Wednesday, 20 June 2012

நபிவழிக்கு முரணான மத்ஹபுகள்


நபிவழிக்கு முரணான மத்ஹபுகள்                 
ஆர். அப்துல் கரீம்எம்.ஐ.எஸ்.சி. 
அபூஹனிஃபாவின்  ஃபத்வா
மதுவைத் தவிர உள்ள தடை செய்யப்பட்ட பானங்கள் அனைத்தையும் விற்பது அனுமதியாகும் என இமாம் அபூஹனிஃபா கூறுகின்றார்.
நூல்: ஃபதாவா ஆலம்கீரி
பாகம் 3, பக்கம் 116
(ஃபதாவா ஆலம்கீரி என்பது ஹனபி மத்ஹபின் ஃபத்வாக்களின் தொகுப்பு நூலாகும்.)
இந்த ஃபத்வாவின் விபரீதத்தைஅபத்தத்தைப் புரிந்து கொள்ள இது தொடர்பான இஸ்லாத்தின் நிலைப்பாட்டை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். இஸ்லாத்தைப் பொறுத்த வரை ஒரு பொருள் பயன்படுத்த ஹராம் எனில் அதை விற்பனை செய்வதும் ஹராமே!
யூதர்களுக்குக் கொழுப்பை இறைவன் ஹராம் ஆக்கினான். ஆனால் அவர்கள் அதை உருக்கி,பிறருக்கு விற்ற காரணத்தினால் இறைவனின் சாபத்திற்குள்ளானார்கள் என்று நபிகளார் கூறுகின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யூதர்களை அல்லாஹ்  தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்களுக்குக் கொழுப்பு ஹராமாக்கப்பட்ட போது அதை விற்று அதன் கிரயத்தை அவர்கள் சாப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 2224
இறைவன் ஒன்றை முற்றிலும் ஹராமாக்கினால் அதை விற்பதும் ஹராமே என்பதையும்,அவ்வாறு விற்பது இறைவனின் சாபத்திற்குரியது என்பதையும் இந்த ஹதீஸிலிருந்து புரிந்து கொள்ளலாம்.  இந்த அடிப்படையிலே மதுபன்றிசிலைசெத்தவை ஆகியவை இஸ்லாத்தில் பயன்படுத்தத் தடை செய்யப்பட்டதைப் போன்று விற்கவும் தடை செய்யப்பட்டுள்ளன.
எனவே இறைவன் ஒரு பொருளை குடிக்கபருகக் கூடாது என்று ஹராமாக்கி விட்டால் அவற்றை ஒரு போதும் விற்கலாகாது என்பதை இந்த அடிப்படையிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
இஸ்லாத்தின் இந்த அடிப்படைக்கு மாற்றமாகதடை செய்யப்பட்ட பானங்களை விற்கலாம் என அபூஹனிஃபா ஃபத்வா (?) அளித்திருக்கின்றார். அதில் மதுவுக்கு மட்டும் விலக்களித்திருக்கின்றார். இஸ்லாத்தில் போதை தரும் பானம் மட்டும் ஹராமல்ல. மனித உடலுக்குக் கேடு விளைவிப்பவைஅசுத்தத்திலிருந்து தயாரிக்கப்படும் பானம் போன்றவைகளும் ஹராமாக்கப்பட்டுள்ளது. இவற்றை விற்பது அனுமதி என்று இமாம் அபூஹனிஃபா கூறுகின்றார்.

இதன் மூலம் மனித உடலுக்குக் கேடு தரும் பானங்களை விற்பது கூடும் என்கிறார். இது இஸ்லாமிய போதனைக்கு எதிரானதில்லையா?
பிறர் நலம் நாடுவது இஸ்லாத்தின் முக்கிய போதனை. இதை வலியுறுத்தி எண்ணற்ற நபிமொழிகள் உள்ளன. அவற்றில் ஒன்றைக் கூட அபூஹனிஃபா கண்டு கொள்ளவில்லை என்பது இதிலிருந்து தெரிகின்றது.
மேலும் ஒன்றை ஹராம் என்பதும்ஹலால் என்பதும் இறைவனின் அதிகாரத்தில் உள்ள விஷயம். இறைவன் ஹராமாக்கிய ஒன்றை ஹலாலாக்குவதற்கோஅவன் அனுமதித்த ஒன்றைத் தடை செய்வதற்கோ நமக்கு யாருக்கும் துளியும் அதிகாரம் இல்லை.

