJIAN AKIDAH


بسم الله الر حمن الر حيم
KELAS AKIDAH AN-NASR

UJIAN AKIDAH
Jumlah Markah-50
I.  Bulatkan jawapan yang tepat:                            1*5=5
1.  Siapakah yang membawa wahyu?
a) Jibril           b) Meekaayil            c) Malik         d) Israfeel
2.  Berapakah jumlah Nabi yang disebut dalam Al-Quran?
a) 15              b) 22              c) 24               d) 25
3.  Siapakah Nabi yang terakhir?
a) Musa         b) Isa              c) Muhammad        d) Adam
4.  Siapakah Nabi yang masih hidup?
a) Musa         b) Isa              c) Muhammad        d) Adam
5.  Berapakah jumlah orang yang penipu mengaku dirinya Nabi?
a) 15              b) 30              c) 60               d) 50

II.  Isi tempat kosong:                                                                         1*5=5
6.  Allah berada di   ___________  .
7.  Makhluk Jin dicipta daripada  ___________  .
8.  Kitab Taurat diturunkan kepada Nabi  ___________  .
9.  Semasa bayi berada dalam perut ibu, Malaikat akan menuliskan nasib pada bulan ke  ___________  .
10.  Kita tidak boleh berdebat atau soal mengenai ___________  .
III.  Suaikan yang berikut:                                                                 1*5=5
11.  Injil                                                                             Penjaga Neraka
12.  Malaikat                                                         ●          Tanah
13.  Malik                                                               ●          Al Quran
14.  Manusia                                                          ●          Isa
15.  Muhammad                                                  ●          Cahaya (Nur)

IV.  Pilih 5 daripada soalan yang berikut:                                             3*5=15
16.  Apakah kuasa yang hanya dimiliki oleh Allah?
17.  Apakah yang dimaksudkan dengan Nasib?
18.  Apakah sifat atau jenis para Nabi?
19.  Dalam perjalanan Israk Mihraj, apakah nama masjid bagi para malaikat yang dilihat oleh Nabi Muhammad? Berapakah jumlah malaikat yang datang solat disitu?
20.  Apakah maksud Al-Kiyamath?
21.  Apakah yang dimaksudkan dengan “Allah berada dengan kita”?

V.  Pilih 4 daripada soalan yang berikut:                                              5*4=20
22.  Apakah maksud Iman?
23.  Apakah tugas malaikat?
24.  Tuliskan 12 nama-nama Nabi.
25.  Bolehkah kita melihat Allah didunia? Bilakah kita boleh melihat Allah dan bagaimana kita melihatnya?
26.  Tuliskan nama kitab-kitab serta nama Nabi-nabi yang diberikan kitab tersebut.