Monday, 18 February 2013

தொழுகையில் தமிழில் துஆ செய்யலாமா?


தொழுகையில் தமிழில் துஆ செய்யலாமா?
Onlinepj.com
தொழுகை என்பது இறைவனுக்கும், அடியானுக்கும் இடையிலான உரையாடலாகும். இறைவன் எல்லா மொழிகளையும் அறிந்தவன். அவனிடம் எந்த மொழியில் வேண்டுமானாலும் பிரார்த்தனை செய்யலாம். தொழுகையில் நாம் விரும்பிய பிரார்த்தனைகளைச் செய்யலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
"நீங்கள் ஒவ்வொரு இரண்டு ரக்அத்திலும் அமரும் போது அத்தஹிய்யா(த்)து லில்லாஹி... கூறுங்கள். (பின்னர்) நீங்கள் விரும்பிய துஆவைத் தேர்வு செய்து அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: நஸயீ 1151
ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
ஒரு மனிதர் தனது தொழுகையில் அல்லாஹ்வைப் (புகழ்ந்து) கண்ணியப்படுத்தாமலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துச் சொல்லாமலும் பிரார்த்தனை செய்ததை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். இவர் அவசரப்பட்டு விட்டார் என்று கூறி அம்மனிதரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். அவரிடம் அல்லது மற்றவரிடம் உங்களில் ஒருவர் தொழு(கையில் பிரார்த்தித்)தால் முதலில் மாண்பும் வலிமையும் மிக்க தனது இறைவனை அவர் புகழ்ந்து கண்ணியப்படுத்தட்டும். பிறகு (உங்கள்) நபியின் மீது ஸலாவத்துச் சொல்லட்டும். இதற்குப் பிறகு அவர் விரும்பியதை வேண்டலாம் என்று கூறினார்கள்.
நூல் : அபூதாவுத் 1266
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஓர் அடியார் தம் இறைவனிடம் மிக நெருக்கமாக இருப்பது அவர் சஜ்தாவிலிருக்கும் போதேயாகும். எனவே, நீங்கள் (சஜ்தாவில்) அதிகமாகப் பிரார்த்தியுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் 832
ஒருவருக்குத் தமிழ் மொழி மட்டும் தெரியுமானால் அவர் தான் விரும்பிய பிரார்த்தனைகளை அந்த மொழியில் தான் செய்ய முடியும். அவரவருக்குத் தெரிந்த மொழியில் பிரார்த்தனை செய்தாலே விரும்பிய பிரார்த்தனையைச் செய்யுங்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையைச் செயல்படுத்த முடியும். எனவே தொழுகையில் தமிழில் பிரார்த்தனை செய்வது தவறல்ல.
குர்ஆனில் இறைவன் கற்றுத்தரும் துஆக்களையும்,  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்த துஆக்களையும் அரபு மொழியில் அப்படியே உள்ளபடி ஓத வேண்டும். அரபு மொழிக்கு சிறப்பு சேர்ப்பது இதன் நோக்கம் அல்ல. அல்லாஹ்வின் வார்த்தையையும் நபியின் வார்த்தையையும் அப்படியே கூற வேண்டும் என்பது தான் இதற்குக் காரணம். குர் ஆன் ஹதீஸில் உள்ள துஆக்களை அரபு மொழியில் அதற்கு இணையான வேறு சொற்களைப் பயன்படுத்தினால் அந்த துஆக்களை ஓதியதாக ஆகாது.
அல்லாஹ்வின் வார்த்தைகளான குர்ஆன் அரபுமொழியில் இருப்பதால் அதை அப்படியே தொழுகையில் ஓதினால் தான் நாம் இறைவனுடைய வார்த்தைகளைக் கூறியவர்களாக முடியும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்த பிரார்த்தனைகள் அரபு மொழியில் அமைந்துள்ளது. இந்தப் பிரார்த்தனைகளை நபியவர்கள் கூறிய வார்த்தை மாறாமல் அப்படியே கூற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதைப் பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.
247حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ قَالَ أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ مَنْصُورٍ عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ عَنْ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَتَيْتَ مَضْجَعَكَ فَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلَاةِ ثُمَّ اضْطَجِعْ عَلَى شِقِّكَ الْأَيْمَنِ ثُمَّ قُلْ اللَّهُمَّ أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ لَا مَلْجَأَ وَلَا مَنْجَا مِنْكَ إِلَّا إِلَيْكَ اللَّهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ فَإِنْ مُتَّ مِنْ لَيْلَتِكَ فَأَنْتَ عَلَى الْفِطْرَةِ وَاجْعَلْهُنَّ آخِرَ مَا تَتَكَلَّمُ بِهِ قَالَ فَرَدَّدْتُهَا عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا بَلَغْتُ اللَّهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ قُلْتُ وَرَسُولِكَ قَالَ لَا وَنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ رواه البخاري
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
என்னிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீ உன் படுக்கைக்குச் செல்லும் போது தொழுகைக்காக உளூச் செய்வது போன்று உளூச் செய்து கொள். பிறகு உன் வலப்பக்கம் சாய்ந்து படுத்துக்கொள். பிறகு இறைவா! உன்னிடம் நான் என்னை ஒப்படைத்தேன். எனது காரியத்தை உன் பொறுப்பில் விட்டுவிட்டேன். என் முதுகை உன்னளவில் சார்ந்திருக்கச் செய்தேன். உன் மீதுள்ள ஆவலிலும் அச்சத்திலும் தான் (இவற்றை நான் செய்தேன்). உன்னை விட்டும் தப்பிச் செல்லவும் உன்னை விட்டும் ஒதுங்கிவிடவும் உன்னிடம் தவிர வேறு போக்கிடமில்லை. நீ இறக்கியருளிய உனது வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உன் "நபி'யை நான் நம்பினேன்.'' என்று பிராத்தித்துக் கொள்! (இவ்வாறு நீ பிரார்த்தனை செய்துவிட்டு உறங்கி) அந்த இரவில் நீ இறந்து விட்டால் நீ இயற்கை நெறியில் (இஸ்லாத்தின் தூய வழியில்) ஆகி விடுகிறாய். இந்தப் பிராத்தனையை உன் (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள்!
இந்நபிமொழியின் அறிவிப்பாளரான பராஉ (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் :
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையை திரும்ப ஓதிக் காண்பித்தேன். "நீ இறக்கியருளிய உனது வேதத்தை நான் நம்பினேன்' என்ற இடத்தை அடைந்ததும் ("உன் நபியை' என்பதற்கு பதிலாக) "உன் ரசூலை' என்று (மாற்றிச்) சொல்லி விட்டேன். (உடனே) நபி (ஸல்) அவர்கள், "இல்லை. (அவ்வாறு சொல்லாதே!) "நீ அனுப்பிய உன் நபியை நம்பினேன்' என்று சொல்'' என (எனக்குத் திருத்திச்) சொன்னார்கள்.
நூல் : புகாரி 247