பணத்திற்காகத் தொழுகை
மத்ஹப் வழி
"நீ லுஹர் தொழு! உனக்கு ஒரு தங்கக் காசு தருகிறேன்'' என்று ஒரு மனிதரிடம் கூறப்படுகின்றது. இந்த நோக்கத்திற்காகவே அவரும் தொழுகிறார். இவரது தொழுகை செல்லும் என்று தான் கூற வேண்டும். தங்கக் காசுக்கு அவர் உரிமை கொண்டாட முடியாது.

(துர்ருல் முக்தார்பாகம்: 1, பக்கம்: 473)
ஹனபி மத்ஹப் சட்ட விளக்க நூலான துர்ருல் முக்தாரில் மேற்கண்டவாறு கூறப்படுகின்றது.
மாநபி வழி
வணக்க வழிபாடுகளை இறைவனுக்காக என்ற கலப்பற்றதூய எண்ணத்துடன் நிறைவேற்ற வேண்டும். அதில் உலக ஆதாயம் பெறுவதோவிளம்பர நோக்கமோ இருக்கும் எனில் அந்த வணக்கம் இறைவனிடம் ஏற்கப்படாது.
ஆதமுடைய இரு புதல்வர்களின் உண்மை வரலாற்றை அவர்களுக்குக் கூறுவீராக! அவ்விருவரும் ஒரு வணக்கத்தைப் புரிந்தனர். அவர்களில் ஒருவரிடம் அது ஏற்கப்பட்டது. மற்றொருவரிடம் ஏற்கப்படவில்லை. "நான் உன்னைக் கொல்வேன்'' என்று (ஏற்கப்படாதவர்) கூறினார். "(தன்னை) அஞ்சுவோரிடமிருந்தே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்'' என்று (ஏற்கப்பட்டவர்) கூறினார்.

அல்குர்ஆன் 5:27
வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும்உறுதியாக நிற்குமாறும்,தொழுகையை நிலை நாட்டுமாறும்ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம்.

அல்குர்ஆன் 98:5
இறைவனுடைய திருப்தியை முன்னிலைப்படுத்தாமல் மக்களுக்காக தொழுவது நரகின் அடித்தட்டுக்குச் சொந்தக்காரர்களான நயவஞ்சகர்களின் குணம் என இறைவன் எச்சரிக்கின்றான்.
நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான். அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறிகளாகவும்மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். குறைவாகவே அல்லாஹ்வை நினைக்கின்றனர்.

அல்குர்ஆன் 4:142
இறை திருப்தியை நாடாமல் செய்யப்படும் எந்த ஒரு வணக்கத்திற்கும் இறைவனிடம் எந்தக் கூலியும் கிடையாது என்பதை பின்வரும் நபிமொழி எடுத்துரைக்கின்றது.
"மக்கள் கேட்க வேண்டும் என்பதற்காக ஒருவன் ஒரு செயலைச் செய்தால் அல்லாஹ் அதனை அவர்கள் கேட்கும்படிச் செய்து விடுவான். மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக ஒருவன் ஒரு செயலைச் செய்தால் அல்லாஹ் அதனை அவர்கள் பார்க்கும் படி செய்து விடுவான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்
நூல்: முஸ்லிம்
நமது நற்செயல்கள் இறைவனுக்காகச் செய்யப்பட வேண்டும்மற்ற நோக்கத்திற்காகச் செய்யப்படும் எந்த நற்செயல்களுக்கும் இறைவனிடம் கூலி கிடைக்காது என்பதை இந்த இறை சான்றுகள் தெளிவாக பறைசாற்றுகின்றன.
இந்நிலையில் அற்பக் காசு பணத்திற்காகத் தொழுதால் அந்தத் தொழுகை செல்லும் என ஹனபி மத்ஹப் கூறுகின்றது. இது மேலே நாம் எடுத்துரைத்த அத்தனை சான்றுகளுக்கும் எதிரானது;முரணானது.
மழைத் தொழுகை இல்லை (?)
மத்ஹபு வழி
இமாம் அபூஹனிஃபா கூறுகின்றார்: மழை வேண்டுவதிலே ஜமாஅத்தாகத் தொழுகின்ற எந்த சுன்னத்தான தொழுகையும் கிடையாது. மக்கள் தனித்தனியாகத் தொழுதால் கூடும். "உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். அவன் பாவங்களை மன்னிப்பவன் ஆவான்என்ற வசனத்தின் பிரகாரம் மழைவேண்டுதல் என்பது துஆ செய்வதும் பாவமன்னிப்புத் தேடுவதும் தான்.  நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டியுள்ளார்கள். ஆனால் அவர்கள் தொழுகை நடத்தியதாக அறிவிக்கப்படவில்லை. 
நூல்: ஹிதாயா

