Wednesday 25 April 2012

குர்ஆனும்,அறிவியலும் 1


ஜோடிப் பூக்கள்

பூவொன்றிலிருந்து மகரந்தத்தூள்களைச் சேகரித்துக் கொள்ளும் தேனீ



الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ مَهْدًا وَسَلَكَ لَكُمْ فِيهَا سُبُلًا وَأَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً 
فَأَخْرَجْنَا بِهِ أَزْوَاجًا مِنْ نَبَاتٍ شَتَّى(53) 20
அவனே பூமியை உங்களுக்குத் தொட்டிலாக அமைத்தான். உங்களுக்காக அதில் பாதைகளை எளிதாக்கினான்.வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி அதன் மூலம் பல தரப்பட்டதாவரங்களை ஜோடிகளாக வெளிப்படுத்தினான்.
குர்ஆன் இறைவேதம்தான் என்பதை இந்த வசனத்தில் இருந்து விளக்குவோம்.
1.       இந்த வசனம் தாவரங்களில் மகரந்தக் சேர்க்கை(POLINATION) பற்றி கூறுகிறது.
2.தாவரங்களில் ஜோடி உள்ளது என்பதை பற்றி அல்லாஹ்36:36வசனத்தில் கூறும்போது அதிசயமான காரியங்களுக்கு அல்லாஹ் பயன்படுத்தும் வார்த்தையான சுப்ஹானல்லதீ سُبْحَانَ الَّذِي- என்கிற வார்த்தையை பயன்படுத்துகிறான்.


3.தாவரங்கள் மகரந்தச் சேர்க்கை மூலம் ஜோடியாகி உற்பத்தியாகிறது.
4.தாவரத்தில் உள்ள மகரந்தத்தூள் ஆண் அணுக்களை கொண்டுள்ளது.
5.சூல்வித்திலை பெண் அணுக்களை கொண்டுள்ளது.
6.தாவரத்தில் இரண்டுவிதமாக மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது.
1. தன் மகரந்தச் சேர்க்கை.2.அயல் மகரந்தச் சேர்க்கை.
7.தன் மகரந்தச் சேர்க்கை என்பது ஒரே தாவரத்தில் உள்ள ஒரு பூ அல்லது வெவ்வேறு பூக்களில் நடைபெறும். (உதா. அவரை, புல்)
8.அயல் மகரந்தச் சேர்க்கை என்பது வெவ்வேறு தாவரங்களுடன் காரணிகள் மூலம் நடைபெறும்.
9.காரணிகள் இரண்டு வகைப்படும்1.உயிருள்ளவை 2.உயிரற்றவை
10.உயிருள்ளவைக்கு (உதா. வண்டு,தேனீ,பூச்சி)
உயிரற்றவை (உதா. காற்று)
11. அதாவது தேனீக்கள் ஒரு பூவில் உட்காரும் போது அதிலுள்ள மகரந்தத் தூள் அதன் கால்களில் ஒட்டிக்கொண்டு அடுத்த பூவிற்கு செல்லும்போது சூல்வித்திலையுடன் ஒன்று சேர்க்கிறது.
ஆண் தேனீக்களை மகரந்த சேர்ப்பிக்களாக கவர்வதற்காக ஆர்ச்சிட் மலர் பெண் தேனீ போல் செயல்பட காலப்போக்கில் வளர்ச்சிபெற்றுள்ளது.

12. பூக்களை அல்லாஹ் தேனிக்களையும் மற்ற பூச்சிகளையும் ஈர்ப்பதற்காக அழகாகவும் வியப்பாகவும் படைத்துள்ளான்.
13.இப்படி தாவரங்களிலும் இனச் சேர்க்கை நடைபெற்று உருவாகிறது.
14.இதை குர்ஆன்1400 வருடங்களுக்கு முன்பே தாவரங்களில் ஜோடி உள்ளதாக கூறிவிட்டது.
15.குர்ஆன் இறைவேதம்தான் என்பதற்கு இது அழகான சான்றாகும்.

No comments:

Post a Comment