Sunday, 17 February 2013

வாராந்தர பயான் Ceramah Mingguan


மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 16.02.13 அன்று கோலாலம்பூர் மர்கசில் வாராந்தர பயான் நடைபெற்றது.நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி-பதில் நடந்தது..இதில் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
(Ceramah mingguan yang telah diadakan oleh MALAYSIA THOWHEED JAMATH, berlangsung di Markas KL pada 16.02.2013 mendapat sambutan yang menggalakkan. Ceramah ini diakhiri dengan sesi soal jawap.)

Wednesday, 13 February 2013

குபா பள்ளிவாசலில் தொழுதால் உம்ரா செய்த நன்மையா?


குபா பள்ளிவாசலி -ல் தொழுதால்  உம்ரா செய்த நன்மை கிடைக் கும் என்று நபிமொழி உள்ளதாஅது ஆதாரப்பூர்வமானதா?
தீன்குலப்பெண்மணி
298 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ أَبُو كُرَيْبٍ وَسُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَا حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ قَالَ حَدَّثَنَا أَبُو الْأَبْرَدِ مَوْلَى بَنِي خَطْمَةَ أَنَّهُ سَمِعَ أُسَيْدَ بْنَ ظُهَيْرٍ الْأَنْصَارِيَّ وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحَدِّثُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الصَّلَاةُ فِي مَسْجِدِ قُبَاءٍ كَعُمْرَةٍ قَالَ وَفِي الْبَاب عَنْ سَهْلِ بْنِ حُنَيْفٍ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أُسَيْدٍ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَلَا نَعْرِفُ لِأُسَيْدِ بْنِ ظُهَيْرٍ شَيْئًا يَصِحُّ غَيْرَ هَذَا الْحَدِيثِ وَلَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ أَبِي أُسَامَةَ عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ وَأَبُو الْأَبْرَدِ اسْمُهُ زِيَادٌ مَدِينِيٌّ رواه الترمذي
குபா பள்ளிவாச-ல் தொழுவது உம்ரா செய்வதைப் போன்றதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உஸைத் பின் லுஹைர் (ர-லி ), நூல் : திர்மிதீ (298)
இதே கருத்தில் இப்னுமாஜா (1401), பைஹகீ (பாகம் :5, பக்கம் : 248), ஹாகிம் (பாகம் :1, பக்கம் :662), தப்ரானீ கபீர், பாகம்:1, பக்கம் : 210),ஸுனன் ஸு க்ரா- பைஹகீ (பாகம் :4, பக்கம் :423),முஸ்னத் அபீயஃலா, பாகம் :13, பக்கம் : 90), முஸன்னஃப் அபீ ஷைபா, பாகம் :2, பக்கம் :373)அபுல் ஈமான்- பைஹகீ, பாகம் :6, பக்கம் : 67) ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கருத்து இடம்பெறும் அனைத்து செய்திகளிலும் அபுல் அப்ரத் என்ற அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார். இவர் யாரென அறியப்படாதவர் என்று இந்தச் செய்தியை பதிவு செய்தவர்களில் ஒருவரான இமாம் ஹாகிம் அவர்கள் அந்தச் செய்தியின் இறுதியிலேயே குறிப்பிட்டுள்ளார்கள். இதைப் போன்று இமாம் தஹபீ அவர்கள் தீவானுல் லுஅஃபா (பாகம் :1,பக்கம் : 149) என்ற நூ-லி லும் இவர் யாரென அறியப்படாதவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
அபுல் அப்ரத் என்பவரை இப்னுஹிப்பான் அவர்கள் மட்டும் நம்பகமானவர் பட்டியி-லி ல் இடம்பெறச் செய்துள்ளார்கள். யாரென அறியப்படாதவர்களையும் நம்பகமானவர் பட்டியலி -ல் இடம்பெறச் செய்வது இப்னுஹிப்பான் அவர்களின் பழக்கமாகும். எனவே இமாம் இப்னுஹிப்பான் அவர்கள் ஒருவரை நம்பகமானவர் என்று கூறினால் அதை மட்டும் வைத்து அவரை நம்பகமானவர் என்று ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறுவதில்லை. எனவே இப்னுஹிப்பான் அவர்களின் இந்தக் கருத்து கணக்கில் கொள்ளத் தக்கதல்ல.