பாகம் 1, பக்கம் 87
மழைத் தொழுகை என்ற ஒன்று இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழை வேண்டித் தொழுததாக எந்த ஒரு செய்தியும் அறிவிக்கப்படவில்லை என்று இமாம் அபூஹனிபா கூறுகின்றார். நபிகள் நாயகம் மழை தொழுகை தொழுததாக எந்தச் செய்தியும் இல்லை என அபூஹனிபா மறுத்ததால் அது தொடர்பான செய்திகளை இங்கே குறிப்பிடுகிறோம்.
மாநபி வழி
நபி (ஸல்) அவர்கள் திடலுக்குச் சென்று மழை வேண்டினார்கள். அப்போது கிப்லாவை நோக்கியவர்களாகத் தமது மேலாடையை மாற்றிப் போட்டுக் கொண்டு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி),

நூல்: புகாரி 1012
நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்கப் புறப்பட்டார்கள். கிப்லாவை நோக்கி துஆச் செய்தார்கள். தமது மேலாடையை மாற்றிப் போட்டுக் கொண்டார்கள். பின்னர் சப்தமாக ஓதி இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி),

நூல்: புகாரி 1024
நபி (ஸல்) அவர்கள் பணிவாகவும் உள்ளச்சத்துடனும் அடக்கத்துடனும் மழைத் தொழுகைக்காகப் புறப்பட்டு முஸல்லா என்ற திடலுக்கு வந்தார்கள். பெருநாள் தொழுகையைப் போலவே இரண்டு ரக்அத்கள் தொழ வைத்தார்கள். நீங்கள் இப்போது செய்யும் சொற்பொழிவு போல் அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தவில்லை. மிம்பரில் ஏறி துஆச் செய்வதிலும் இறைவனைப் பெருமைப்படுத்துவதிலும் ஈடுபட்டிருந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),

