Wednesday 25 April 2012

குர்ஆனும்,அறிவியலும் 4


بسم الله الر حمن الر حيم
மலைகளை முளைகளாக்கினோம்
وَالْجِبَالَ أَوْتَادًا (7) 78
 7. மலைகளை முளைகளாகவும் நாம் ஆக்கவில்லையா?
وَالْجِبَالَ أَرْسَاهَا (32)
             32. மலைகளை முளைகளாக நாட்டினான்.
மலைகளை பற்றி அல்லாஹ் என்ன சொல்கிறான் என்று பார்ப்போம்.




1. இந்த வசனத்தில் அல்லாஹ் மலைகளை pegs அதாவது முளை அல்லது ஆப்பு என்று சொல்கிறான்.

2. முளை என்பது இரண்டு பொருட்கள் பிரியாமல் இருக்க அறையப்படுவதாகும். (உதா. இரண்டு கட்டைகள் பிரியாமல் இருக்க ஆணி அடிப்பது )

3. அதிகமான இடங்களில் நாம் மலைகளை பார்த்திருப்போம். ஆனால் அது எப்படி அறையப்பட்டுள்ளது என்பதை அறிந்திருக்க மாட்டோம்.அதைப்பற்றி தெரிந்து கொள்வோம்.

4. பூமி பல கனமான மற்றும் கனம் குறைந்த அடுக்குகளை கொண்டுள்ளது.

5. பூமி சுற்றும்பொழுது பூமி அடுக்கின் கன மாறுபாட்டால் மேல் பகுதியில் உள்ள கட்டிடங்களும், உயிரினங்களும் தூக்கிவீசப்படும்.

6. அல்லாஹ்வின் ஆற்றலால் இப்படி தூக்கி வீசப்படாமல் இருக்க அல்லாஹ் பூமியின் பல அடுக்குகளை ஒன்றிணைக்கும் வண்ணம் அல்லாஹ் மலைகளை முளைகளாக நாட்டி வைத்துள்ளான்.

7. மலைகளின் அதிசயத்தை தெரிந்து கொள்ளுங்கள். விஞ்ஞானிகள் சொல்கிறார்கள் பூமிக்கு மேல் மலையின் உயரம் எவ்வளவு இருக்கிறதோ அதை விட 10 முதல் 15 மடங்கு  வரை அதிகமாக கீழே அல்லாஹ் நாட்டி வைத்துள்ளான். (படத்தை பார்க்கவும்)

8. உதாரணமாக எவரெஸ்ட் சிகரத்தை எடுத்துக்கொண்டால் அதன் உயரம் 9 கி.மீ ஆனால் அதை அல்லாஹ் பூமிக்கு கீழ்   125 கி.மீ வரை முளைகளாக்கியிருக்கிறான்.

9. இப்படி அல்லாஹ் அமைத்ததால் நம்மை பூமி மனிதர்களை அசைத்து விடாமல் இருக்கிறது. இதை அல்லாஹ்வே குர்ஆனில் எடுத்துறைக்கிறான்.

وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَنْ تَمِيدَ بِكُمْ وَأَنْهَارًا وَسُبُلًا لَعَلَّكُمْ تَهْتَدُونَ (15)16

பூமி உங்களை அசைத்து விடாதிருக்க அதில் முளைகளையும்,நீங்கள் வழியறிவதற்காக பல பாதைகளையும், நதிகளையும், பல அடையாளங்களையும் அவன் அமைத்தான். நட்சத்திரத்தின் மூலம் அவர்கள் வழியை அறிந்து கொள்கின்றனர். 

அல் குர்ஆன்: 16:15,16

10. குர்ஆனின் இந்த அதிசயத்தை அனைத்து புவியியல் பல்கலைக்கழகத்திலும் பாட நூலாக உள்ள earth என்ற புத்தகத்தில் மலைகள் முளைகளாகத்தான் இருக்கிறது என்று சொல்லிக்கொடுக்கிறார்கள்.

11. அதே போல் அல்லாஹ் மலைகளை பற்றி பயன்படுத்தும் வார்த்தையான pegs என்ற வார்த்தையைத்தான் அறிவியலாளர்களும் பயன்படுத்துகிறார்கள்.

12. மேலும் அல்லாஹ் இப்படி மலைகளை முளைகளாக்கி உள்ளதன் காரணத்தால் தான் seismograph  எனப்படும் நிலநடுக்கத்தின் நேரம் மற்றும் அளவை கணக்கிடும் கருவியை பயன்படுத்த முடிகிறது.

13. இவைகளெல்லாம் 19 ஆம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்டது. அனால் அல்லாஹ் இதை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே குர்ஆனில் சொல்லிவிட்டான்.

14. இதன் மூலம் குர்ஆன் இறைவேதம் தான் என்பது நிரூபணமாகிறது. 

by YASAR ARAFATH D.I.SC



No comments:

Post a Comment