இந்தச் செய்தியை சிலர் ஆதாரப்பூர்வமானது என்று குறிப்பிட்டுள்ளார்கள். அதற்குக் காரணம் அபுல் அப்ரத் என்ற பெயரில் வேறு ஒரு நபர் இருந்துள்ளார்.
இன்னொருவரின் பெயர் அபுல் அப்ரத் அல்ஹாரிஸி இவருடைய உண்மையான பெயர் ஸியாத் என்பதாகும். இமாம் திர்மிதி அவர்களும் அபுல் அப்ரத் என்ற பெயரில் இருக்கும் இன்னொரு நபரை விளங்காமல் இச்செய்தியில் இடம்பெறும் யாரென தெரியாத அபுல் அப்ரத் என்பவரை யாரென அறியப்பட்ட அபுல் அப்ரத் அல்ஹாரிஸி என்று எண்ணிக் கொண்டார்கள்.      (துஹ்பத்துல் அஹ்வதீ, பாகம் : 2, பக்கம் :236)
அபுல் அப்ரத் அல்ஹாரிஸி என்பவரின் பெயர் ஸியாத் ஆகும் என்ற கருத்தை இமாம் தாரகுத்னீ,அபூஅஹ்மத் ஹாகிம், அபூபிஷ்ர் அத்தூலாபீ ஆகியோர் உட்பட பலர் கூறியுள்ளனர். மேலும் (குபா பள்ளியின் சிறப்பு தொடர்பான செய்தியில் இடம்பெற்றிருக்கும்) அபூஅப்ரத் என்பவர் யாரென அறியப்படாதவர் என்ற கருத்தே அறியப்பட்ட செய்தியாகும். இவரை பெயர் அறியப்படாதவர் பட்டிய-லி லேயே ஹாகிம், இப்னு அபிஹாத்தம், இப்னுஹிப்பான் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். இமாம் ஹாகிம் அவர்கள் இவரின் பெயர் மூஸா பின் சுலைம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். (துஹ்பத்துல் அஹ்வதீ, பாகம் : 2, பக்கம் :236)
எனவே இந்தச் செய்தி யாரென அறியப்படாதவர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதால் இச்செய்தி பலவீனம் அடைகிறது.
இதே கருத்தில் ஸஹ்ல் பின் ஹுனைஃப் (ர-லி ) அவர்கள் வழியாகவும் ஒரு செய்தி இடம்பெற்றுள்ளது.
15414 حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عِيسَى حَدَّثَنِي مُجَمِّعُ بْنُ يَعْقُوبَ الْأَنْصَارِيُّ بِقُبَاءٍ قَالَ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْكَرْمَانِيِّ قَالَ سَمِعْتُ أَبَا أُمَامَةَ بْنَ سَهْلِ بْنِ حُنَيْفٍ يَقُولُ قَالَ أَبِي قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ خَرَجَ حَتَّى يَأْتِيَ هَذَا الْمَسْجِدَ يَعْنِي مَسْجِدَ قُبَاءٍ فَيُصَلِّيَ فِيهِ كَانَ كَعَدْلِ عُمْرَةٍ حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ حَدَّثَنَا مُجَمِّعُ بْنُ يَعْقُوبَ الْأَنْصَارِيُّ عَنْ مُحَمَّدِ بْنِ سُلَيْمَانَ الْكَرْمَانِيِّ قَالَ سَمِعْتُ أَبَا أُمَامَةَ بْنَ سَهْلِ بْنِ حُنَيْفٍ فَذَكَرَ مِثْلَهُ قَالَ حَدَّثَنَا عَلِيُّ بْنُ بَحْرٍ قَالَ حَدَّثَنَا حَاتِمٌ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ الْكَرْمَانِيُّ فَذَكَرَ مَعْنَاهُ رواه احمد
யார் மஸ்ஜித் குபா என்ற பள்ளிக்காக சென்று அங்கு தொழுவாரோ அது உம்ராவிற்கு நிகரானதாக அமைந்துவிடும் என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
 அறிவிப்பவர் : ஸஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி -), நூல் :அஹ்மத் (15414)
இதே கருத்தில் ஹாகிம் (பாகம்:3, பக்கம் : 13), இப்னு ஹிப்பான் (பாகம் :4, பக்கம் : 507), அபுல் ஈமான் (பாகம் : 6, பக்கம் : 69) ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.
சில அறிவிப்புகளில் ஒருவர் மஸ்ஜித் குபா என்ற பள்ளிக்குச் சென்று நான்கு ரக்அத் தொழுதால் அது உம்ராவிற்கு நிகரானதாக அமைந்துவிடும் என்று இடம்பெற்றுள்ளது.