நூல்: திர்மிதீ 512
இமாம் திர்மிதி மேற்கண்ட ஹதீஸைப் பதிவு செய்து. அபூஹனிபாவின் கூற்றையும் குறிப்பிட்டு அபூஹனிபா நபிவழிக்கு முரண்பட்டு விட்டார் என விமர்சிக்கின்றார். அதையே நமது விமர்சனமாகத் தருகிறோம்.
மழைத் தொழுகை உண்டு என்பதை நிறுவ இவ்வளவு ஆதாரங்களை அள்ளித் தெளிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் ஹனபி மத்ஹபினரே மழைத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுகின்றனர். அதற்காக மக்களை அழைத்து ஒன்று திரட்டுகின்றனர். எனினும் இத்தனை செய்திகளைக் கண்டு கொள்ளாமல் மழைத் தொழுகை இல்லை என்கிறார் அபூஹனிபா. நீங்களே ஒப்புக் கொண்ட ஒரு வணக்கத்தை உங்கள் இமாம் இல்லை என மறுப்பது உங்கள் மனதை உறுத்தவில்லையாஎங்கோ தவறு நிகழ்ந்திருக்கிறது என்பதை உணர்த்தவில்லையா?என்பதற்காகவே இதைக் குறிப்பிடுகிறோம்.
இமாம் அபூஹனிபா திமிர்த்தனமாக நடந்து கொள்கின்றார் என்று நாம் கூற முனையவில்லை. மாறாக. பல நபிமொழிகள் அவருக்கும் தெரியவில்லை. பல மார்க்கச் சட்டங்களில் அவர் தப்பும் தவறுமாகத் தீர்ப்பளித்துள்ளார் என்கிறோம்.
தவறுகள் ஏற்படும் இவரைப் பின்பற்றுவதை விட்டு விலகிதவறுகளே நிகழாத இறைவனின் கட்டளைகளை மட்டும் பின்பற்ற வேண்டும் என்று மத்ஹபினருக்கு அழைப்பு விடுக்கின்றோம்.
தொழுகையின் துவக்கம் இனி "அர்ரஹ்மானு அக்பர்'?
தொழுகையைத் துவக்கும் போது அல்லாஹு அக்பர் என கூறுவோம். இது தக்பீர் தஹ்ரீமா என மக்களால் அழைக்கப்படுகின்றது. தொழுகையின் ஆரம்பத்தில் அல்லாஹு அக்பர் என்று தான் கூற வேண்டும் என்று அனைவரும் நன்கறிவோம். இதைத் தான் அல்லாஹ் தன் தூதர் மூலமாக நமக்கு உத்தரவிட்டுள்ளான். இறை உத்தரவுக்கு மாற்றமாகநாம் சுயமாக மார்க்கத்தில் எதையும் நுழைத்து விட முடியாது. அந்த அதிகாரம் இறைத்தூதர்களுக்கே இல்லை.
தொழுகையின் ஆரம்பத்தில் ஒருவர் அல்லாஹு அக்பர் என்று கூறுவதற்குப் பதிலாக அர்ரஹ்மானு அக்பர்அல்லாஹு அஜல்லு என்று கூறினால் அவரது தொழுகை செல்லும்அதில் எந்தத் தவறும் இல்லை என்று இமாம் அபூஹனிபா கூறுகிறார்.
தக்பீருக்குப் பதிலாக அல்லாஹு அஜல்லுஅல்லாஹு அஃலமுஅர்ரஹ்மானு அக்பர்,லாயிலாஹ இல்லல்லாஹ் அல்லது இறைவனுடைய பெயர்களில் எதையாவது ஒன்றைக் கூறினால் அது (அந்த தொழுகை) அபூஹனிபாவிடம் செல்லும்.

நூல்: ஹிதாயாபாகம் 1, பக்கம் 47
அபூஹனிபா இதை ஏற்றுக் கொள்ளலாம். ஏனெனில் தொழுகையில் குர்ஆன் வசனங்களை பாரசீக மொழிவங்காள மொழி என எந்த மொழியில் ஓதினாலும் அதையே அனுமதிப்பவராயிற்றே.

(பார்க்க: நூல் ஹிதாயாபாகம்: 1, பக்கம் 47)
அவர் இதை அனுமதிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. யாருக்காகத் தொழுகின்றோமோ அந்த இறைவனிடம் இது கூடுமாஅவன் ஏற்றுக் கொள்வானா என்பதை மத்ஹபினர் சிந்தித்துப் பார்க்கட்டும்.
அபூஹனிபா அனுமதித்த இந்தச் சட்டத்தை அவரைப் பின்பற்றும் மத்ஹப்வாதிகள் தங்கள் பள்ளிகளில் இதை அனுமதிப்பார்களாஇறைவனின் உண்மையான அடியார்கள்நன்மக்கள் யாரும் இதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள்.

Tuesday, 19 June 2012

மாணவர்களுக்கான வாராந்தர வகுப்பு Kelas mingguan 'Asas Islam' bagi kanak-kanak


மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 17.06.12 அன்று கோலாலம்பூர் மர்கசில் வாராந்தர மாணவர்களுக்கான இஸ்லாமிய அடிப்படை வகுப்பு நடைபெற்றது இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
Kelas mingguan 'Asas Islam' bagi kanak-kanak yang dikendalikan oleh MALAYSIA THOWHEED JAMATH telah berlangsung di Markas KL pada 17.06.2012. Ianya dapat memberi manfaat serta mendapat sambutan yang menggalakkan.

Monday, 18 June 2012

The God that never was? - "ஒருபோதும் கடவுளாக இருந்ததில்லை''

The God that never was?
"ஒருபோதும் கடவுளாக இருந்ததில்லை''
The God that never was?                                                                   ஏகத்துவம்-ஆகஸ்ட்-2011
மனிதனுக்கு நேர்வழி காட்டுவதற்காக இறைவன் வழங்கிய புனிதக் குர்ஆன் இறங்கிய மாதம் தான் ரமளான். அல்குர்ஆன் மட்டும் தான் மனிதக் கை படாத, மனிதனின் கலப்படம் கலவாத ஓர் உன்னத வேதம், உயர்ந்த வேதம் என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்தது தான் அது கூறுகின்ற கடவுள் கொள்கை! படைத்த ஓர் இறைவனைத் தவிர வேறு கடவுள் இல்லை. கடவுளுக்கு வேறு எதுவும், யாரும் இணையாக இல்லை என்று சொல்கின்ற ஏகத்துவக் கொள்கையாகும். யாராலும், எவராலும் உடைக்க முடியாத ஓர் உச்சக்கட்ட உன்னதக் கொள்கை! பகுத்தறிவுள்ள எவராலும் மறுக்க முடியாத தெளிவான கொள்கை!
இந்தக் கொள்கையுடன் பைபிள் கூறும் கடவுள் கொள்கையை உரசிப் பார்க்கின்ற, ஒப்பிட்டுப் பார்க்கின்ற ஆய்வுப் பார்வைக்காக அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள், The God that never was? "ஒருபோதும் கடவுளாக இருந்ததில்லை'' என்ற தலைப்பில் எழுதிய நூலின் தமிழாக்கத்தை இங்கே தருகின்றோம்.
அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் தன் ஆயுள் முழுவதும் கிறித்தவத்தை மட்டுமே குறியாகக் கொண்டு விவாதம் மற்றும் எழுத்து ரீதியான ஆயுதங்கள் தாங்கி இறுதி வரை அதை எதிர்த்துப் போரிட்டவர். அதனால் அவர்களது ஆய்வுகள் அனைத்துமே கிறித்தவத்தை மையமாகக் கொண்டு அமைந்திருந்தது. அதற்காக அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக! அவரது ஆய்வு அந்தத் திசையை நோக்கி மட்டும் சென்றதற்கு மற்றொரு காரணம், அவர் வாழ்ந்த தென்னாப்பிரிக்க பகுதி, சூழல் அனைத்தும் கிறித்தவ வயமாக இருந்தது தான்.
கிறித்தவர்கள் இஸ்லாத்திற்கு எதிராகச் செய்யும் பிரச்சாரத்திற்கு அஹ்மத் தீதாத் அவர்கள் தனது பிரச்சாரத்தின் மூலமாகவும், நூல்கள் மூலமாகவும் விவாதக் களங்களிலும் தக்க பதிலடி கொடுத்தவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனினும் அவரது ஆய்வுகள், கொள்கைகள் அனைத்தும் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாட்டுக்கு உட்பட்டது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. இஸ்லாத்தின் பெயரால் நடைபெறும் பித்அத்துக்களை அவர் கண்டிக்கவில்லை என்பதுடன் சில இடங்களில் ஆதரித்தும் பேசியுள்ளார்.
எனவே அஹ்மத் தீதாத் அவர்களின் கட்டுரையை இங்கு நாம் வெளியிடுகிறோம் என்றால் இதைப் படிப்பவர்கள்,கிறித்தவர்களை எதிர்கொள்ள தயக்கமோ கலக்கமோ அடையாமல் அவர்களை இஸ்லாத்தின் பக்கம் அழைப்பதற்கு இந்தக் கருத்துக்கள் பயனுள்ளவையாக இருக்கும் என்ற அடிப்படையில் தான். இங்கு ஒரு மொழிபெயர்ப்பை நாம் தந்துள்ளோம். இந்த ஒரு கோணத்தில் மட்டும் அஹ்மத் தீதாத் அவர்களின் கட்டுரையை எடுத்துக் கொள்ள வேண்டும். ஷிர்க், பித்அத்தை ஆதரித்து யார் கருத்துக் கூறினாலும் அவற்றை எதிர்ப்பதற்கு நாம் எந்தத் தயக்கமும் காட்ட மாட்டோம் என்பதைக் கவனத்தில் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இயேசு - ஒருபோதும் கடவுளாக இருந்ததில்லை
ஒரே ஒரு தூய கடவுள் தான் இருக்கின்றான் என்று சாதிக்கின்ற மார்க்கம் தான் இஸ்லாம். தூய கடவுள் என்பதன் பொருள், கடவுள் என்ற தன் இயற் தன்மையில், இறைத் தன்மையில், அவனது பண்புகளில் அவன் தன்னை யாரிடம் பகிர்ந்து கொள்ளவில்லை. யாருக்கும் பங்கு வைத்துக் கொடுக்கவில்லை. இதோ அல்குர்ஆன் முழங்குகின்றது:
"அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.
அல்குர்ஆன் 112வது அத்தியாயம்