இச்செய்தியில் முஹம்மத் பின் சுலைமான் பின் கர்மானி என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரும் யாரென அறியப்படாதவராவார்.
முஹம்மத் பின் சுலைமான் பின் கர்மானி என்பவரல்லாமல் மூஸா பின் உபைத் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரும் இவருக்குப் பின்னால்
இடம்பெற்ற யூசுஃப் பின் தஹ்மான் என்பவரும் இடம்பெற்றுள்ளார். இவரும் பலவீனமானவரே. (நூல்: தாரீக் இப்னு மயீன், பாகம் :1, பக்கம் :199, மீஸானுல் இஃதிதால், பாகம்:4, பக்கம் : 467 )
குபா பள்ளியின் சிறப்பைப் பற்றி கஅப் பின் உஜ்ரா (ர-லி ) அவர்கள் வழியாகவும் இடம்பெற்றுள்ளது.
المعجم الكبير (19/ 146)  319 - حدثنا إبراهيم بن دحيم الدمشقي حدثني أبي ثنا يحيى بن يزيد بن عبد الملك النوفلي عن أبيه عن سعد بن إسحاق بن كعب بن عجرة عن أبيه عن جده : أن رسول الله صلى الله عليه و سلم قال : ( من توضأ فأسبغ الوضوء ثم عمد إلى مسجد قباء لا يريد غيره ولم يحمله على الغدو إلا الصلاة في مسجد قباء فصلى فيه أربع ركعات يقرأ في كل ركعة بأم القرآن كان له مثل أجر المعتمر إلى بيت الله )
யார் உளூச் செய்து பின்னர் குபா பள்ளிவாசலுக்காகவே சென்று அது தவிர வேறு எந்த எண்ணமும் இல்லாமல் ஒவ்வொரு ரக்அத்திலும் உம்முல் குர்ஆன் (சூரத்துல் பாத்திஹா) ஓதி நான்கு ரக்அத் தொழுதால் இறையில்லம் (கஅபத்துல்லாஹ்வில்) உம்ரா செய்த நன்மையை பெற்றவரைப் போன்றவராவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : கஅப் பின் உஜ்ரா (ர-லி )
நூல் : தப்ரானி- கபீர் (பாகம் : 19, பக்கம் : 146)
இச்செய்தியில் யஹ்யா பின் யஸீத் பின் அப்துல் மாலி க் அந்நவ்ஃபலி  என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரும் பலவீனமானவராவார்.
(நூல் : அல்ஜர்ரஹ் வத்தஃதீல், பாகம் :9, பக்கம் : 279)
குபா பள்ளிவாசலி ல் தொழுதால் உம்ரா செய்த நன்மை கிடைக்கும் என்ற கருத்தில் வரும் செய்தி அனைத்தும் பலவீனமானதாக இடம்பெற்றுள்ளது. அதே நேரத்தில் எந்தப் பள்ளிக்குச் சென்றாலும் இரண்டு ரக்அத் தொழ வேண்டும் என்ற நபிவழியின் அடிப்படையில் தொழுது கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரும் பள்ளிவாசலுக்குள் நுழைந்தால் உட்காருவதற்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழட்டும்.
 அறிவிப்பவர் : அபூகத்தாதா அஸ்ஸலமீ (ர-லி ), நூல் : புகாரி (444)
மேலும் நபி (ஸல்) அவர்கள் சனிக்கிழமை அன்று குபா பள்ளிவாசலுக்குச் சென்றுவருவார்கள் என்ற ஆதாரப்பூர்வமான செய்தி இடம்பெற்றுள்ளது.
அப்துல்லாஹ் பின் தீனார் அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்)
அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் குபா பள்ளிக்கு நடந்தும் வாகனத்திலும் வருவார்கள் என இப்னு உமர் (ர-லி ) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி -) நூல் : புகாரி (1193)

Monday, 11 February 2013

உள்ளரங்கு பயான்

 மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் கோலாலும்பூர் சார்பாக தெலு இன்தான் பகுதியில் 10.02.2013அன்று உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோ.யாசர் அரபாத் அவர்கள் மார்க்கத்தில் நுழைக்கப்பட்ட அனாச்சாரங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடும்பங்களுக்கு யார் சுன்னத் ஜமாஅத்,பெண்கள் பற்றிய பயான் DVDகள் வழங்கப்பட்டது.இதில் ஆண்களும்,பெண்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.