தென்னாப்பிரிக்காவின் பெனானி நகரில், முஸ்லிம்களைக் கிறித்தவர்களாக மாற்றுவதற்காகவே கடவுளால் நியமிக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவின் தூதர் என்று கூறிக் கொண்டு ஒரு வழக்கறிஞர் இருக்கிறார். இயேசுவைக் கடவுள் என்று முஸ்லிம்கள் நம்ப வேண்டும் என்று அவர் பிரச்சாரம் செய்கிறார். இயேசு கடவுள் என்ற இந்த வாதம் முஸ்லிம்களுக்குக் கோபத்தையும் குமட்டலையும் தருகின்ற வாதமாகும். காரணம், அது தூய கடவுள் தன்மைக்கு எதிரானது. எனவே இதை முஸ்லிம்கள் ஒருபோதும் ஜீரணிக்க மாட்டார்கள். இருந்தும் அவர் உண்மையின் போக்கைத் திசை மாற்றவும், தலைகீழாகப் புரட்டிப் போடவும் வெறியாக இருக்கின்றார்.
"உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடிய தாகவே உள்ளது'' என்றும் கூறுவீராக!
அல்குர்ஆன் 17:81
இயேசு கடவுள் என்பதற்கு அவர் இரண்டு காரணங்களைக் கூறுகிறார்.
1. இயேசு கடவுள் என்று சொல்லும் போது அவரை நாம் தந்தையாக ஆக்கி விட மாட்டோம். அவர் தந்தையுடன் உள்ள ஒருவர். அதனால் அவர் அவருடைய தன்மையைப் பகிர்ந்து கொள்கின்றார்.
2. அவர் எல்லா வழிகளிலும், வகையிலும் தந்தையைப் போன்றவர். ஆனால் தந்தை இல்லை.
சுருக்கமாக, இவரது கருத்துப்படி இயேசு ஒரு கடவுள் என்பதற்குக் காரணம் அவர் கடவுள் தன்மையைப் பகிர்ந்து கொள்கிறார்; மேலும் அவர் எல்லா வழிகளிலும் கடவுளைப் போன்று இருக்கிறார்.
இயேசு கடவுளைப் போன்றவர் கிடையாது என்பதற்கும் கடவுள் தன்மையைப் பகிரவில்லை என்பதற்கும் பைபிளிலிருந்து பல்வேறு மேற்கோள்கள் இங்கு காட்டப்படுகின்றன.
இங்கு இயேசுவைக் குறிப்பிடும் இடங்களில் கேள்விக்குறியிட்டு "கடவுள்' என்றே குறிப்பிட்டுள்ளோம். இதற்குக் காரணம், இந்தத் தன்மைகள் கொண்ட ஒருவர் நிச்சயம் கடவுளாக இருக்க முடியாது என்பதைப் புரிய வைப்பதற்காக இவ்வாறு தலைப்பிட்டுள்ளோம்.
இயேசுவைக் கடவுள் என்று சொல்வது கடவுள் தன்மையைக் கேலி செய்வதாகும். மிக அற்பத்தனமான பழியும் அபாண்டமும் ஆகும். மனிதனின் புத்திக் கூர்மைக்கு ஓர் அவமானமாகும்.
கடவுளின் பிறப்பு?
இந்த நற்செய்தி அவருடைய மகனைப் பற்றியதாகும். இவர் மனிதர் என்னும் முறையில் தாவீதின் வழி மரபினர்;
ரோமையர் 1:3
தாவூதின் வழித்தோன்றலான கடவுள்?
அவர் இறைவாக்கினர் என்பதால், தம் வழித்தோன்றல் ஒருவர் அவரது அரியணையில் வீற்றிருப்பார் என்று கடவுள் உறுதியாக ஆணையிட்டுக் கூறியதை அறிந்திருந்தார்.
திருத்தூதர் பணிகள் 2:30
கடவுளின் மூதாதையர்கள்?
தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்: ஆபிரகாமின் மகன் ஈசாக்கு; ஈசாக்கின் மகன் யாக்கோப்பு; யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும்.
மத்தேயு 1:1
கடவுளுக்குப் பெயர் சூட்டுதல்?
குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.
லூக்கா 2:21
மேரி கருவுற்றுப் பிரசவித்த கடவுள்?
அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது.
லூக்கா 2:6
அவர் கருவுற்றிருந்தார்; பேறுகால வேதனைப்பட்டுக் கடும் துயருடன் கதறினார்.
திருவெளிப்பாடு 12:2
இதன் பொருள் என்ன? ஒரு கர்ப்பிணிப் பெண் அடைகின்ற அத்தனை இயற்கையான கட்டங்களையும் மேரி அடைந்தார். அல்லது அவரது பிரசவம் மற்ற கர்ப்பிணிப் பெண்களின் பிரசவத்தைப் போன்று தான் இருந்தது. வித்தியாசமாக ஒன்றுமில்லை என்பதையே இது தெளிவுபடுத்துகின்றது.
பால் குடித்த கடவுள்?
அவர் இவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து பெண் ஒருவர், "உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்'' என்று குரலெழுப்பிக் கூறினார்.
லூக்கா 11:27
கடவுள் பிறந்த ஊர், நாடு?
ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார்.
மத்தேயு 2:1

கடவுளின் தொழில்?
"இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?'' என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.
மாற்கு 6:3
இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர் தானே? யாக்கோப்பு, யோசேப்பு, சீமோன்,யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா?
மத்தேயு 13:55
கழுதையில் வரும் கடவுள்?
"கழுதையின் மேல் ஏறி வருகிறார்; கழுதைக்குட்டியாகிய மறியின் மேல் அமர்ந்து வருகிறார்'' என்று இறைவாக்கினர் உரைத்தது நிறைவேற இவ்வாறு நிகழ்ந்தது.
மத்தேயு 21:5
இயேசு ஒரு கழுதைக் குட்டியைக் கண்டு அதன்மேல் ஏறி அமர்ந்தார்.
யோவான் நற்செய்தி 12:14
குடிகாரக் கடவுள்?
மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார். இவர்களோ, "இம் மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன்,வரி தண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்'' என்கிறார்கள். எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக் கொண்டோரின் செயல்களே சான்று.
மத்தேயு 11:19
மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார், குடிக்கிறார்; நீங்களோ, "இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன்,வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்'' என்கிறீர்கள்.
லூக்கா 7:34

Wednesday, 13 June 2012

pinang islaam & Science bayan

10.06.12 அன்று பினாங் கிளையில் இஸ்லாமும்,அறிவியலும் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது.நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி-பதில் நடைபெற்றது.இதில் பலர் கலந்து கொண்டனர்.


Wednesday, 6 June 2012

Venus transit-2012-june-5,6 வெள்ளி கோள் சூரியனைக் கடக்கும் நிகழ்வு


بسم الله الر حمن الر حيم

Venus transit-2012-june-5,6
வெள்ளி கோள் சூரியனைக் கடக்கும் நிகழ்வு

33. அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான்வெளியில் நீந்துகின்றன.21:33
41. வானங்களும், பூமியும் இடம் பெயராதபடி அவனே தடுத்து வைத்துள்ளான். அவ்விரண்டும் இடம் பெயருமானால் அவனன்றி எவரும் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது. அவன் சகிப்புத் தன்மையுடையவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.35:41

1. ஒவ்வொரு கோள்களும் அதற்குரிய orbit-வட்டப்பாதையில் சுற்றிவருகிறது.
2.அவ்வாறு சுற்றும் போது சூரியனும்-வெள்ளியும்-பூமியும் சந்திக்கும் அறிய நிகழ்வு ஏற்படுகிறது.
3.இதை சூரியனை வெள்ளி கடக்கும் நிகழ்வு-Venus transit என்று சொல்லப்படும்.
4.இந்த நிகழ்வு அறிய நிகழ்வாகும்.இதற்கு அடுத்து 2117 ஆம் ஆண்டில் நடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
5.இதற்கு முன் 1639,1761,1791,1814,1882 ஆகிய ஆண்டுகளில் நடந்துள்ளது.
6.சமீபமாக ஜூன்-8-2004  அன்று நடந்துள்ளது.
7.அமெரிக்கா போன்று நாடுகளில் 05.06 .12 அன்று சூரிய அஸ்தமனத்தின் போதும்,ஐரோப்பா நாடுகளிலும் ஆசிய நாடுகளிலும் 06.06.12  அன்று சூரிய உதயத்தின் போதும் காண முடியும்.
8.இதன் மூலமாக கோள்களுடைய அளவையும்,தூரத்தையும் அளக்க முடியும்.
9.சூரியனைக் காட்டிலும் சிறிய கோளான வெள்ளி கடக்கும்போது ஒரு சிறிய பறவை வானில் பறக்கும் நிகழ்வு போல் சூரியனை வெள்ளி கடுக்கும் நிகழ்வை கான முடியும்.
10. சூரியனை வெள்ளி கடக்கும்போது சிறிய புள்ளிபோல் தென்படும்.
11. இந்த நிகழ்வை வெறும் கண்ணால் காண இயலாது.
12. பூமியிலிருந்து வெள்ளி 4.1 கோடி கி.மீ தூரம் கொண்டது.அதேபோல் வெள்ளியிலிருந்து-சூரியன் 10.82 கோடி கி.மீ தூரம் கொண்டது.
13. இந்த அற்புத நிகழ்வு வானத்திலுள்ள கோள்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அல்லாஹ்வின் ஆற்றலை உணர்த்துகிறது.
14. வானங்களையும்,பூமியையும், பூமியும் இவ்வளவு விசாலமாக படைத்த அல்லாஹ்வை பற்றி அறிந்து கொள்ள அற்புதமான நிகழ்வு இது.
15.இந்த நிகழ்வை NASA நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


june 2012 ல் எடுக்கப்பட்ட வீடியோ
http://www.youtube.com/watch?v=EmKO2Ef3fiA
http://www.youtube.com/watch?v=w0FiIJ5cnzw
http://www.youtube.com/watch?v=Np8pkN3okLc&feature=related
http://www.youtube.com/watch?v=9iDjo9D4t78&feature=related
http://www.youtube.com/watch?v=5W3Wz9q1PUg
http://www.youtube.com/watch?v=xoxIdXpJ3vo
 "வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?'' என்று அவர்களிடம் நீர் கேட்டால் "அல்லாஹ்'' என்று அவர்கள் கூறுவார்கள். "அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' என்று கூறுவீராக! எனினும் அவர்களில் அதிமானோர் அறிய மாட்டார்கள். 31:25

அவ்வாறில்லை. வானங்களையும், பூமியையும் படைத்த இறைவனே உங்கள் இறைவனாவான். நான் இதற்குச் சாட்சி கூறுபவன்'' என்று அவர் கூறினார். 21:56

"என் இறைவா! நீ எனக்கு அதிகாரத்தில் (சிறிது) வழங்கியிருக்கிறாய். (பல் வேறு) செய்திகளின் விளக்கத்தை எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறாய்! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! நீயே இவ்வுலகிலும், மறுமையிலும் எனது பாதுகாவலன். என்னை முஸ்லிமாகக் கைப்பற்றுவாயாக! நல்லோர்களில் என்னைச் சேர்ப்பாயாக!'' (என்றும் கூறினார்) 12:101







Monday, 4 June 2012

ஆன்லைன் நிகழ்ச்சி (Program Online)

ஆன்லைன் நிகழ்ச்சி Program Online
மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 03.06.12 அன்று கோலாலம்பூர் மர்கசில் ஆன்லைன் கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் சகோ.பீஜே
அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.இதில் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.


(Program soal jawap online yang diadakan oleh MALAYSIA THOWHEED JAMATH, berlangsung di Markas KL pada 
03.06.2012 mendapat sambutan yang menggalakkan. Program ini dikendalikan oleh Saudara p.j)